உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உ.பி., தலைவலி; கவலையில் பா.ஜ.,

உ.பி., தலைவலி; கவலையில் பா.ஜ.,

ஒரு நுாற்றாண்டை கடந்த கட்சியாக காங்கிரஸ் இருந்தாலும், தேர்தல் எப்படி நடத்துவது என்பதை, பா.ஜ.,விடமிருந்து தான் காங்., கற்றுக்கொள்ள வேண்டும் என்பதில், எந்த சந்தேகமும் இல்லை. ஏதாவது ஒரு மாநிலத்தில், ஆண்டு முழுதும் ஏதேனும் ஒரு தேர்தல் நடந்து கொண்டே இருக்கிறது. இப்படி தேர்தலில் களம் கண்ட கட்சியான, பா.ஜ., 2027ல் உத்தரப் பிரதேசத்தில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தல் குறித்து கவலையில் உள்ளது.'பீஹார் தேர்தலில் வெற்றி நிச்சயம்' என்கிற இறுமாப்பில் உள்ள பா.ஜ.,விற்கு, உ.பி., பெரும் தலைவலியாக உள்ளது. 2027 பிப்ரவரி - -மார்ச்சில் உ.பி.,யில் சட்டசபை தேர்தல் நடக்கும். இங்கு, மூன்றாவது முறையாக, பா.ஜ., ஆட்சி அமைத்தால் தான், நான்காவது முறையாக, 2029 பார்லிமென்ட் தேர்தலில், மோடி மீண்டும் வெற்றி பெற முடியும் என, மத்திய பா.ஜ., தலைவர்கள் கருதுகின்றனர்.மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா மற்றும் உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் என, அனைவரின் கவலையும் உ.பி., சட்டசபை தேர்தல் குறித்து தான். இந்த மூவரும், ஒருவருக்கு ஒருவர் எதிராக இருந்தாலும், உ.பி., தேர்தல் விவகாரத்தில் ஒற்றுமையாகி விட்டனர்.மோடியின் கவனம் முழுக்க உ.பி., மீதுதான் என்கின்றனர்; காரணம், உட்கட்சி பூசல்கள். உ.பி., - பா.ஜ., மாநில தலைவர் பூபேந்திர சவுத்ரி. இவரின் பதவிக்காலம், 2023 ஜனவரியில் முடிந்துவிட்டாலும், இவருடைய பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது; காரணம், அடுத்த தலைவரை நியமிக்க முடியவில்லை.முதல்வர் யோகி மற்றும் துணை முதல்வர்கள் கேசவ் பிரசாத் மவுர்யா, பிரிஜேஷ் பதக் ஆகியோரிடையே ஒற்றுமை இல்லை. இதனால் உ.பி., - பா.ஜ.,வின் மாவட்ட நிர்வாகிகளை நியமிக்க முடியவில்லை.இதன் காரணமாக, உ.பி., கட்சி தலைவர்களை, வாரியங்கள் மற்றும் கார்ப்பரேஷன்களின் தலைவர்களாக நியமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது கட்சி தொண்டர்களின் உற்சாகத்தைக் குறைத்துள்ளது. 2027 சட்டசபை தேர்தலில், பா.ஜ., மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்வது கேள்விக்குறியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

RAMAKRISHNAN NATESAN
நவ 09, 2025 14:53

உ.பி., கட்சி தலைவர்களை, வாரியங்கள் மற்றும் கார்ப்பரேஷன்களின் தலைவர்களாக நியமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது கட்சி தொண்டர்களின் உற்சாகத்தைக் குறைத்துள்ளது. ஏன்? சன்பாதிக்க வாய்ப்புக்கிட்டவில்லை என்பதுதானே காரணம் ? அப்போ பாஜக எந்த விஷயத்தில்தான் சுத்தபத்தமான கட்சி ?


RAMAKRISHNAN NATESAN
நவ 09, 2025 14:51

மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா மற்றும் உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் இவர்கள் ஒருவருக்கொருவர் எதிரானவர்கள் ன்னு எந்த பட்சி சொல்லிடுத்து ?


bharathi
நவ 09, 2025 10:13

politics in politics, sure yogi ji will sort it


கடல் நண்டு
நவ 09, 2025 09:27

உ பி தலைவலி என்றவுடன் நான் நம்ம டீம்கா ஊபிஸ் னு நினைத்தேன். ஊபீஸ் தலைவலி தீராதது.. இரும்பு கரம் கொண்ட தல இருக்கும் வரை தொடரும் .. .உத்திர பிரதேச பிரச்சனை சீக்கிரம் சரியாகி விடும்.. சரியாகவில்லை என்றால் , நம்ப மர்ம நபர்கள் ஏதாவது செய்து உதவுவார்கள்.


முருகன்
நவ 09, 2025 12:04

அடுத்த கட்சி பிரச்சினையில் தலையிட்டால் இப்படி தான் நடக்கும்


duruvasar
நவ 09, 2025 09:26

உசுப்பேத்த ஒரு கும்பல் முயற்சி செய்துகொண்டேருக்கிறது .


duruvasar
நவ 09, 2025 08:16

ருபாய் 200 பயனாளிகளுக்கு உற்சாக பானம் வழங்கிய தினமலருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறார்கள்


Svs Yaadum oore
நவ 09, 2025 07:05

ஏதாவது ஒரு மாநிலத்தில், ஆண்டு முழுதும் ஏதேனும் ஒரு தேர்தல் நடந்து கொண்டே இருக்கிறது. இப்படி தேர்தலில் களம் கண்ட கட்சி, பா.ஜ., ...சில டெல்லி தலைவர்கள் சுய நலத்தில் சில நேரம் கட்சிக்கு பின்னடைவு ஏற்படலாம்... ஆனால் தேர்தலில் கரைந்து காணாமல் போக காங்கிரஸ் கட்சி கிடையாது ப ஜா க ...ப ஜா க வின் பலமே கொள்கை அடிப்பையில் அமைந்த தொண்டர்கள் ..... இதை விடியல் கூடிய விரைவில் புரிந்து கொள்ளும் ....


R. SUKUMAR CHEZHIAN
நவ 09, 2025 07:03

பெரிய மாநிலங்களை 4-6 கோடி மக்கள் தொகைக்கு ஒரு மாநிலம் அல்லது புவியியல் ரீதியாக சிறிய பிரதேசமாக பிரிக்க வேண்டும் அப்போது தான் மக்களுக்கு அதிக நன்மைகள் சென்று அடையும் பாரதம் வளர்ச்சி அடையும். அரசியல் மற்றும் ஆட்சி நடத்துவதற்கும் சவுகரியமாக இருக்கும். குறிப்பாக தமிழகத்தை இரண்டாக உ.பியை ஐந்துதாக பிரித்தால் இன்னும் வேகமாக வளர்ச்சி அடையும்.


தமிழ்வேள்
நவ 09, 2025 12:34

உங்கள் கருத்துப்படி முதலில் உடைக்க வேண்டியது தமிழகத்தை... மூன்றாக சிதறடிப்பது தமிழ் & தமிழனுக்கு நல்லது.. நாத்திகம், தேசத்துரோகம் முறையற்ற காமம் போதைப்பொருள் புழக்கத்தை அதிகம் ஊக்குவிக்கிறது...


சுந்தரம் விஸ்வநாதன்
நவ 09, 2025 06:52

பிற கட்சிகளில் உட்கட்சி பிரச்சனைகளை உருவாக்கி, அதில் தான் குளிர்காய்ந்து வெற்றி பெற்றது ஒரு காலம். தன் கட்சியில் தாங்களே கோஷ்டிகளை உருவாக்கி அதன் மூலம் உட்கட்சி பிரச்சனைகளை வளரச்செய்து தலையில் கை வைத்து புலம்புவது ஒருகாலம். அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா .


Iyer
நவ 09, 2025 06:51

2024 லோக்சபா தேர்தலில் பல சீட்டுக்களை இழக்க 3 பெரிய காரணங்கள்: 1. வேட்பாளர்கள் தேர்வில் திறன்பட செயல் படவில்லை. தகுதி அற்றவர்கள் நிறுத்தப்பட்டனர். 2. காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் செயல்படுத்த முடியாத இலவசங்களை வாரி வழங்கினர் 3. இறந்தவர்கள் பெயரில் கள்ள வோட்டு/ சட்டவிரோத குடியேறிகளுக்கு கள்ளத்தனமாக ஓட்டுரிமை