உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மூணாறில் இரு நாட்கள் நடந்த தவளை பேரவை மூன்று மாநில நிர்வாகிகள் பங்கேற்பு

மூணாறில் இரு நாட்கள் நடந்த தவளை பேரவை மூன்று மாநில நிர்வாகிகள் பங்கேற்பு

மூணாறு: கேரள மாநிலம் மூணாறில் தவளைகள் குறித்து அறியும் வகை யிலான இரண்டு நாட்கள் தவளை பேரவை நடந்தது. இந்திய வனவிலங்கு அறக்கட்டளையின் நீர், நிலம் வாழ்வன மீட்பு திட்டத்தின் ஒரு பகுதியாக மூணாறில் மூன்றாவது தவளை பேரவை நடந்தது. அதனை கே.டி.எச்.பி. கம்பெனி, ஹைரேஞ் வனவிலங்கு மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு சங்கம் ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்தனர். கேரளா, தமிழகம், கர் நாடக மாநிலங்களை சேர்ந்த 32 பேர் பேரவையில் பங்கேற்றனர். அவர்களுக்கு மூணாறில் வாழும் உயிரினங்கள், அவற்றை பாதுகாப்பதன் அவசியம், எவ்வாறு அடையாளம் காண்பது குறித்த வகுப்புகளை மூணாறு வனவிலங்கு பாதுகாவலர் ஹரிகிருஷ்ணன், பல்லுயிர் நிபுணர்கள் ஜோமி அகஸ்டின், சுஜித், கோபாலன் உட்பட பலர் வகுப்புகள் நடத்தினர். அதன்பின் பேரவையை சேர்ந்தவர்கள் மூணாறிலும், சுற்றிலும் உள்ள எஸ்டேட் பகுதிகளிலும் தவளைகள் குறித்து ஆய்வு நடத்தினர். அதில் கடலார் சதுப்பு நில தவளை, ஜெயராம் புஷ் தவளை, மூணாறு புஷ் தவளை, ஆனமலை பறக்கும் தவளை உட்பட 23 வகை தவளைகளை பார்த்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை