உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஏ.டி.எம்., திருட்டு முயற்சி ஈடுபட்ட இருவர் கைது

ஏ.டி.எம்., திருட்டு முயற்சி ஈடுபட்ட இருவர் கைது

கோவிந்த்புரி: ஏ.டி.எம்., திருட்டு முயற்சி, மொபைல் ஷோரூம்களில் திருட்டு ஆகிய வழக்குகளில் தேடப்பட்டு வந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.சாவ்லா, காஜிப்பூர், பரிதாபாத் ஆகிய இடங்களில் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் அடுத்தடுத்து மொபைல் ஷோரூம்களை உடைத்து 1.8 கோடி மதிப்புள்ள அலைபேசிகள் திருடு போயின. காஜிப்பூர் துணிக்கடையில் கொள்ளை, துவாரகாவில் ஏ.டி.எம்., திருட்டு முயற்சி உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.இந்த நிலையில், பர்மான், ஆசிப் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். மேற்கண்ட திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டது தெரிய வந்தது.பர்மான், 2004 முதல் குற்றங்களில் ஈடுபட்டு வந்ததும் டில்லி, உ.பி., ராஜஸ்தான், ஹரியானா ஆகிய மாநிலங்களில் கொலை, கொலை முயற்சி, கொள்ளை உள்ளிட்ட 25 வழக்குகளில் தேடப்பட்டு வரும் குற்றவாளி என்பது விசாரணையில் தெரிய வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ