உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இளம் தலைவர்கள் பட்டியலில் மத்திய அமைச்சர் ராம் மோகன்; இவர் யார் தெரியுமா?

இளம் தலைவர்கள் பட்டியலில் மத்திய அமைச்சர் ராம் மோகன்; இவர் யார் தெரியுமா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: உலக பொருளாதார மன்றத்தின் 2025ம் ஆண்டுக்கான உலகளாவிய இளம் தலைவர்கள் பட்டியலில் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு இடம் பெற்றுள்ளார்.உலக பொருளாதார மன்றம் (World Economic Forum) 2025ம் ஆண்டுக்கான இளம் உலகளாவிய தலைவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பல்வேறு துறைகளில் முத்திரை பதித்த 40 வயதுகுட்பட்ட 116 நபர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் இந்தியர்கள் 7 பேர் இடம் பெற்றுள்ளனர். அதன் விபரம் பின்வருமாறு:1. அனுராக் மாலூ, மலையேறுபவர், தொழில்முனைவர் மற்றும் பேச்சாளர்.2. நிபுன் மல்ஹோத்ரா- தொழில்முனைவோர் மற்றும் ஊனமுற்றோர் உரிமை ஆர்வலர் ஆவார்.3. ரித்தேஷ் அகர்வால்- தொழில்முனைவோர், OYO ஹோட்டல்ஸ் நிறுவனர். 4. அலோக் மெடிகேபுரா அனில்- நெக்ஸ்ட் பிக் இன்னோவேஷன் லேப்ஸின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர்.5. ராம் மோகன் நாயுடு, அரசியல்வாதி, மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர்6. நடராஜன் சங்கர்- பாஸ்டன் கன்சல்டிங் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் பங்குதாரர். 7. மானசி சுப்பிரமணியம் - தலைமை ஆசிரியர் மற்றும் பெங்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா நிறுவனத்தின் துணைத் தலைவர்.இந்த பட்டியில் இடம் பிடித்துள்ள, மிகவும் பிரபலமானவர் தான் மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு.யார் இந்த ராம் மோகன் நாயுடு?* ஆந்திராவில் டிசம்பர் 18ம் தேதி 1987ம் ஆண்டு ராம் மோகன் நாயுடு பிறந்தார். இவருக்கு வயது 37.* இவர் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த அரசியல்வாதி.* இவர் லோக்சபா தேர்தலில், ஸ்ரீகாகுளம் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி., ஆனார்.* இவர் விமான போக்குவரத்து துறை அமைச்சராக உள்ளார்.* இவர் தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய பொதுச்செயலாளராக உள்ளார். இது குறித்து ராம்மோகன் நாயடு கூறியதாவது: உலகப் பொருளாதார மன்றத்தால் இளம் உலகளாவிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது ஒரு மரியாதைக்குரிய விஷயமாகும்.இந்த அங்கீகாரம் எனக்கு மட்டுமல்ல. மாற்றத்தை ஏற்படுத்த கனவு காணும் ஒவ்வொரு இளம் இந்தியருக்கும் அர்ப்பணிக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Ramesh Sargam
ஏப் 17, 2025 20:26

தமிழக துணை முதல்வர் உதயநிதிக்கும் கிடைத்திருக்கவேண்டும் என்று திமுகவினர் ஒரே மனக்குமுறல்.


நிக்கோல்தாம்சன்
ஏப் 17, 2025 21:30

என்னது ?அடுத்த பாலிடாயில் பாட்டில் ரெடியா ?


மதிவதனன்
ஏப் 17, 2025 23:40

உமக்கு எப்போதும் உதயா எண்ணம் தான் போல , இப்படி தான் இருக்கனும்


பாமரன்
ஏப் 17, 2025 17:10

ஹாஹாஹா... அந்த மூன்றாவது மற்றும் ஐந்தாவது நபர்கள் செலக்ட் செய்யப்பட்டது செம்ம காமெடி...


கோமகன்- யாதவன்
ஏப் 17, 2025 16:56

நடராஜன் சங்கர் என்ற நம்மவர் பற்றி ஏன் எந்த விளக்கமும் இல்லை.?


M S RAGHUNATHAN
ஏப் 17, 2025 18:17

விளக்கம் தேவையா ? பிராமண குடும்பத்தை சேர்ந்தவராக இருப்பார். என்ன சின்ன பிள்ளையா இருக்கிறீங்க


ஈசன்
ஏப் 17, 2025 16:45

தமிழ் நாட்டின் அண்ணாமலை இவர்கள் அனைவரின் சாதனைகளையும் முறியடிக்க கூடிய திறமை உள்ளவர். முதலில் அவர் மத்திய மந்திரி ஆக்க படவேண்டும். பின்பு பாருங்கள் அவருடைய துறையின் முன்னேற்றத்தை.


பாமரன்
ஏப் 17, 2025 17:14

அங்கங்கே காமிரா ஃபிக்ஸ் பண்ண ஆரம்பிக்கனும்


suresh guptha
ஏப் 17, 2025 16:17

BECAUSE OF HIS FATHER HE BACAME M P AND CASTE BASED POLITICS IN A P AS WE SEE IN TN MOST OF THE SENOIR LEADERS SONS ARE M P HOW AN ORDINARY PERSON CAN BECOME


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை