உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீரில் பயங்கரவாதிகள் 2 பேர் கைது; ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் 2 பேர் கைது; ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் பட்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், தற்போது தெற்கு காஷ்மீர் பகுதியில் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து, ஜம்மு காஷ்மீர் போலீசார் மற்றும் இந்திய ராணுவத்தினர் கூட்டாக இணைந்து, பயங்கரவாதிகளை தேடி வருகின்றனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=zabzxg5d&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், இன்று பட்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. அதேபோல், நேற்று பூஞ்ச் மாவட்டத்தின் சுரன்கோட் பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடம் கண்டுபிடித்து அழிக்கப்பட்டது. அந்த இடத்தில் 5 வெடிகுண்டுகளும், 2 ரேடியோ செட்களும், 3 போர்வைகளும் கண்டெடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Anbuselvan
மே 06, 2025 13:32

அதெல்லாம் சரி. பெகல்காமில் சுட்டவர்களை சீக்கிரம் பிடித்து பொதுமக்கள் மற்றும் பாதிக்கப் பட்டவர்கள் முன்னிலையில் தூக்கிலிடுங்கள். வேண்டாம் வேண்டாம் நம்ம நீதிபதிகள் ஜனாதிபதிக்கு முடிவெடுக்க காலக்கெடு விதித்தவர்கள், அவர்களுக்கு ஒரு வழக்கை முடிப்பதற்கு காலக்கெடு கிடையாது. ஆகையால் இதை நீதி நேர்மை என்றெல்லாம் நீதிமன்றம் மூலம் அணுகினால் குறைந்த பட்சம் பத்து பதினோரு வருடங்கள் ஆகிவிடும். அதற்கு பிறகு தூக்கு மனிப்புன்னு ஒரு பத்து வருஷம் ஓடி விடும். ஆகையால் அவர்களை 26 முறை சுட்டு போட்டு தள்ளுங்கள். ராணுவம் நிச்சயமாக அதை செய்ய வேண்டும்.


naranam
மே 06, 2025 13:28

இரண்டே பேர் தானா? முதலில் அந்த அப்துல்லா முஃப்தி சையீது குடும்பத்திலிருந்து தொடங்கி அனைவரையும் சிறையில் அடைத்து வைக்க வேண்டும்.


Ramesh Sargam
மே 06, 2025 12:37

பயங்கரவாதிகளைப் பொறுத்தவரையில், கைது என்பது வேஸ்ட். என்கவுண்டர் என்பது சிறப்பான செயல்.


அப்பாவி
மே 06, 2025 12:06

இத்தனை ஆயுதங்களை கோட்டை உட்டுட்டு காஷ்மீரில் அமை திரும்பிடிச்சுன்னு பேசினாங்க.


N Sasikumar Yadhav
மே 06, 2025 12:55

உங்கள மாதிரியான ஆட்கள் காஷ்மீரில் அதிகம் . பிச்சையெடுக்கிற பாகிஸ்தானிய பயங்கரவாத இசுலாமிய கும்பல்களுக்கு மதத்தின்பால் ஆதரவாக இருக்கிற ஆட்கள் அதிகம்


தத்வமசி
மே 06, 2025 11:33

உலகில் பல நாடுகளில் மக்கள் சோறு இல்லாமல் நீர் இல்லாமல் தவிக்கிறார்கள். அதற்கெல்லாம் செலவிடுவதற்கு இந்த குழுக்களிடம் பணம் இல்லை. உலகில் கையேந்துகிறார்கள். ஆனால் ஆயுதங்களும், வெடி மருந்துகளும் இவர்களுக்கு ஓசியிலா கிடைக்கிறது ?


Arul
மே 06, 2025 11:29

எனக்கு ஒன்னும் புரியல ..


சமீபத்திய செய்தி