உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீருக்கடியில் மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் மோடி துவக்கி வைத்தார்

நீருக்கடியில் மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் மோடி துவக்கி வைத்தார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் ஹூக்ளி நதிக்கடியில் மெட்ரோ ரயில் சேவையை இன்று பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.மேற்குவங்க மாநிலம் கிழக்கு-மேற்கு வழித்தடத்தின் ஒரு பகுதியான 16.5 கி.மீ தூரத்திலான ஹவுரா மைதானம் -எஸ்பிளனேட் மெட்ரோ பாதை இடையே ஹூக்ளி நதியின் நீர் மட்டத்தில் இருந்து 16 மீ ஆழத்தில் 520 மீ தூரத்துக்கு மெட்ரோ ரயில் பாதை வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் முதல் நீருக்கடியில் செல்லும் மெட்ரோ ரயில் சேவை என கூறப்படுகிறது.இதன் சேவையை பிரதமர் மோடி இன்று (மார்ச் 6) கொடியசைத்து துவக்கி வைத்தார். பள்ளி சிறுவர்கள் பலரும் இந்த மெட்ரோவில் பயணித்து மகிழ்ந்தனர். பிரதமர் மோடியும் பள்ளி மாணவர்கள் இடையே அமர்ந்து உரையாடியபடியே சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ