உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இரு பிரிவினர் மோதல்: மணிப்பூரில் ஒருவர் பலி

இரு பிரிவினர் மோதல்: மணிப்பூரில் ஒருவர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இம்பால்: மணிப்பூரில் ஒரு கிராமத்தைச் சேர்ந்த இரு பிரிவு தன்னார்வலர்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ஒருவர் கொல்லப்பட்டார்; மூவர் காயமடைந்தனர்.வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், பெரும்பான்மையாக வசிக்கும் மெய்டி இனத்தவரை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கு, கூகி பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக கடந்த ஆண்டு மே 3ல் இனக்கலவரம் வெடித்தது. தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் மணிப்பூரில் இயல்பு நிலை திரும்பி வந்தது. நேற்று மீண்டும் வன்முறை வெடித்தது. இங்குள்ள இம்பால் மேற்கு மாவட்டத்தின் கோத்ரூக் கிராமத்தின் மீது, அண்டை மாவட்டமான காங்க்போக்பி மாவட்டத்தின் மலைப்பகுதியில் இருந்து, 12க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு அந்த கிராம தன்னார்வலர்களும் பதிலடி கொடுத்தனர். இந்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார்; மூவர் காயம் அடைந்தனர். இந்த சண்டை அண்டை கிராமங்களான கதங்க்பான்ட் மற்றும் செஞ்ஜம் சிராங் ஆகியவற்றுக்கும் பரவியது. ஒருவர் கொல்லப்பட்டதை கண்டித்து பழங்குடி அமைப்பு நேற்று, 12 மணி நேர கடை அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்ததால் பதற்றம் நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

தாமரை மலர்கிறது
ஏப் 29, 2024 03:15

காங்கிரஸ் கட்சி பிரச்சாரம் செய்ததன் விளைவு மீண்டும் மணிப்பூர் பற்றி எரிகிறது காங்கிரஸ் கட்சியை தடை செய்வது அமைதிக்கு வழிவகுக்கும்


மேலும் செய்திகள்