உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ., வேட்பாளருக்காக டெபாசிட் தொகை கட்டிய மாணவர்கள்: உக்ரைனில் இருந்து திரும்ப உதவியதற்கு நன்றிக்கடன்

பா.ஜ., வேட்பாளருக்காக டெபாசிட் தொகை கட்டிய மாணவர்கள்: உக்ரைனில் இருந்து திரும்ப உதவியதற்கு நன்றிக்கடன்

திருவனந்தபுரம்: மத்திய இணையமைச்சரான வி.முரளீதரனின் வேட்புமனு தாக்கலுக்கான டெபாசிட் தொகையை, ரஷ்யா - உக்ரைன் போருக்கு இடையே அங்கிருந்து தாயகம் திரும்ப உதவியதற்காக மாணவர்களே திரட்டி பணம் செலுத்தியுள்ளனர்.கேரளாவில் உள்ள 20 லோக்சபா தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக ஏப்.,26ல் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை மறுநாள் (ஏப்.,4) நிறைவடைகிறது. இதில் ஆற்றிங்கல் தொகுதியில் பா.ஜ., சார்பில் மத்திய இணையமைச்சர் வி.முரளீதரன் போட்டியிடுகிறார். திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில், பழவங்காடி கணபதி கோயிலில் வழிபட்ட பின்னர், தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.இந்த நிலையில் உக்ரைனில் மருத்துவம் படிக்கும் இந்திய மாணவர்களே முரளீதரனின் வேட்புமனுவுக்கான டெபாசிட் தொகையை செலுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா - உக்ரைன் போரின்போது அங்கு மருத்துவம் படிக்க சென்ற இந்திய மாணவர்களை 'ஆபரேஷன் கங்கா' என்ற மீட்பு திட்டத்தின் மூலம் மத்திய அரசு மீட்டு தாயகம் திரும்பி வர உதவியது. இதில் வெளியுறவுத்துறை இணையமைச்சராக இருந்த முரளீதரன் முக்கிய பங்காற்றினார். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவர் செலுத்த வேண்டிய டெபாசிட் தொகையை மாணவர்களே சேகரித்து செலுத்தியுள்ளனர்.இது தொடர்பாக மாணவி சாய் ஸ்ருதி கூறுகையில், ''நாங்கள் அனைவரும் பாதுகாப்பாக தாயகம் திரும்புவதற்கு அமைச்சர் முரளீதரன் உதவியதை எங்களால் மறக்கவே முடியாது' என்றார். அவர் ஆற்றிங்கல் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டவுடன், மற்ற மாணவர்கள் சேர்ந்து டெபாசிட் தொகையை திரட்டியுள்ளனர். அதனை மாணவி சாய் ஸ்ருதி, தங்கள் பெற்றோருடன் திருவனந்தபுரத்தில் உள்ள பா.ஜ., அலுவலகத்துக்கு வந்து அளித்துள்ளார். அந்த தொகையை டெபாசிட் செய்து முரளீதரன் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Mohamed nisar Rahman
ஏப் 04, 2024 12:19

இதெல்லாம் அரசியல் என்று இதெல்லாம் அரசியல் என்று தமிழர்களுக்கு எப்பிழுதோ தெரியும், இதெல்லாம் அரசியல் என்று தமிழர்களுக்கு எப்பிழுதோ தெரியும்,


Ramesh Sargam
ஏப் 02, 2024 20:12

எல்லா அரசியல்வாதிகளும் இப்படி மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்பது எனது ஆசை


A1Suresh
ஏப் 02, 2024 18:30

உண்மை வெளியாகிறது தென்இந்தியாவிலும் எங்கள் பாஜக வளர்கிறது வாழ்க வளர்க


அசோகன்
ஏப் 02, 2024 18:01

எல்லாம் சரிதான் ......... ஓட்டு போடுங்க விளங்கிடும்


N SASIKUMAR YADHAV
ஏப் 02, 2024 22:14

உங்களை மாதிரி கோட்டரும் கோழிபிரியாணியும் வாங்கிக்கொண்டு கம்யூனிஸ்டுகளுக்கு ஓடடுப்போடனுமா


Mohamed nisar Rahman
ஏப் 04, 2024 12:24

சரி நன்பா, கரெக்ட் nanba,idhellam அரசியல் என்று தமிழர்கள் நமக்கு கரெக்ட் nanba,idhellam அரசியல் என்று தமிழர்கள் நமக்கு புரிந்து vittathu, கரெக்ட் நண்பா,இதெல்லாம் அரசியல் என்று தமிழர்கள் நமக்கு புரிந்து விட்டது


ஆரூர் ரங்
ஏப் 02, 2024 17:45

பஸ் அனுப்பி உக்ரேன் மாணவர்களை கொண்டு வந்து உலக சாதனை படைத்த தமிழகத்தைச் சேர்ந்த கழக ஆட்களுக்கு யாரும் கட்டவில்லையே ஏன்?


Karthik
ஏப் 02, 2024 16:44

மிகவும் பொருத்தமான செயல் மாணவர்களுக்கும் இளைஜர்களுக்கும் விடிவெள்ளி BJP ஆட்சி ஒன்று தான் தமிழ்நாட்டில் உள்ளவர்களும் இந்த வாய்ப்பை தவற விட மாட்டார்கள் என்று நம்புவோம்


S. Narayanan
ஏப் 02, 2024 16:02

It is clear that BJP supporters are well educated and now it has come to light that BJP will certainly win with clean majority Jaihind Bharat Mata ki Jai


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி