உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உ.பி., காங்கிரஸ் கமிட்டி கூண்டோடு கலைப்பு

உ.பி., காங்கிரஸ் கமிட்டி கூண்டோடு கலைப்பு

புதுடில்லி : உத்தர பிரதேச காங்கிரஸ் கமிட்டியை கூண்டோடு கலைப்பதாக அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று அதிரடியாக அறிவித்தார்.உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு நடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வைவிட காங்., - சமாஜ்வாதி கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. சமீபத்தில் நடந்த ஒன்பது சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், காங்., வேட்பாளர்களை நிறுத்தவில்லை. மாறாக சமாஜ்வாதி கட்சியை ஆதரித்தது. இந்த தேர்தலில் பா.ஜ., அதிக இடங்களை பிடித்தது.இந்நிலையில், உ.பி., காங்கிரஸ் கமிட்டியை ஒட்டுமொத்தமாக கலைப்பதாக அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று அறிவித்தார். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான அறிவிப்பை காங்., பொதுச்செயலர் கே.சி.வேணுகோபால் நேற்று வெளியிட்டார்.வரும் 2027ல் நடக்கவுள்ள உ.பி., சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் புதிய கமிட்டி அமைக்கப்படும் என, அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியை சீரமைக்கும் பணியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காங்., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி