உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இரு தொழிற்சாலை பஸ்கள் மோதல்: 20 பேர் காயம்

இரு தொழிற்சாலை பஸ்கள் மோதல்: 20 பேர் காயம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், சின்னையங்குளம் பகுதியில், இரு வேறு தொழிற்சாலை பேருந்துகள் மோதிக் கொண்டதில், 20 பேர் காயமடைந்தனர். ஒரகடம் பகுதியில் செயல்படும் தனியார் தொழிற்சாலையின், ஒப்பந்த பேருந்து, தொழிற்சாலையில் பணி முடிந்து வீடு திரும்பும் ஊழியர்களை, ஏற்றிக் கொண்டு, காஞ்சிபுரம் சின்னையங்குளம் பகுதிக்கு, நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு வந்தது. அப்போது, திருவண்ணாமலை மாவட்டம், துாசியில் இருந்து, ஸ்ரீபெரும்புதுார் தனியார் தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிக் கொண்டு, தனியார் ஒப்பந்த பேருந்து எதிரே வந்துள்ளது. அப்போது, இரு பேருந்துகளும் மோதிக் கொண்டன. இதில், 20 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை