உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லி, ஹரியானாவில் இருவர் தற்கொலை

டில்லி, ஹரியானாவில் இருவர் தற்கொலை

புதுடில்லி:டில்லி மற்றும் ஹரியானாவில் இரண்டு இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.தெற்கு டில்லி சங்கம் விஹாரில் வசித்தவர் ரோஹித் சிங், 25. தச்சர். கடந்த மூன்று நாட்களுக்கு முன், மனைவியுடன் தகராறு ஏற்பட்டது. அவர் மனைவி இரண்டு குழந்தைகளுடன் தன் பெற்றோர் வீட்டுக்குச் சென்றார். அதைத் தொடர்ந்து, மன உளைச்சலுடன் இருந்த ரோஹித் சிங், தன் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த போலீசார், உடலை மீட்டு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.அதேபோல, ஹரியானா மாநிலம் பரிதாபாத் மாவட்டம் சூரஜ்குண்ட் கிரீன்பீல்டு காலனியில் வசித்தவர் மோனுசிங், 23. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அதற்கு முன், மொபைல் போனில் அவர் எடுத்துள்ள வீடியோவில், “என் சொந்த விருப்பப்படி சுட்டுத் தற்கொலை செய்து கொள்கிறேன்,” என, கூறியுள்ளார்.தகவல் அறிந்து வந்த போலீசார், உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். துப்பாக்கி கைப்பற்றபட்டுள்ளது. விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை