உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போலி கல்வி நிறுவனங்கள் யு.ஜி.சி., எச்சரிக்கை

போலி கல்வி நிறுவனங்கள் யு.ஜி.சி., எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பல்கலை மானிய குழுவான யு.ஜி.சி.,யின் செயலர் மணிஷ் ஜோஷி வெளியிட்டுள்ள அறிவிப்பு:யு.ஜி.சி., சட்டப்படி, யு.ஜி.சி.,யால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் வழங்கும் படிப்பும், சான்றிதழும் மட்டுமே, உயர் கல்விக்கும், வேலை வாய்ப்புக்கும் தகுதியானவை. ஆனால், நாட்டில் அங்கீகாரம் பெறாத போலியான கல்வி நிறுவனங்கள், கவர்ச்சியாக விளம்பரம் செய்து மாணவர்களை சேர்த்து, பட்டங்களை வழங்குகின்றன. இதனால், மாணவர்களின் முன்னேற்றமும், பெற்றோரின் பொருளாதாரமும் பாதிக்கப்படுகிறது.அதனால், போலியான நிறுவனங்கள், யு.ஜி.சி.,யால் அடையாளம் காணப்பட்டு, அவற்றின் பட்டியல், www.ugc.ac.inஎன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. பட்டப்படிப்புகளில் சேரும் முன், மாணவர்களும், பெற்றோரும் அவற்றை அறிந்து, பாதுகாப்புடன் செயல்பட வேண்டும். போலி கல்வி நிறுவனங்கள் குறித்து தகவல் தெரிந்தால், gmail.comஎன்ற மின்னஞ்சலில் தெரிவிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

अप्पावी
மார் 21, 2025 07:14

போலி நிறுவனங்களை களையெடுக்காமல் அவிங்க கிட்டே ஜி.எஸ்.டி மட்டும் வசூல் பண்ணுவோம் ஹை. அங்கே டுபாக்கூர் வகை பாக்குறவங்களையும் ரெண்டு கோடி வேலைவாய்ப்பில் சேத்துருவோம் ஹை.


பெரிய ராசு
மார் 21, 2025 06:25

உயர்கல்விக்கு எந்த விதமான நிதி உதவி செய்வது கிடையாது


c.mohanraj raj
மார் 21, 2025 01:28

இது என்ன நிலைப்பாடு என்றே தெரியவில்லை . போலி மருந்துகள் 25000 கோடிக்கு புலங்குகிறது என்பார்கள் ஆனால் தடுக்க மாட்டார்கள் போலி மருத்துவர்கள் 25000 பேர் உள்ளார்கள் என்பார்கள் ஆனால் தடுக்க மாட்டார்கள் போலி பல்கலைக்கழகங்கள் இத்தனை உள்ளது என்பார்கள் ஆனால் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் இந்த தகவலை எல்லாம் கேட்டுக் கொண்டிருக்கும் மக்கள் கிறுக்கங்களா


புதிய வீடியோ