ரூ.20 லட்சம் வெள்ளி திருடிய இருவர் கைது
ஹலசூரு கேட் : வெள்ளி பட்டறையில் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான 19 கிலோ வெள்ளி திருடிய இருவர் கைது செய்யப்பட்டனர்.பெங்களூரு, கப்பன்பேட்டில் வெள்ளி நகை செய்யும் பட்டறை நடத்தி வருபவர் செந்தில். இவரும், தர்ஷன் என்பவரும் தொழில் கூட்டாளிகளாக இருந்தனர். பண விவகாரத்தில் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது.கடந்த மாதம் 23ம் தேதி செந்திலின் நகை பட்டறைக்கு தர்ஷனும், இன்னொருவரும் சென்றனர். ஊழியரின் கவனத்தை திசை திருப்பி, பட்டறையில் இருந்த19 கிலோ வெள்ளி பொருட்களை திருடிச் சென்றனர்.இதுகுறித்து ஹலசூரு கேட் போலீசில் செந்தில் புகார் செய்தார். பட்டறையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தபோது, தர்ஷனும், அவருடன் வந்தவரும் திருடிச் சென்றது தெரிய வந்தது.தமிழகத்தின் கிருஷ்ணகிரியில் பதுங்கியிருந்த தர்ஷனையும், அவருடன் வந்த கணேஷ் என்பவரையும் நேற்று முன்தினம் ஹலசூரு கேட் போலீசார் கைது செய்தனர்.அவர்களிடமிருந்து திருடப்பட்ட வெள்ளி பொருட்கள் மீட்கப்பட்டன.