உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இரு போர் கப்பல்கள் கடற்படையிடம் ஒப்படைப்பு

இரு போர் கப்பல்கள் கடற்படையிடம் ஒப்படைப்பு

மும்பை: மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில் செயல்படும் பொதுத்துறை கப்பல் கட்டும் நிறுவனமான மசாகன், நம் நாட்டு கடற்படைக்கு ஐ.என்.எஸ்., நீலகிரி மற்றும் ஐ.என்.எஸ்., சூரத் ஆகிய இரு போர்க்கப்பல்களை தயாரித்து ஒப்படைத்தது.இதில், ஐ.என்.எஸ்., நீலகிரி, எதிரிகளின் ரேடாரில் இருந்து மறைந்து செயல்படக் கூடியது. ஐ.என்.எஸ்., சூரத் கப்பல் எதிரிகளின் ஏவுகணையை தாக்கி அழிக்கக் கூடியது. தற்போது சோதனை ஓட்டத்தில் உள்ள இந்த இரு கப்பல்களும் விரைவில் கடற்படையில் இணைக்கப்படும்.மசாகன் கப்பல் கட்டும் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த போர்க்கப்பல்களை, கடற்படையின் போர்க் கப்பல் வடிவமைப்பு துறை வடிவமைத்தது. கப்பல் கட்டும் பணியை மும்பை போர்க்கப்பல் மேற்பார்வைக் குழு கண்காணித்தது.இந்த இரு கப்பல்கள் குறித்து மசாகன் நிறுவனம் கூறியுள்ளதாவது:ஐ.என்.எஸ்., நீலகிரி கப்பலின் தோற்றம் ரேடாரில் இருந்து மறைந்து செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் அதற்கான நவீன தொழில்நுட்பங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.அது மட்டுமின்றி எதிரிகளின் நீர்மூழ்கி கப்பல், கடலின் மேற்பரப்பில் வரும் கப்பல், கப்பலை தாக்கும் ஏவுகணை மற்றும் போர் விமானங்கள் ஆகியவற்றை தாக்கும் வகையில் ஆயுதங்கள் மற்றும் சென்சார்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.ஐ.என்.எஸ்., சூரத் போர் கப்பலில் நிலத்தை குறிவைக்கும் பிரம்மோஸ் ஏவுகணை, வானில் உள்ள இலக்கை குறிவைக்கும் பாரக் 8 ஏவுகணை மற்றும் நீர்மூழ்கி கப்பல்களை அழிக்கும் ஏவுகணைகளை கொண்டிருக்கும். மேலும், இதில் பல்வேறு வகையான ராக்கெட் லாஞ்சர்களை ஏவும் வசதியும் உண்டு.இவ்வாறு அந்த நிறுவனம் கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !