உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்கிரசை மக்கள் மீண்டும் புறக்கணிப்பர் மத்திய அமைச்சர் அனுராக் சிங் கணிப்பு

காங்கிரசை மக்கள் மீண்டும் புறக்கணிப்பர் மத்திய அமைச்சர் அனுராக் சிங் கணிப்பு

புதுடில்லி:“அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை புறக்கணிக்கும் காங்கிரஸ் கட்சியை மக்கள் மீண்டும் புறக்கணிப்பர்,” என, மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் கூறினார்.பா.ஜ.,வின் 'ஸ்வச்தா சேவா' திட்டத்தின் கீழ், மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் மற்றும் கட்சியின் டில்லி மாநில தலைவர் வீரேந்திர சச்தேவா ஆகியோர், டில்லி வால்மீகி கோவில் வளாகத்தை நேற்று சுத்தம் செய்தனர்.சுத்தம் செய்யும் பணிக்குப் பின் நிருபர்களிடம் அனுராக் தாக்குர் கூறியதாவது:பார்லி., புதிய கட்டட திறப்பு விழாவில் பிரதமர் உரையை காங்கிரஸ் கட்சி புறக்கணித்தது. இதனால், அடுத்து நடந்த சட்டசபை தேர்தல்களில் மக்கள் அவர்களைப் புறக்கணித்தனர். இப்போது, அயோத்தி கும்பாபிஷேக விழாவை புறக்கணிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. எனவே, லோக்சபா தேர்தலில் மக்கள் மீண்டும் காங்கிரஸ் கட்சியை புறக்கணிப்பர். ராமர் இருப்பதை மறுக்கவும், ஹிந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தவும் கிடைத்த வாய்ப்பை காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளும் தவறவிட்டதில்லை. ஆனால், அவர்கள் இறுதியில் ராமரிடம் சரணடைய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை