உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ.,வில் இருந்து விலகிய நஞ்சுண்டி காங்.,கில் ஐக்கியம் 

பா.ஜ.,வில் இருந்து விலகிய நஞ்சுண்டி காங்.,கில் ஐக்கியம் 

பெங்களூரு : எம்.எல்.சி., பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பா.ஜ.,வில் இருந்து விலகிய நஞ்சுண்டி, துணை முதல்வர் சிவகுமார் முன்னிலையில், காங்கிரசில் இணைந்தார்.பா.ஜ., - எம்.எல்.சி.,யாக இருந்தவர் நஞ்சுண்டி, 58. சட்ட மேலவை தலைவர் பசவராஜ் ஹொரட்டியை சந்தித்து, நேற்று முன்தினம் ராஜினாமா கடிதம் கொடுத்தார். பின்னர் அவர், பா.ஜ.,வில் இருந்தும் விலகினார்.துணை முதல்வர் சிவகுமார், கர்நாடக காங்கிரஸ் பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா முன்னிலையில், நேற்று காங்கிரசில் இணைந்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி:பா.ஜ., என்னை சரியாக நடத்தவில்லை. எனது திறமை அடிப்படையில் பதவி வழங்கவில்லை. இதனால் மனஉளைச்சலுக்கு ஆளாகி, எம்.எல்.சி., பதவியை ராஜினாமா செய்தேன். பல ஆண்டுகளாக எனது விஸ்வகர்மா சமூகத்தை ஒருங்கிணைத்து வருகிறேன். எனது சமூகத்தின் வளர்ச்சிக்கு பா.ஜ., எதுவும் செய்யவில்லை.அமைச்சர் பதவி கொடுக்காமல், என்னை புறக்கணித்தனர். பா.ஜ., ஆட்சியில் இருந்தபோது விஸ்வகர்மா உட்பட பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கு 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்க கோரிக்கை வைத்தேன். ஆனால் எந்த பதிலும் வரவில்லை.காங்கிரஸ் தலைவர் சிவகுமார் என்னுடன் தொடர்பில் உள்ளார் என்று தெரிந்தும், எடியூரப்பா உட்பட பா.ஜ., தலைவர்களிடம் என்னிடம் பேசவில்லை. அவர்களுக்கு நான் தேவை இல்லை என்று தெரிந்த பின்னர், அந்த கட்சியில் இருப்பது சரி இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்