உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் நிர்மலா

இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் நிர்மலா

புதுடில்லி: தேர்தல் நெருங்குவதால் பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள 2024 க்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பார்லி.,யில் தாக்கல் செய்தார். முன்னதாக அவர் ஜனாதிபதி மாளிகைகக்கு சென்று ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து பேசினார். அவருக்கு இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார் ஜனாதிபதி.பட்ஜெட் தாக்கல் செய்த போது முன்னுரையில் நிதி அமைச்சர் நிர்மலா பேசியதாவது: 10 ஆண்டுகளில் இந்தியா பொருளாதார முன்னேற்றம் கண்டு வருகிறது. பிரதமர் மோடியின் தலைமையிலான அரசு நாடு பெரும் வளர்ச்சியை பெற்றுள்ளது. அனைவருக்கும் எல்லாம் கிட்ட, அனைத்து தரப்பிலும் வளர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கில் ஏழைகளை அரசின் திட்டங்கள் சென்றடைகிறது. வேலை வாய்ப்பு பெருகி வருகிறது. 80 கோடி மக்களுக்கு இலவச ரேசன் பெற்று பயன்பெற்றுள்ளனர். இது போன்ற வளர்ச்சி பணியால் மீண்டும் எங்களை மக்கள் ஆட்சியில் அமர்த்துவார்கள்.

காகிதம் இல்லாத பட்ஜெட்

* பார்லி.,யில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட், நிர்மலா சீதாராமனுக்கு 6வது பட்ஜெட்டாகும்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=yt2kki1x&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0* மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு இது தொடர்ச்சியான 11வது பட்ஜெட்.* நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் நான்காவது முறையாக காகிதம் இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

சிவப்பு நிற வெல்வெட்

வழக்கமாக பட்ஜெட் குறித்த முக்கிய தகவல்கள் அடங்கிய கோப்புகளை சூட்கேஷில் எடுத்து வருவதே வழக்கம். ஆனால், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இதுவரை தாக்கல் செய்த 5 பட்ஜெட்களில் 2 முறை சிவப்பு நிற வெல்வெட் துணியில் வைத்து லெட்ஜராக எடுத்து வந்துள்ளார்; 3 முறை 'டேப்' எடுத்து வந்தார். அதேபோல் தான் இம்முறையும் சிவப்பு நிற வெல்வெட் துணியால் ஆன பையில் பட்ஜெட் ஆவணங்கள் அடங்கிய 'டேப்' எடுத்து வந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

g.s,rajan
பிப் 01, 2024 21:32

உருப்படி இல்லாத வெங்காய பட்ஜெட் .....


g.s,rajan
பிப் 01, 2024 21:30

இதுதாண்டா அமிர்தக் காலம் ,இதுதாண்டா இந்தியா,இதுதாண்டா பி,ஜே.பி ....


g.s,rajan
பிப் 01, 2024 21:27

இந்தியாவில் வழக்கம் போல் முறையாக அரசுக்கு வருமான வரி கட்டும் நடுத்தரமக்களுக்கு நெத்தியில் அருமையா போட்டுட்டாங்க.....


g.s,rajan
பிப் 01, 2024 21:16

ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம் ,உள்ளே இருப்பது ஈறும் பேனாம் ....


g.s,rajan
பிப் 01, 2024 21:13

இது அமிர்தக் காலம் .....


g.s,rajan
பிப் 01, 2024 20:20

அல்வா மிகவும் சூப்பர் ....


g.s,rajan
பிப் 01, 2024 20:17

அல்வா ரொம்பத் திகட்டுது.....


திகழ்ஓவியன்
பிப் 01, 2024 13:33

இந்தியா வளர்ந்த நாடாக 2047 வரை பொறுத்திருங்கள்..:: நாங்கள் பொறுத்திருக்கிறோம் நீங்கள் அப்போ இருப்பீர்களா பாருங்கள்


Velan Iyengaar
பிப் 01, 2024 12:09

சென்செக்ஸ் எவ்வ்ளோ கீழே விழப்போகுதோ


ஆரூர் ரங்
பிப் 01, 2024 14:12

இப்போதிருக்கும் சென்செக்ஸ் 71800 மன்மோகன் காலத்தில் (21000????‍????) கனவு மட்டுமே. அரசுத்துறை பங்குகளின் விலை கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் 20 மடங்கு வரை கூட அதிகரித்துள்ளன????.


Velan Iyengaar
பிப் 01, 2024 16:15

மன்மோகன் சிங் காலத்தில் ஒன்றிய அரசு வாங்கிய கடன் அளவு என்ன?? இப்ப்போது நரேந்திரதாஸ் தாமோதர் காலத்தில் வாங்கிய ஒன்றியம் கடன் அளவு என்ன?? மன்மோகன் சிங் கால கடன் அப்போதைய உள்நாட்டு உற்பத்தியில் எத்தனை சதவிகிதம், இப்போது வாங்கப்பட்டுள்ள கடன் தற்போதைய உள்நாட்டு உற்பத்தியில் எத்தனை சதவிகிதம்??


Velan Iyengaar
பிப் 01, 2024 12:08

மொத்தமா ஒண்ணுமே இல்ல.....


Sudarsanr
பிப் 01, 2024 13:31

உங்களை யாரும் கேட்கவில்லை...


N. Srinivasan
பிப் 01, 2024 16:38

இது தேர்தல் முன்னாள் வரும் பட்ஜெட் அதனால் தேர்தலின் விதிகளின் படி எந்த சலுகையும் அறிவிக்கக்கூடாது மோடி சொன்னது போல் தேர்தல் பிறகு பாருங்கள் அவருடைய பட்ஜெட் எப்படி இருக்கும் என்று.


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை