உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் 28ல் ஹூப்பள்ளி வருகை

மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் 28ல் ஹூப்பள்ளி வருகை

ஹூப்பள்ளி: லோக்சபா தேர்தலை ஒட்டி, மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் 28ம் தேதி, ஹூப்பள்ளி வருகிறார். தார்வாட் தொகுதியில் 10 ஆண்டுகள் நடந்த, வளர்ச்சி பணிகள் தொடர்பாக புத்தகம் வெளியிடுகிறார்.லோக்சபா தேர்தலை ஒட்டி, மத்திய அமைச்சர்கள் கர்நாடகாவுக்கு வருகை தந்து, பிரசாரம் செய்ய உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் துவங்கி உள்ளன.இந்நிலையில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேர்தலை ஒட்டி வரும் 28ம் தேதி ஹூப்பள்ளி வருகிறார். அங்கு உள்ள பி.வி.பி., கல்லுாரி வளாகத்தில் நடக்கும், நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.கடந்த 10 ஆண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு செய்து உள்ள சாதனைகள், தார்வாட் எம்.பி.,யும், மத்திய பார்லிமென்ட் விவகார அமைச்சருமான பிரஹலாத் ஜோஷியின் சாதனைகள் அடங்கிய, புத்தகத்தை வெளியிடுகிறார். அதன்பின்னர் பா.ஜ., செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி