உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெயரில் மட்டுமே கிரேட்... பாதுகாப்பு சபையில் பிரிட்டன் இருந்தும் பயனில்லை; இந்தியாவுக்கு இடம் தர வலியுறுத்தல்

பெயரில் மட்டுமே கிரேட்... பாதுகாப்பு சபையில் பிரிட்டன் இருந்தும் பயனில்லை; இந்தியாவுக்கு இடம் தர வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் அவசர சீர்திருத்தங்கள் தேவை. பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினராக இந்தியாவுக்கு உரிய இடம் கொடுக்க வேண்டும்' என சிங்கப்பூர் முன்னாள் தூதரக பேராசிரியர் கிஷோர் மஹ்புபானி தெரிவித்தார்.ஆங்கில செய்தி சேனலுக்கு அவர் அளித்த பேட்டி: அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு அடுத்தபடியாக இன்று உலகின் மூன்றாவது சக்திவாய்ந்த நாடாக இந்தியா உள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பெயரில் மட்டும் 'கிரேட்' என வைத்திருக்கும் பிரிட்டனை இனியும் பெரிய நாடாக கருத வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் பல வருடங்களாக ஐ.நா., பாதுகாப்பு சபையில் தங்களது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தவில்லை. பிற நாடுகளின் அதிருப்திக்கு பயந்து அதை செய்யாமல் இருக்கின்றனர்.இதனால் பிரிட்டன் செய்ய வேண்டிய விஷயம் தனது இருக்கையை இந்தியாவுக்கு விட்டு கொடுக்க வேண்டும். முந்தைய காலகட்டத்தில் ஐ.நா.,வின் நிறுவனர்கள் சிறப்பாக செயல்பட்டனர். இப்போது அப்படியில்லை.

இந்தியாவுக்கு இடம்!

20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐ.நா.,வின் நிறுவனர்கள் ஒரு பெரிய வலுவான நாடு வெளியேறினால், அமைப்பு சரிந்துவிடும் என்று நம்பினர். அப்படித்தான் 5 நாடுகளுக்கும் நிரந்தர இடம் கிடைத்தது. இப்போது நிலைமை மாறி விட்டது. எனவே பாதுகாப்பு சபையில் தனது நிரந்தர இடத்தை பிரிட்டன் விட்டுக்கொடுத்தால், அது அவர்களை சுதந்திரமாக செயல்பட உதவிகரமாக இருக்கும். ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் அவசர சீர்திருத்தங்கள் தேவை. உயர்மட்ட அமைப்பான பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினராக இந்தியாவுக்கு உரிய இடம் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Kumar Kumzi
செப் 01, 2024 12:37

ஐநா தர முன் வந்தாலும் நம்பில் இத்தாலிய இளவரசர் பப்பூ வழங்க கூடாதுனு அமெரிக்காவுக்கு போயி போராட்டம் பண்ணுவா


Rasheel
செப் 01, 2024 11:41

இரண்டாம் உலக போர் முடிவில் ஐ நா பாதுகாப்பு சபையில் இந்தியாவிற்கு இடம் அளிக்க முன் வந்த போது அதை சீனாவிற்கு தரும்படி நேரு ரெகமெண்ட் செய்தார். அதற்கு பரிசாக சீனகாரன் 1960 களில் இந்தியாவின் மீது படையெடுத்து தனது நன்றியை தெரிவித்தான். அதேபோல 1947 இல் இந்தியா பாக்கிஸ்தான் பிரிவினையின் போது பிரிவினையை ஒழுங்காக செய்யாமல், பாக்கிஸ்தான் பங்களாதேஷ் தீவிரவாத பிரச்னையை நிரந்தரமாக உருவாக்கிய பெருமை காந்தி மற்றும் நேருவை சாரும்.


Senthil
செப் 02, 2024 13:39

ஓ, நீங்கதான் விளக்கு புடிச்சு பார்த்தீரோ?


Corporate Goons
செப் 01, 2024 11:31

ஒருசிலரை குறைகூறி, ஒரு சிலருக்கு கூஜா தூக்கி குளிர் காய நினைப்பது இந்தியர்களின் இயலாமை. அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்கும் என்தால்ப்ய வித்தியாசமும் இல்லை


enkeyem
செப் 01, 2024 11:22

ஐ நா சபையில் கூட இட ஒதுக்கீடு முறை வேண்டும் என்று நம்ம பப்புஜி இனிமேல் கேட்டாலும் ஆச்சரியமிலலை


Senthil
செப் 02, 2024 13:43

அப்படி கேட்பதில் என்ன தவறு? இட ஒதுக்கீடு இல்லை என்றால் ஒரு கூட்டம் தன் மகன், மருமகள் என தன் குடும்பத்தையே தொடர்ந்து சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக்குவதுபோல் இங்கும் நடந்துவிடாதா? கொலீஜியத்தில் யார் இருக்கிறார்கள் நீதிபதிகளை தேர்வு செய்ய?


aaruthirumalai
செப் 01, 2024 10:12

அருமையான கருத்து. உண்மையானது.


Kasimani Baskaran
செப் 01, 2024 09:44

தீம்காவுக்கு பாதுகாப்பு சபையில் நிரந்தர இடம் கொடுக்க வேண்டும் என்று உடன்பிறப்புக்கள் உண்ணாவிரதம் என்று வந்தாலும் வரும் - ஆனால் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கொடுக்க சீனா சம்மதிக்காது. ஆகவே இந்தியா ஐநாவில் இருந்து வெளியேறினால் இந்தியாவுக்கு நல்லது.


Kalyanaraman
செப் 01, 2024 08:55

சீனா தனது வீட்டோ பவரினால் இந்தியா உள்ளே வர தடுக்கிறது. பல விஷயங்களை பார்க்கும்போது நேரு இந்தியாவிற்கே சாபக்கேடு என்று புரிகிறது.


P. VENKATESH RAJA
செப் 01, 2024 08:16

இந்தியானா சும்மா கிடையாது எப்பவுமே முதலிடம் தான்


Senthil
செப் 02, 2024 13:44

எதுல, பிச்சை எடுப்பதிலா? வெளிநாட்டு அதிபர் வரும்போது அழுக்கடைந்த குப்பத்தை சுவர் எழுப்பி மறைப்பதிலா?


புதிய வீடியோ