வாசகர்கள் கருத்துகள் ( 2 )
பைக்ல 5 பேர் போனதே தப்பு
தமிழ்நாடுல கூட எங்கு பார்த்தாலும் bike ல் இப்படி தான் travel செய்கின்றனர். ஏதாவது சொன்னா அறிவுரை சொல்றவங்களை பைத்தியம் ஆக்குறாங்க.
ஹாப்பூர்: உத்தரபிரதேசத்தில் பைக் மீது அதிவேகமாக வந்த லாரி மோதிய விபத்தில் 4 சிறுவர்கள் உள்பட 5 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹாப்பூர் போலீஸ்நிலைய எல்லைக்குட்பட்ட புலந்த்ஷெஹர் சாலையில் நேற்றிரவு இந்த விபத்து நடந்துள்ளது. ரபிக் நகரைச் சேர்ந்த டேனிஸ்,40, என்பவர் ஹாப்பூரில் உள்ள நண்பரின் பண்ணை வீட்டில் இருக்கும் நீச்சல் குளத்தில் குளித்து விட்டு, குழந்தைகளுடன் பைக்கில் திரும்பியுள்ளார். இந்த நிலையில், வேகமாக வந்த லாரியின் மீது பைக் மோதியுள்ளது. இதில், டேனிஸ், அவரது இரு குழந்தைகள் மற்றும் சகோதரரின் குழந்தைகள் இருவர் என 4 சிறார்கள் உள்பட 5 பேர் பலியாகியுள்ளனர். இந்த விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் தப்பியோடி விட்டார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பைக்ல 5 பேர் போனதே தப்பு
தமிழ்நாடுல கூட எங்கு பார்த்தாலும் bike ல் இப்படி தான் travel செய்கின்றனர். ஏதாவது சொன்னா அறிவுரை சொல்றவங்களை பைத்தியம் ஆக்குறாங்க.