உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தலைமறைவான பிரபல ராப் பாடகர் வேடன்; அடுத்தடுத்து குவியும் பாலியல் புகார்கள்

தலைமறைவான பிரபல ராப் பாடகர் வேடன்; அடுத்தடுத்து குவியும் பாலியல் புகார்கள்

திருவனந்தபுரம்: கேரளாவில் பிரபல ராப் பாடகர் வேடன் மீது ஏற்கனவே பெண் டாக்டர் ஒருவர் பாலியல் புகார் அளித்த நிலையில், மேலும் இரு பெண்கள் முதல்வரிடமே நேரடியாக புகார் அளித்துள்ளனர். பிரபல ராப் பாடகரான வேடன் என்று அழைக்கப்படும் ஹிரன்தாஸ் முரளி என்பவர் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் இடம்பெற்றுள்ள குத்தந்திரம் பாடலின் மூலம் மிகவும் பிரபலமானார். அடக்குமுறைகளுக்கு எதிரான பாடல்களின் மூலம், தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்.அண்மையில் புலி பல் சர்ச்சையில் சிக்கிய இவர் மீது பெண் டாக்டர் ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார். திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 2021ம் ஆண்டு முதல் 2023 வரையில் தொடர்ச்சியாக பலமுறை பலாத்காரம் செய்த வேடன், தன்னிடம் பணமோசடியும் செய்ததாக குற்றம்சாட்டியிருந்தார். இது தொடர்பான வழக்கில் வேடன் தற்போது தலைமறைவாக இருந்து வரும் நிலையில், மேலும் இரு பெண்கள் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளனர். கடந்த 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் தங்களை ஏமாற்றியதாக முதல்வர் பினராயி விஜயன் மற்றும் டிஜிபியுடன் புகார் அளித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

நிக்கோல்தாம்சன்
ஆக 18, 2025 12:47

பினராயின் பெண் வீட்டில் இருக்கலாம்


vee srikanth
ஆக 18, 2025 12:21

2021 வருடம் நடந்தது - இப்ப சொல்றாங்க - மருத்துவர் வேற குருமா வேற அவர்கிட்ட பேசி இருக்கார் என்னம்மா நடக்குது ??


samvijayv
ஆக 18, 2025 10:38

அத்துமீறு, திமிரி ஏழு, திருப்பி அடி., இதை தற்பொழுது பெண்களுக்கு கூறி வளர்க்க வேண்டும் ஏன்னெனில் சிறுத்தைகளின் நடமாட்டம் சற்று அதிகமாக இருக்கு.


நாஞ்சில் நாடோடி
ஆக 18, 2025 09:42

சிறுத்தையையிடம் சிக்கியவன் மீள முடியாது ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை