உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சாலை விபத்தில் இருவர் பலி

சாலை விபத்தில் இருவர் பலி

புதுடில்லி: ஸ்கூட்டர் மீது கான்கிரீட் கலவை லாரி மோதியதில் இருவர் உயிரிழந்தனர். தப்பி ஓடிய லாரி டிரைவரை போலீசார் தேடுகின்றனர். வடகிழக்கு டில்லி, கஜூரி காஸ், பழைய போலீஸ் ஸ்டேஷன் அருகே, நேற்று அதிகாலை, 12:00 மணிக்கு, ஸ்கூட்டர் மீது கான்கிரீட் கலவை லாரி மோதியது. ஸ்கூட்டரில் சென்ற இருவர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார், காயமடைந்த இருவரையும் மீட்டு அரசு ஜக் பிரவேஷ் சந்திரா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர்கள், இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதை உறுதி செய்தனர். உயிரிழந்தவர்கள் சந்தோஷ்,30, பவன்,33, என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இரு உடல்களையும் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிய போலீசார், வழக்குப் பதிவு செய்து, தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி