உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பரபரப்பான சூழலில் மத்திய அமைச்சரவை கூட்டம்; பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை

பரபரப்பான சூழலில் மத்திய அமைச்சரவை கூட்டம்; பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை

புதுடில்லி: பரபரப்பான சூழலில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. முப்படை தளபதிகள், அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.பரபரப்பான சூழலில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ள சூழலில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை சிறப்பாக நடத்தியதற்கு முப்படைகளை பிரதமர் மோடி பாராட்டினார்.அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. முப்படை தளபதிகள், அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இதற்கிடையே நேற்று விண்வெளி தொடர்பான நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசிய வீடியோ இன்று ஒளிபரப்பு செய்யப்பட்டது.அந்த வீடியோவில் பிரதமர் மோடி பேசியதாவது: நிலவின் தென் துருவத்தில் நமது விண்கலம் தரையிறங்கியது மகத்தான சாதனை. பலரின் கனவுகளை சந்திரயான் நிலவுக்கு சுமந்து சென்றது. 34 நாடுகளுக்காக 400க்கும் மேற்பட்ட செயற்கைக் கோள்களை நாம் விண்ணில் ஏவியுள்ளோம். இந்தியாவின் விண்வெளி பயணம் மற்றவருடன் போட்டியிடுவது அல்ல. பல்வேறு நாடுகளுடன் இணைந்து பொதுவான இலக்குகளைப் பகிர்ந்து கொள்கிறோம். செவ்வாய் கிரகத்தில் கால் பதித்து இந்தியா வரலாறு படைத்துள்ளது. 2023ல் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை இந்தியா அமைக்க உள்ளது. இந்தியா- நாசாவின் கூட்டு நடவடிக்கையில் இந்திய வீரர் விரைவில் விண்வெளிக்கு செல்ல உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

K.Uthirapathi
மே 08, 2025 03:12

ஐயா இந்தியா, 2023 ல் விண்வெளி ஆய்வு மையம் அமைக்க இருப்பதாக செய்தி வெளியிடப் பட்டுள்ளது. அச்சுப் பிழை என கருதுகிறேன்.


angbu ganesh
மே 07, 2025 14:13

இதுல எவனாச்சும் வெளி நடப்பு பாகிஸ்தான் சப்போர்ட்டர் னு சொல்லிக்கிட்டு பண்ணான் அவனை அப்படியே சுட்டு தள்ளிடனும்


R S Devarajan
மே 07, 2025 15:43

அவர்கள் தேசபற்று இல்லாதவர்கள்


K G Thiru Gnanaselvam
மே 07, 2025 14:03

இந்தியா பிரதமர் திரு.மோடி அவர்களின் உறுதியான நடவடிக்கையால் இன்று உலகளவில் இந்தியா தலைநிமிர்த்துள்ளது


Karthik
மே 07, 2025 13:02

ஜெய் மோடி ஜி.. ஜெய் ஹிந்துஸ்தான்..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை