உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உள்நாட்டில் தயாரான செமிகண்டக்டர் தகடை வெளியிட்டார் மத்திய அமைச்சர்

உள்நாட்டில் தயாரான செமிகண்டக்டர் தகடை வெளியிட்டார் மத்திய அமைச்சர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், டில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், உள்நாட்டிலேயே தயாரிக்கப் பட்ட, 'செமிகண்டக்டர்' எனப்படும் மின்னணு சிப்பின் கையளவு தகடை வெளியிட்டார். கடந்த 2021 டிசம்பரில் மத்திய அரசு, இந்திய செமிகண்டக்டர் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதற்காக, 76,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மொத்த முதலீடு இந்த திட்டத்திற்கு பின், நாட்டின் செமிகண்டக்டர் துறை அதிவேகமாக வளர்ந்து வருகிறது. மத்திய அரசு இதுவரை ஆறு மாநிலங்களில், 10 செமிகண்டக்டர் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டங்களுக்கான மொத்த முதலீடு 1.6 லட்சம் கோடி ரூபாய். பிரிட்டனின் முன்னணி செமிகண்டக்டர் நிறுவனமான ஏ.ஆர்.எம்., அதன் பெங்களூரு ஆலையில் செமிகண்டக்டர் உருவாக்கும் பணியை துவங்கியுள்ளது. 2025 இறுதிக்குள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் 'மேட் இன் இந்தியா' சிப் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நவீன செமிகண்டக்டர் மற்றும் மின்னணு துறைக்கு ஏற்ப, 85,000 இன்ஜினியர்களுக்கு பயிற்சி தரும் திட்டத்தையும் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், நம் நாட்டின் சிப் உற்பத்தி குறித்து அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று கூறியதாவது: இந்தியாவின் வளர்ச்சி இன்று, 'டிஜிட்டல்' புரட்சியால் வழி நடத்தப்படுகிறது. டிஜிட்டல் கடன் வசதி, அதிவேக மொபைல் டேட்டா மற்றும் எல்.எல்.எம்., எனப்படும் பெரிய மொழி மாதிரிகள் ஆகியவை தொழில்நுட்ப மாற்றத்துக்கான முக்கிய காரணிகள். புதிய மாற்றம் நம் நாட்டிடம் தற்போது இரண்டு நானோமீட்டர் அளவிலான மிகச்சிறிய சிப்களை வடிவமைக்கும் திறன் உள்ளது. இது, உலக சந்தையில் புதிய மாற்றத்தை உருவாக்கும். செமிகண்டக்டர் துறையில் நம் நாடு விரைவில் முன்னணி நாடாக உருவாகும். உலகளவில் சிப் வடிவமைப்பு இன்ஜினியர்களில், 20 சதவீதம் பேர் இந்தியர்கள். அது, நமக்கு மிகப்பெரிய வலிமையாக மாறியுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Venugopal S
அக் 19, 2025 17:47

தகடு, தகடு!


RAMESH KUMAR R V
அக் 19, 2025 15:07

கேட்பதற்கு மிகவும் ஆனந்தமாக இருக்கிறது வாழ்க வளர்க பாரதம். ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படவேண்டிய தருணம் .


raja
அக் 19, 2025 09:46

ஹா ஹா இது தான் மத்திய அரசுக்கும் திருட்டு திராவிட மாடல் அரசுக்கும் உள்ள மிக பெரிய வித்தியாசம் .... மாடல் அரசின் முதல்வர் வெளியிட்டது உள்நாட்டில் தயாரான வீரன் என்கிற டாஸ்மாக் சரக்கு....உருப்படுமா மாநிலம்....


Appan
அக் 19, 2025 08:32

The Congress was responsible for the pathetic state of semiconductor industry in India. When AMD wants to setup chip manufacture in India Congress asked huge bribe to give licence, Result AMD ped the proposal. Then BJP came to power. What did BJP do for the last 10 years, Nothing and always blaming Congress. . Only now they are focussing and going for massive investment. Why BJP did not do for the last 10yrs. For a change now BJP got a knowledgeable IT Minister to bring up the industry. Hope Indian politics will allow this minister to perform and bring up the industry.


Kasimani Baskaran
அக் 19, 2025 07:13

சிறப்பு. பகுதி மின்கடத்தி உற்பத்தியில் தைவான் போல வளர வேண்டும். 2 நானோ மீட்டர் இப்பொழுது மிக பிரபலம். அது போன்றதொரு தொழில்நுணுக்கத்தை கொண்டுவர அல்லது நம்மால் உருவாக்க முடியும் என்றால் ஆப்பிள் கொடுக்கும் குத்தகை பல மாநிலங்களை பணக்கார மாநிலங்களாக ஆகிவிட முடியும். தைவானின் டிஎஸ்எம்சி என்ற சில்லு உற்பத்தி நிறுவனம் அங்கு வேலை பார்க்கும் துப்புரவுப் பணியாளர்களுக்குக் கூட பல கோடி போனஸ் கொடுக்கிறது.


Field Marshal
அக் 19, 2025 07:09

செமிகண்டக்டர் துறையில் நம் நாடு விரைவில் முன்னணி நாடாக உருவாகும்.…இன்னொரு செய்தியில் பஸ் கண்டக்டர் கைது …


Modisha
அக் 19, 2025 05:54

காங்கிரஸ் ஆட்சியில் ரயில் பெட்டிகளில் reservation சார்ட் ஒட்டிக்கொண்டே போனது ஞாபகத்துக்கு வருது .


Maha
அக் 19, 2025 05:04

இது பாரதத்தின் வளர்ச்சி எழுச்சி


Ganesh Kumar
அக் 19, 2025 02:56

வாழ்த்துக்கள் ஜெய் ஹிந் ஜெய் மோடிஜி ஜெய் பிஜேபி ஜெய் விக்ஷித் பாரத்


புதிய வீடியோ