உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / துருக்கி நிறுவனத்துக்கு விமான நிலையங்களில் தடை: ஐகோர்ட்டில் ஸெலெபி மனு

துருக்கி நிறுவனத்துக்கு விமான நிலையங்களில் தடை: ஐகோர்ட்டில் ஸெலெபி மனு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்தியாவில் ஒன்பது விமான நிலையங்களில் பாதுகாப்பு மற்றும் பயணியர் சேவை பணி ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதை, சட்ட ரீதியாக எதிர்கொள்ளப்போவதாக, துருக்கியின் ஸெலெபி ஏவியேஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது.பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு, நம் பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்தபோது, பாக்.,குக்கு ஆதரவாக, ட்ரோன்கள் மற்றும் அவற்றை இயக்குவதற்கான ஆட்களை, மேற்கு ஆசிய நாடான துருக்கி வழங்கியது.மேலும், பாக்., பிரதமரை 'சகோதரர்' எனவும் உண்மையான நட்புக்கு உதாரணம் எனவும் துருக்கி அதிபர் எர்டோகன், கூறினார். துருக்கியின் இதுபோன்ற பகிரங்க பாக்., ஆதரவு நிலைப்பாட்டால், அந்த நாட்டுடன் அனைத்து உறவுகளையும் நம் நாடு துண்டித்து வருகிறது.அதன்படி, துருக்கியின் 'ஸெலெபி ஏவியேஷன்' நிறுவனத்துடனான அனைத்து ஒப்பந்தங்களையும், நம் சிவில் விமான போக்குவரத்து துறையின், 'சிவில் விமான பாதுகாப்பு பணியகம்' அதிரடியாக ரத்து செய்தது.இந்த நிறுவனம் வாயிலாக, டில்லி, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், ஆமதாபாத், மும்பை உட்பட 9 முக்கிய விமான நிலையங்களில் உயர் பாதுகாப்பு பணி, பயணியர் சேவை, சரக்குகள் கையாளுதல் போன்ற பணிகளை, கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக, துருக்கியை சேர்ந்த 'ஸெலெபி ஏவியேஷன்' செய்தது. இவற்றில் 10,000க்கும் அதிகமானோர் பணி புரிகின்றனர். இந்நிலையில், ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக அந்நிறுவனம் நேற்று தெரிவித்தது.மேலும், இந்திய விமான நிலையங்களில் பாதுகாப்பு, பயணியர் சேவை, சரக்குகள் கையாளுதல், விமானங்களில் பயணியர் ஏறுவதற்கான பாலம் உள்ளிட்ட கருவிகள் வழங்குதல் போன்ற பணிகளுக்கான வெவ்வேறு விதமான ஒப்பந்த காலமானது, வருகிற 2036 வரை உள்ளதாகவும் 'ஸெலெபி ஏவியேஷன்' குறிப்பிட்டுள்ளது.ஆனால், 'தேசத்தின் நலன் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு ஆகியவை முக்கியம் எனவும், இதில் பேச்சுக்கு இடமே இல்லை எனவும் நம் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

Murugan
மே 18, 2025 10:26

நாட்டு நலன்கருதி நீதிமன்றம் இதில் தலையிட முடியாது


SP
மே 17, 2025 20:03

காங்கிரஸால் இந்த நாட்டிற்கு எத்தனை அபாயம், நீதிமன்றங்கள் மூலம் ஏதாவது தடை ஏற்பட்டால் இனியும் தாமதிக்கக் கூடாது. நீதிமன்றங்களுக்கு மூக்கணாங்கயிறு போட்டே ஆக வேண்டும்.


அப்பாவி
மே 17, 2025 15:09

மும்பை, டில்லி க்கும் இஸ்தான்புல்லுக்கும் நடுவில் நான்ஸ்டாப் இண்டிகோ ஃப்ளைட் இன்னும் ஓடிக்கிட்டிருக்குது


Varuvel Devadas
மே 17, 2025 11:40

Our country is supreme. All citizens of our country should support the government in this regard. India should boycott not only Turkey and Pakistan but also China and other countries that support Pakistan. Whoever is aiding the countries against Indias interests should also be boycotted by considering our national interest.


babujee babu
மே 19, 2025 02:48

ஜெ சுவிஸ் உன் சிட்டோயேன் பிரான்çஐஸ் மிஸ் இந்தியன் ஒரிஜின். பிராவோ போர் ல டéசிசின் டே மோடிஜி கௌவெர்னேமென்ட். எலன்ஸ். நோஸ் ன்ஆச்சேடா ம்êமீ பச தேஸ் சந்திவிச் துரயூ. மேற்சிதே ரெஸ்பெக்ட்டர் ல்இéர்êடீ நஷனல். மேற்சி மோடி jeep.


Dharmavaan
மே 17, 2025 09:20

துணிச்சளான சரியான முடிவு .


DUBAI- Kovai Kalyana Raman
மே 17, 2025 08:00

சூப்பர் முடிவு , இந்தியா ல இல்லாத கம்பெனி யா , துருக்கி , பாக்கிஸ்தான், அஜர்பைஜான் , கம்பெனி கள் எதுவும் இந்தியா ல இருக்க கூடாது ..இந்தியன் யாரும் துர்கி , அஜர்பைஜான் கு tour போக கூடாது , தடை போட வேண்டும்


N Annamalai
மே 17, 2025 07:52

இருப்பதை பார்த்தால் அவர்கள் நினைத்து இருந்தால் எல்லாவித மாக இந்தியாவை அழித்து ஒழித்து இருக்கலாம் . இந்திய விமான நிலையங்கள் அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்து உள்ளது .கடந்த பதினான்கு ஆண்டுகளாக .இதை ஏன் அரசசு கவனத்தில் கொள்ளவில்லை .அதிலும் கமிஷனா ?


Gopal
மே 17, 2025 07:50

தேசத்தின் பாதுகாப்பு மிக அவசியம். அதுவும் துருக்கி போன்ற நாட்டை நம்பவே கூடாது.


Kasimani Baskaran
மே 17, 2025 06:32

டிரோன் கொடுத்தாலும் நாங்கள்தான் ஒப்பந்தம் போட்டிருக்கிறோம் - என்ன ஒரு தெனாவெட்டு. தேசத்தின் பாதுகாப்பு என்றால் தூக்கி வீசவேண்டியதுதான்.. நீதிமன்றம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்...


Sivasankaran Kannan
மே 17, 2025 07:36

நீதி மன்றங்கள் ஏதாவது மொக்கை போட்டால், பாராளுமன்ற பில் மூலம் இவர்களை துரத்தி அடிக்க வேண்டும்..


RAJ
மே 17, 2025 05:30

விளக்கெண்ணை. ... துருக்கி எப்பவும் பாக்கிஸ்தான் சப்போர்ட்ன்னு உலகம் அறிந்த ரகசியம்.. அவன்கிட்ட இந்த கான்ட்ராக்ட கொடுக்கலாமா... இப்போ முழிச்சுக்கிட்டது நல்லது... இதே மாதிரி உள்ளூர் துரோகிகளை எப்போது களையெடுக்க போறீங்க.....இவனுங்கள பாவம்னு விட்ட நாட்டுக்கு பேராபத்து ... கேன்சர்களை வெட்டிவிடுவது நல்லது.. . தேச துரோகிகள்..


Dharmavaan
மே 17, 2025 09:22

காண்ட்ராக்ட் கொடுத்தது காங்கிரஸ் ராகுல் அரசு மோடி அல்ல


முக்கிய வீடியோ