உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாகிஸ்தான் ஏவிய துருக்கி நாட்டு ட்ரோன்கள்; அடித்து நொறுக்கியது இந்திய ராணுவம்; தளபதி பெருமிதம்

பாகிஸ்தான் ஏவிய துருக்கி நாட்டு ட்ரோன்கள்; அடித்து நொறுக்கியது இந்திய ராணுவம்; தளபதி பெருமிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி:பாகிஸ்தான் ஏவிய துருக்கி நாட்டு ட்ரோன்கள் அனைத்தையும், நமது உள்நாட்டு தயாரிப்பு நவீன ஆயுதங்களின் உதவியுடன் சுட்டு வீழ்த்தினோம் என்று ராணுவ தளபதிகள் பெருமிதத்துடன் தெரிவித்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=7a60kop3&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்தியா- பாகிஸ்தான் இடையே இன்று (மே.12) பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று பகல் 12 மணிக்கு நடப்பதாக இருந்த பேச்சுவார்த்தை, மாலை 5 மணிக்கு மேல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், முப்படை தளபதிகள் கூட்டாக பேட்டி அளித்தனர்.ராணுவ நடவடிக்கைக்கான தலைமை தளபதி (டி.ஜி.எம்.ஓ.,) ராஜிவ் கய் கூறியதாவது: பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தான் ராணுவம் தலையீடு செய்தது பரிதாபத்திற்கு உரியது. அதனால் தான் நாங்கள் தக்க பதிலடி கொடுப்பது என்று முடிவு எடுத்தோம். கடந்த சில ஆண்டுகளாக பயங்கரவாதிகளின் தாக்குதல் முறை வெகுவாக மாறியிருக்கிறது.இவ்வாறு ராஜிவ் கய் கூறினார்.ஏர் மார்ஷல் பாரதி கூறியதாவது:பயங்கரவாதிகள் முகாம்கள் மீது மட்டுமே தாக்குதல் நடத்தினோம். பாகிஸ்தான் ராணுவம் மீது நாங்கள் தாக்குதல் நடத்த வில்லை. பயங்கரவாதிகளின் பிரச்னையை பாகிஸ்தான் ராணுவம் தங்களுடைய பிரச்னையாக மாற்றியுள்ளது.நமது வான்வழி அமைப்பு பாதுகாப்பானது சுவர் போன்றது. அவற்றை அகற்றுவது எளிதானது அல்ல.பாகிஸ்தான் ராணுவம் நடத்திய ட்ரோன் தாக்குதலுக்கு, பதில் தாக்குதல் நடத்த வேண்டியதாயிற்று. பாகிஸ்தான் அனுப்பிய அனைத்து ட்ரோன்களையும் அழித்துவிட்டோம். நவீன ரக ஆயுதங்களை பயன்படுத்தி அனைத்து ட்ரோன்களையும் அழித்தோம்.மத்திய அரசின் துணையால் நாங்கள் வலிமை பெற்றோம். மத்திய அரசு நிதி ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் எங்களுக்கு துணை நின்றது நாங்கள் தாக்குதல் நடத்தியது.பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்கள் அனைத்தும் துருக்கி நாட்டில் தயாரிக்கப்பட்டவை.எந்த நாட்டிலிருந்து தயாரிக்கப்பட்டவையாக இருந்தாலும் அதை அழிக்கும் வண்ணம் நமது நவீன தொழில்நுட்ப திறன் உள்ளது.பாகிஸ்தான் ஏவிய சீனாவின் அதிநவீன போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. வான் தாக்குதலில் நமக்கு சிறிய அளவு பாதிப்பு; பாகிஸ்தானுக்கு பெரிய சேதத்தை ஏற்படுத்தியது.ரஹீம்யார் கான் விமானப்படை தளத்தில் இந்தியா நடத்தியதாக்குதலில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டது.வைஸ் அட்மிரல் பிரமோத் கூறியதாவது: இரவு, பகல் பாராமல் கடற்படை அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். அனைத்து தளங்களில் இருந்து வரும் தாக்குதல்களையும் முறியடித்துள்ளோம். எதிரிபடைகளை தாக்கி நமது படை வல்லமையை நிலைநிறுத்தி உள்ளோம். முப்படைகள் அணி வகுத்து ஒருங்கிணைப்பு இருந்ததால், எதிரி படைகள் நம் அருகில் நெருங்கக்கூட முடியவில்லை. பாகிஸ்தான் ஏவிய அனைத்து ட்ரோன்களும் அழிக்கப்பட்டன.எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டையும், சர்வதேச எல்லையையும் தாண்டாமல் இந்தியா தாக்குதலை நடத்தியதுபாகிஸ்தானின் அத்துமீறலை எதிர்கொள்ள இந்தியாவின் அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன.இவ்வாறு முப்படை தளபதிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Rathna
மே 12, 2025 18:25

இது இந்தியாவை உலக ஆயுத சந்தையில் ஒரு சிறந்த நாடாக நிற்க செய்யும். நமது ஆத்ம நிற்பர் அல்லது ஆயுத சுய சார்பு என்பதை பற்றி பிரதமர் பேசும் போது சில எதிர்கட்சிகள் கேலி செய்தது. ஆனால் பிரதமர் மிக தெளிவாக இருந்தார். பல MSME கள், ட்ரொன் கம்பெனிகள் பெங்களூரு, புனே, டெல்லி ஆகிய நகரங்களில் முளைத்தது. அவை ராணுவத்தோடு கூட்டு சேர்ந்ததோடு மட்டும் இல்லாமல் ட்ரான் டெக்னாலஜியில் முன்னோடியாக இருக்கும் இஸ்ரேலுடன் கூட்டு சேர்ந்து ராணுவத்திற்காக ஆயுதங்களை வழங்கியது. தரமில்லாத சீன மற்றும் துருக்கிய கம்பெனிகளுக்கு முன்னால் இந்தியா தலை நிமிர்ந்து நிற்கும். உத்திரபிரதேச முதல்வர் யோகி அவர்கள் ப்ரஹ்மோஸ் ஆலை அமைக்க போகிறோம் என்று சொன்னது மட்டும் இல்லாமல், 2 ஆண்டுகளில் ப்ரோமோஸ் தொழிற்சாலையை அமைத்தது இந்த அரசாங்கத்தின் திடமான முடிவை காட்டுகிறது.


Apposthalan samlin
மே 12, 2025 18:08

இந்த போரில் பாக் ,சீன ,அரபு ஊடங்கங்கள் பாக் கை ஓங்கி இருந்தது என்று சொல்லுகிறார்கள் நம் இந்தியா ஊடங்கங்கள் இந்தியா கை ஓங்கி இருந்தது என்று சொல்லுகிறார்கள் எதை நம்ப ?


SANKAR
மே 12, 2025 18:53

first call for price came from DGMO ot Pak.This shows truth


SANKAR
மே 12, 2025 17:43

I am curious to know cost of each drone and approximate number of drones shot down by us.any one with knowledge please post


chinnamanibalan
மே 12, 2025 17:24

துருக்கியில் பூகம்பம் நிகழ்ந்த போது, இந்தியா மனிதாபிமான பண்புடன் அங்கு விரைந்து சென்று, அனைத்து உதவிகளையும் செய்தது. ஆனால் இந்தியா செய்த நன்றியை மறந்தது துருக்கி. பங்களா தேஷும் கூட அத்தகைய பண்பை கொண்டதே


தர்மராஜ் தங்கரத்தினம்
மே 12, 2025 17:58

மதம் பிணைக்கிறது .....


RAMAKRISHNAN NATESAN
மே 12, 2025 17:06

இந்தியா எப்போதும் துருக்கியை மதித்து வருகிறது. உண்மையில், வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களின் போது நிவாரணப் பொருட்களை அனுப்புவதன் மூலமோ அல்லது ஜி20 போன்ற உச்சிமாநாடுகளுக்கு துருக்கிய பிரதமருக்கு அழைப்பு விடுப்பதன் மூலமோ துருக்கியை ஆதரிக்க நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளோம். இருதரப்பு உறவுகள் மற்றும் வர்த்தக உறவுகளை நாங்கள் பராமரித்து வருகிறோம். 2022 ஆம் ஆண்டில் மட்டும், 5.7 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள் துருக்கிக்கு விஜயம் செய்து, அவர்களின் பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளனர். "சகோதரத்துவம்" என்ற பெயரில் பாகிஸ்தானுக்குச் சென்று ஒற்றுமையை வெளிப்படுத்துவது பொருத்தமானது என்று துருக்கியின் வெளியுறவு அமைச்சர் கண்டறிந்தது மிகவும் கவலையளிக்கிறது. ஆனால், இந்தியா பயங்கரவாதத்தை தீவிரமாக எதிர்த்துப் போராடும் போது, ​​இது என்ன வகையான சகோதரத்துவம்? ஆபரேஷன் சிந்தூர் என்பது வெறும் இராணுவ நடவடிக்கை அல்ல, அது பிரதமரின் தலைமையில் நடத்தப்பட்ட ஒரு தேசிய தொலைநோக்குப் பார்வையை உணர்ந்து, இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை இடையே முழு ஒருங்கிணைப்புடன் செயல்படுத்தப்பட்டது. இந்த நடவடிக்கை ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடையவை உட்பட பல பயங்கரவாத மையங்களை செயலிழக்கச் செய்தது... இந்தச் சூழலில், துருக்கி மற்றும் அஜர்பைஜான் போன்ற நாடுகள் பாகிஸ்தான் போன்ற பயங்கரவாத அமைப்பு நாடுகளை ஆதரிப்பது கவலையளிக்கிறது.


ஆரூர் ரங்
மே 12, 2025 17:03

அந்தக் காலத்திலேயே இதுபோன்ற பாடம் கற்பித்திருந்தால் இன்னும் நல்லா இருந்திருப்போம்


Ambedkumar
மே 12, 2025 16:40

சீனாவின் அதி நவீன போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது - ஜெய் ஹிந்த்


தர்மராஜ் தங்கரத்தினம்
மே 12, 2025 15:51

பிப்ரவரி 2023 இல் ஏற்பட்ட பேரழிவு தரும் நிலநடுக்கத்திற்குப் பிறகு துருக்கிக்கு உதவ இந்தியா "ஆபரேஷன் தோஸ்த்"-ஐத் தொடங்கியது. தேசிய பேரிடர் மீட்புப் படை NDRF குழுக்கள், தேடுதல் மற்றும் மீட்பு மோப்ப நாய் படைகள், மருத்துவக் குழுக்கள், கள மருத்துவமனைகள், மருந்துகள், நிவாரணப் பொருட்கள் மற்றும் சிறப்பு உபகரணங்கள் உட்பட பல உதவிகளை இந்தியா அனுப்பியது.


சமீபத்திய செய்தி