உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எமர்ஜென்சிக்கு எதிராக போராடியவர்களின் தியாகங்களுக்கு கவுரவம்: மத்திய அமைச்சரவை முடிவு

எமர்ஜென்சிக்கு எதிராக போராடியவர்களின் தியாகங்களுக்கு கவுரவம்: மத்திய அமைச்சரவை முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டதற்கு, மத்திய அமைச்சரவை கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன், அதற்கு எதிராக போராடியவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், எமர்ஜென்சியை எதிர்த்தும், இந்திய அரசியல்சாசனத்தை தாக்கும் முயற்சியை துணிச்சலுடன் எதிர்த்த எண்ணற்ற தனிநபர்களின் தியாகங்களை நினைவுகூர்ந்து கவுரவிக்க தீர்மானிக்கப்பட்டது. அரசியலமைப்பு ரீதியாக உத்தரவாதம் அளிக்கப்பட்ட ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டு , பின்னர் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு கொடூரங்களுக்கு ஆளானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=q3qmjn80&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0எமர்ஜென்சி காலத்தில் நடந்த அத்துமீறலுக்கு எதிரான அவர்களின் துணிச்சலுக்கும், தைரியமான எதிர்ப்புக்கும் மத்திய அமைச்சரவை அஞ்சலி செலுத்தியது. எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டது இந்திய வரலாற்றில் ஒரு மறக்க முடியாத அத்தியாயம். அரசியலமைப்புச் சட்டம் சீர்குலைக்கப்பட்டது. இந்தியாவின் குடியரசு மற்றும் ஜனநாயக உணர்வுகள் தாக்கப்பட்டன. அடிப்படை உரிமைகள், தனிமனித சுதந்திரம் நிறுத்தப்பட்டன.மேலும் இந்த கூட்டத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், நாட்டின் ஜனநாயக நெறிமுறைகளின் மீள்தன்மை மீதும் நாட்டு மக்கள் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளனர். சர்வாதிகாரப் போக்குகளை எதிர்த்து, நமது அரசியலமைப்பையும், அதன் ஜனநாயக கட்டமைப்புகளையும் பாதுகாக்க உறுதியாக நின்றவர்களிடம் இருந்து இளைஞர்கள் உத்வேகம் பெற வேண்டும். ஜனநாயகத்தின் தாயான இந்தியா , அரசியலமைப்புச் சட்டத்தின் மதிப்புகளைப் பாதுகாத்தற்கு உதாரணமாக திகழ்கிறது. ஒரு தேசமாக நமது அரசியலமைப்பையும், அதன் ஜனநாயக கூட்டாட்சி உணர்வையும் நிலைநிறுத்துவற்கான நமது உறுதியை புதுப்பிப்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

True Indian
ஜூன் 25, 2025 17:54

எத்தனை நாளுக்குத்தான் இதை வைத்தே ஓட்டுவீர்கள்.? நாடு உருப்பட , 200 லட்சம் கோடி கடனை அடைக்க ஏதாவது முயட்சி பண்ணுங்கள். வரும் தலைமுறைகள் சாபம் விடுவார்களே தவிர பாராட்ட மாட்டார்கள். கேவலமான அரசியலை நாம் அனைவரும் தவிர்ப்போம்.


vivek
ஜூன் 25, 2025 18:13

duplicate indian. ..ask congress


ஆரூர் ரங்
ஜூன் 25, 2025 19:23

4 ஆண்டுகளில் மாநிலத்தின் கடனை இரு மடங்காக ஆக்கியுள்ள விடியலிடம் இது போல கேட்க முடியாது. மாநில அரசுகள் வாங்கியுள்ள உலக வங்கி கடன் போன்றவற்றுக்கு மத்திய அரசு உத்திரவாதம் அளித்துள்ளது. அதுவும் சேர்த்துதான் தேசீய கடன். வெளிநாடுவாழ் இந்தியர்கள் இந்திய வங்கிகளில் போட்டுள்ள டெபாஸிட்களும் கூட நாட்டின் கடனாக கணக்கிடப்பட்டுள்ளது. உட்கட்டமைப்பு வளர்ச்சி முதலீடுகளுக்காக மில்லியன் டாலர்களில் கடன் வாங்குவது எல்லா நாடுகளும் செய்வதுதான்.


V sreenivasan
ஜூன் 26, 2025 06:51

எரிப்பொருள் பற்றாக்குறையாக வந்த போர் விமானம் குறித்து அவ்வளவு நன்றாக தென்ப்படவில்லை அதற்காகவே மற்றும் வெகுவாக காலதாதமாகியதால் அதற்கு ஈடாக நிலுவை கட்டணம் வசூலிக்கப்படவேண்டும். இல்லையென்றால் அவர்கள கருதுவார்கள் இந்தியாவவல் உள்ளவர்கள் அனைவரும் இளிச்சவாயன்கள் என்று, இது தேவையா?


V sreenivasan
ஜூன் 26, 2025 07:02

மத்திய அரசின் இத்தீர்மானம் மிகவும் வரவேற்கத்தக்கது. அரசுக்கு மிக்க நன்றி உரித்தாக்குகிறேன் வணக்கம்.


Manaimaran
ஜூன் 25, 2025 17:48

எமர்ஜென்சியின் போது நிர்வாகம் சிறப்பா இருந்தது அவனவன் டயத்துக்கு ஆபீஸ் வந்தான். இப்ப மாதிரி வழ வழ இல்ல சிறந்த தலைவர் இந்திரா


ஆரூர் ரங்
ஜூன் 25, 2025 18:35

ஆமாம்.அப்போது ஊழலைக் காரணம் காட்டி கருணாநிதி அரசைக் கலைத்து விட்டு சர்க்காரியா கமிஷன் அமைத்தார் இந்திரா. பிறகு அறிக்கையை குப்பையில் போட்டு விட்டு அவருடனேயே கூட்டு சேர்ந்தார். பெண் ஹிட்லர் என்று திட்டிய மிசா தியாகிகள் இந்திராவின் பாதங்களில் சரணடைந்தனர். பிறகு திமுக ஊழலைப் பற்றி இந்திரா வாயே திறக்கவில்லை..


babu
ஜூன் 25, 2025 17:31

யசோதா பெண்ணை கவூரவா படுத்துங்கள்


pmsamy
ஜூன் 25, 2025 17:09

கேவலமான அரசியல் மானங்கெட்ட அரசியல் பாஜக ஒழிக


Thravisham
ஜூன் 25, 2025 17:42

ரூவா 200 வால்க குவாடெர் வால்க ஓசி பிரியாணியும் வால்க


vivej
ஜூன் 25, 2025 17:49

உன்னால வேற ஒன்னும் பண்ணமுடியாது அறிவிலி pmsamy ....நல்லா ஓயிக ஓயிக நல்ல கதறு .....


Muruganandam
ஜூன் 25, 2025 17:05

கவுரவிப்பதாக இருந்தால் முதலில் தளபதி ஸ்டாலின் அவர்களை கவுரவியுங்கள் அவர்தான் எமெர்கென்சி கொடுமைகளை அனுபவித்தவர்


Thravisham
ஜூன் 25, 2025 17:46

ஆமாமா முதல்ல வால்தூங்க எந்த கேஸ்ல உள்ள போட்டாங்க? அதையும் சொல்லிடுஙக


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை