உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 10 ஆண்டுகளில் மருத்துவச் செலவு 39.4 சதவீதமாக குறைவு; மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா

10 ஆண்டுகளில் மருத்துவச் செலவு 39.4 சதவீதமாக குறைவு; மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மத்திய அரசின் சுகாதாரத் திட்டங்களினால் 10 ஆண்டுகளில் மக்கள் மருத்துவத்திற்கு செலவிடப்படும் தொகை குறைந்துள்ளதாக மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.டில்லியில் நடந்த சர்வதேச சுகாதார மாநாட்டில் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா கலந்து கொண்டார். அவர் பேசியதாவது: பிரதமர் மோடியின் கனவு திட்டங்களில் ஒன்றான ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா திட்டம் கடந்த 2018ம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது. நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் என்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு வழங்கும் இந்தத் திட்டம், உலகளவில் மிகப்பெரிய சுகாதார காப்பீட்டு திட்டமாகும். அண்மையில் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களும் இந்தத் திட்டத்தின் பயனாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். தேசிய சுகாதார திட்டப்பணிகள் மற்றும் மத்திய அரசு மேற்கொள்ளும் சுகாதார திட்டங்களினால், கடந்த 10 ஆண்டுகளில் மக்கள் மருத்துவத்திற்கு செலவிடப்படும் தொகை, 64.2 சதவீதத்தில் இருந்து 39.4 சதவீதமாக குறைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Kanns
பிப் 22, 2025 10:07

Most ModiBJP Central Ministers incl this Buffoon are NonPerforming Stooges& Useless to People /Nation Except Diversionary/False Propagandas. Strong Necessity to Revive BJP


venugopal s
பிப் 21, 2025 12:52

மத்திய பாஜக அரசு தமிழகத்தின் மீது ஹிந்தியைத் திணிக்கவில்லை என்பதற்கு இணையான உருட்டு இது!


அப்பாவி
பிப் 21, 2025 12:21

எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அப்பவே 2019 ல 99 சதவீதம் கட்டி முடிச்சாச்சின்னு நீங்க சொன்னதை நம்பாம இப்பதான் 24 சதவீதம் கட்டுமானம் முடிஞ்சிருக்குன்னு பேப்பர்ல பொய்செய்தி போடறாங்க சார். என்னன்னு கேளுங்க. இல்லேன்னா முருகரை உட்டு கேக்கச் சொல்லுங்க.


சுரேஷ் சிங்
பிப் 21, 2025 12:16

மருந்து தயாரிக்கும் செலவு கணிசமாக குறைந்துள்ளது. 5 ரூவ விற்ற சாரிடான் மாத்திரை இன்று 50 பைசா.ரெண்டு ரூவா விற்ற டைஜீன் இன்னிக்கி ரூவாய்க்கு நாலு. தமிழக அரசு ஆஸ்பத்திரிகளில் பெரும்பான்மை மருந்துகள் இலவசம். மலிவான சீன மூலப்பொருள்கள் இறக்குமதியால்தான் இது சாத்தியம். சீனா இல்லேன்னா இது சாத்தியமே இல்லை.


Mariadoss E
பிப் 21, 2025 11:46

ஒண்ணும் இல்லை. வர வர கன்சுலேட்டிங் கான்சல்டிங் பீஸ், மருந்து முதல் எல்லாம் உயரத் தான் செய்கிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை