உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 36 இலக்கத்தில் வங்கி கணக்குக்கு வந்த பணம்; எலான் மஸ்கை ஓரம்கட்டிய உ.பி. விவசாயி

36 இலக்கத்தில் வங்கி கணக்குக்கு வந்த பணம்; எலான் மஸ்கை ஓரம்கட்டிய உ.பி. விவசாயி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஹத்ராஸ்; உ.பி.,யில் ஏழை விவசாயி ஒருவரின் வங்கிக் கணக்கில் எண்ணியே பார்க்க முடியாதபடி, 36 இலக்கத்தில் பணம் கையிருப்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது, ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.இதுபற்றிய விவரம் வருமாறு;உ.பி., மாநிலம் ஹத்ராஸ் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் அஜித். ஏழை விவசாயி. இவருக்கு வங்கி கணக்கு ஒன்று உள்ளது. மற்றவர்களை போல, அஜித்தும் தமது வங்கி கணக்கில் பணப்பரிமாற்றம் செய்து வந்துள்ளார்.இப்படியான சூழலில், ஏப்.24ம் தேதி இவரின் வங்கிக் கணக்கில் 2 முறை பரிமாற்றம் நடந்துள்ளது. முதலில் ரூ.1800ம், அதன் பின்னர் ரூ.1.400ம் எடுக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த நாள் தான் அஜித் மட்டும் அல்ல, அவரின் ஒட்டுமொத்த கிராமமும் அதிர்ச்சி அளிக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது.அவரின் வங்கிக்கணக்கில் உள்ள பணத்தின் இருப்பு ரூ. 1,00,13,56,00,00,01,39,54,21,00,23,56,00,00,01,39,542 என்று காட்டி உள்ளது. அதாவது, 36 இலக்கங்களுடன் அவரின் வங்கிக்கணக்கில் பணம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.அடடா.. எண்ணமுடியாத, கணக்கிலே வைக்க முடியாத பணமா என்று அஜித் ஒருபுறமும், அவரின் மனைவி மறுபுறமும் நினைத்து, நினைத்து உள்ளம் பூரிப்படைந்து உள்ளனர். அதன் பின்னர், சைபர் மோசடிகள் பற்றிய செய்திகள், சம்பவங்கள் இருவரின் கண்முன் நிழலாக வந்து போக ஒரு கணம் பயந்து போய் இருக்கின்றனர்.வங்கிக்கு சென்ற அஜித் 36 இலக்க பண கையிருப்பு பற்றி அதிகாரிகளிடம் கூறி இருக்கிறார். ஜம்மு காஷ்மீரில் உள்ள வங்கி கிளையை கண்காணித்த போது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு தான், கவலை வேண்டாம் சரியாகிவிடும் என்று அனுப்பி வைத்திருக்கின்றனர்.வங்கி அதிகாரிகளின் பதிலைக் கேட்ட அஜித்தும் அரைமனதுடன் வீடு திரும்பி இருக்கிறார். ஆனால் அதற்கு அடுத்த நாட்களில் அதே 36 இலக்க பண கையிருப்பு இருக்க, பீதி அடைந்த அவர் நேராக காவல்துறையின் கதவுகளை தட்டி இருக்கிறார். அவரின் பிரச்னையை அறிந்த போலீசார், சைபர் க்ரைமுக்கு அனுப்ப வேண்டிய புகார் என்று கூறி எழுதி வாங்கிவிட்டு போக சொல்லி இருக்கின்றனர்.அதன் பின்னர், நாட்கள் மட்டுமே நகர்ந்ததே தவிர, நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போது அஜித்தின் வங்கி கணக்கு முற்றிலும் முடக்கப்பட்டு இருக்கிறது. அஜித்தின் வங்கி கணக்கில் உள்ள அந்த 36 இலக்க பண கையிருப்பு எவ்வளவு என்று கணக்கிட முடியவில்லை. அவரும், வங்கி அதிகாரிகளும் முயன்றும் விடை கிடைக்கவில்லை. உலகின் ஆக பெரும் பணக்காரர், ஸ்பேஸ் எக்ஸ் முதன்மை செயல் அதிகாரி எலான் மஸ்கின் நிகர மதிப்பை விட அஜித்தின் பண கையிருப்பு அதிகமாக உள்ளது. எலான் மஸ்கின் கையிருப்பு ரூ. 2,84,17,69,27,10,400 என நிர்ணயிக்கப்பட்டது. இது 14 இலக்க எண்ணிக்கையாகும். அதையும் அடித்து நொறுக்கி, அஜித் வங்கிக் கணக்கில் 36 இலக்கத்திலுள்ள ரூ.1,00,13,56,00,00,01,39,54,21,00,23,56,00,00,01,39,542 எப்படி எண்ணுவது என்பது தான் பலருக்கும் புரியாத புதிராக உள்ளது. (இதை எண்ணுபவர்கள் எவ்வளவு என்பதை கமெண்ட்டில் சொல்லலாம்)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Barathan
மே 06, 2025 15:35

One hundred quadrillion, one hundred thirty-five trillion, six hundred billion, one hundred thirty-nine million, five hundred forty-two thousand, one hundred two trillion, three hundred fifty-six billion, one hundred thirty-nine thousand, five hundred போர்ட்டி-டூ. - AI


Thangadurai
மே 06, 2025 06:35

கமென்ட் போடுற எல்லோரும் திமுக மேல பாயிரிங்க?


Thangadurai
மே 06, 2025 06:32

குட்


G. Lakshmi Narayanan
மே 05, 2025 19:38

1 trillion x trillion x trillion Rounded. 1trillion 3. One trillion cube.


Krishnan
மே 05, 2025 12:56

ஒரு கோடி கோடி கோடி கோடி கோடியே, பதிமூன்றாயிரத்து ஐம்பத்து ஆறு கோடி கோடி கோடி கோடியே, நூற்று முப்பத்து ஒன்பது கோடி கோடி கோடியே ஐம்பத்து நாலு இலட்சத்து இருபத்து ஒரு ஆயிரம் கோடி கோடியே இரண்டு கோடியே முப்பத்து ஐந்து இலட்சத்து ஆறு ஆயிரம் கோடியே ஒரு இலட்சத்து முப்பத்தி ஒன்பது ஆயிரத்து ஐநூற்று நாற்பத்தைந்து ரூபாய் கணக்கில் இருந்தும் இப்போது ஒரு ரூபாய் கூட எடுக்க முடியாதே! கௌசிக் சரியாக இது ஒரு கணக்கு எண்கள் தவறாக எழுதப்பட்டு உள்ளன என மிகச் சரியாக ஊகித்து உள்ளார். மேலும் அவர் பதினெட்டு இலக்கத்திற்கு மேல் எழுத முடியாது எனவும் குறிப்பிட்டு உள்ளார். ஆனால் நான் 36 இலக்க எண்களை எண்ணி கமெண்டில் போட்டு உள்ளேன் !


Karthik
மே 06, 2025 10:49

கோடி என்ற மதிப்புக்கு அப்பால் மேலும் சில மதிப்புகள் உள்ளன ஆனால் அது வழக்கத்தில் இல்லை. அவற்றை கீழே தருகிறேன்.. 1.அரபம் 1,000,000,000 = 100 கோடி 2.கரோப் 1,00,00,00,000 = 1,000 கோடி = 100 அரபம் 3.நீல் 1,00,00,00,00,000 = 1,000 கரோப் உங்களின் முயற்சியை பாராட்டுவதோடு உங்களுக்கும், உங்களை போன்று முயற்சிப்பவர்க்கும் இத்தகவல் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.


Karthik
மே 05, 2025 10:43

100135600000139542 100235600000139542 வங்கி ஊழியர் வங்கி கணக்கில் இருந்து மற்றொரு வங்கிக் கணக்கிற்கு பண பரிமாற்றம் செய்யும் போது ஊழியர் செய்த பிழையால் வந்தது தான் இந்த தொகை. உண்மையில் இது தொகையே அல்ல. ஏனெனில் இரு முறை வங்கி கணக்கு எண்ணை தொகையை உள்ளீடு செய்யும் இடத்தில் பதிவிட்டு இருக்கிறார் வங்கி ஊழியர். அதுவே இவ்வளவு பெரிய எண்கள் வர காரணம். இந்த எண்களை கூர்ந்து கவனித்தால் உங்களுக்கே புரியும். அங்குள்ள 36 இலக்கங்களை இரண்டாகப் பிரித்தால், முதல் 18 இலக்கம் ஒரு வங்கி கணக்கு எண், அடுத்த 18 இலக்கம் அடுத்த வங்கி கணக்கு எண் ஆகவும் இருக்கலாம். இவ்விரண்டு எண்களிலும் இடமிருந்து வலமாக நான்காவது இலக்கத்தை தவிர மீதமுள்ள அனைத்து எண்களும் ஒரே எண்கள் தான். தற்போது வரை 18 இலக்கங்களை நம்மால் எழுதவும் படிக்கவும் முடியும். சில நேரங்களில் அதிகபட்சம் 20 இலக்கங்கள் வாய்ப்பு உள்ளது. ஆனால் நான் அறிந்தவரை இந்தியாவில் 20 இலக்கங்களுக்கு மேல் உள்ள எண்களை எழுதுவது சாத்தியமன்று.


Padmasridharan
மே 05, 2025 06:49

வெறும் எண்கள்தான் இப்படியும், அப்படியும் மாறுகின்றன. அதிலிருந்து பணத்தை எடுக்க இயலாது. புகார் அளித்ததும் காவலர்களும் நடவடிக்கை எடுக்கவில்லை, வங்கி கணக்கும் முடக்கிவிட்டார்கள். அவருடைய நிலைமைதான் நிறைய பாரத_இந்தியர்களுக்கு அதிகாரம் செய்யும் அரசாட்களால்


Mani Iyer
மே 04, 2025 23:38

பின்னாடியே IT Raid வரும்


KRISHNAN R
மே 04, 2025 22:15

மிக சரி. ஏ ஐ... யிடம் கேட்டால் கூட பதில் சொல்ல முடியாமல் உள்ளது


V Venkatachalam
மே 04, 2025 22:02

நாங்க முன்னாடி உலக மஹா ஊழல் மன்னன் ஆ ராசா செய்த ஊழல் அளவை கணக்கிட பூஜ்யத்த தனித்தனியாக போட்டு கூட்டிப்பார்த்து மலைத்துபோனோம். அதை ஒப்பிட்டால் இது நல்ல விஷயந்தான். வங்கியாளர்கள் நிச்சயமாக இத சரி செய்து விடுவார்கள்.


சமீபத்திய செய்தி