கார் - பைக் - ரிக் ஷா மோதி இருவர் காயம்
புதுடில்லி: கார், பைக் மற்றும் மின்சார ரிக் ஷா மோதி இருவர் காயம் அடைந்தனர். புதுடில்லி பேகம்பூர் சிக்னல் அருகே நேற்று காலை, ஆதிதி,22, என்பவர் ஓட்டி வந்த சொகுசு கார், பைக் மீது மோதியது. உடனே சற்று வேகமாக சென்ற பைக் தனக்கு முன்னாள் சென்ற மின்சார ரிக் ஷா மீது மோதியது. பைக் ஓட்டி வந்த மனோஜ் மற்றும் -ரிக் ஷா டிரைவர் ராஜு,42, ஆகிய இருவரும் காயம் அடைந்தனர். காயம் அடைந்த இருவரும், 22வது செக்டாரில் உள்ள மஹராஜா அக்ராசென் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிகின்றனர்.