உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இரட்டை இலை சின்ன வழக்கு: தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ்

இரட்டை இலை சின்ன வழக்கு: தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தேர்தல் ஆணையம் பதிலளிக்க டில்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி, டில்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், 'ராஜ்யசபாவுக்கு தமிழகத்தில் இருந்து காலியான ஆறு எம்.பி., பதவிகளுக்கான தேர்தலை, தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதில், அ.தி.மு.க., பெயரில் பழனிசாமி வழங்கிய விண்ணப்பங்களை தேர்தல் ஆணையம் ஏற்கக் கூடாது என கடிதம் கொடுத்திருந்தேன். டில்லி உயர் நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கை காரணம் காட்டி, அந்த கடிதத்தை தேர்தல் ஆணையம் கருத்தில் கொள்ளவில்லை. எனவே தேர்தல் ஆணையத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் கூறி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் தொடர்ந்தார். இந்த மனு, டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி அமித் சர்மா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது புகழேந்தி தரப்பு வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இது தொடர்பாக தேர்தல் ஆணையம் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து, வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.- டில்லி சிறப்பு நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

ஆரூர் ரங்
ஆக 30, 2025 11:30

எம்ஜிஆர் உருவாக்கிய உட்கட்சி விதிகளின்படி அனைத்துத் தொண்டர்களும் சேர்ந்துதான் பொதுச் செயலாளர் மற்றும் நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க முடியும். எங்கே எல்லாத் தொண்டர்களையும் ஒரே நாளில் ஒரே இடத்திற்கு வரவழையுங்கள் பார்ப்போம். ஆக தனக்குப்பின் கட்சியே இருக்கக் கூடாது என்றுதான் எம்ஜிஆர் திட்டமிட்டிருப்பார்.


Gnana Subramani
ஆக 30, 2025 10:22

பிஜேபி தலைமையில் ஆட்சி. பிஜேபி கட்சிக்காரர் தான் முதல்வர் வேட்பாளர் என்று எடப்பாடி ஒத்துக் கொண்டால் உடனே ரெட்டை இலை கிடைக்கும். இல்லை என்றால் தேர்தல் ஆணையம். வழக்கை இழுத்துக் கொண்டே இருக்கும்


GMM
ஆக 30, 2025 08:16

பழனி சாமிக்கு இருப்பது போல் உறுப்பினர்கள், தொண்டர்கள் ஆதரவு புகழேந்திக்கு இல்லை. புகழேந்தி வழக்கை எதன் அடிப்படையில் நீதிபதி ஏற்று, அரசியல் சாசன தேர்தல் ஆணையம் பதில் கூற நோட்டீஸ் அனுப்ப முடியும் என்று தெரியவில்லை. மேலும் தொடர் வழக்குகளை தேர்தல் ஆணையம் எதிர் கொள்ளும் போது, அதன் பணிகள் தொய்வு ஏற்படும். மனித தவறுகள் அதிகரிக்கும். சின்னம் வழங்குவது, நிராகரிப்பு தேர்தல் ஆணையம் பணியை நீதிபதி மேற்கொள்ள முடியாது. நீதிபதிகள் நிர்வாக அதிகாரத்தையும் கைபற்றி விட்டனர். ?


Oviya Vijay
ஆக 30, 2025 07:11

தினத்தந்தியில் வெளியான கன்னித்தீவு கதை முடியுற வரைக்கும் கடன் கிடையாது என்று ஒரு சில கடைகளில் வேடிக்கையாக எழுதி வைத்திருப்பதைப் பார்க்க முடியும்... அது போல் இரட்டை இலை பஞ்சாயத்தும் ஒரு எண்டு இல்லாமல் போயிக் கொண்டே தான் இருக்கப்போகிறது...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை