உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உ.பி யில் டபுள் டெக்கர் பஸ்சில் பற்றியது தீ; குழந்தைகள் உட்பட 5 பேர் பலி!

உ.பி யில் டபுள் டெக்கர் பஸ்சில் பற்றியது தீ; குழந்தைகள் உட்பட 5 பேர் பலி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: லக்னோவில் டபுள் டெக்கர் பஸ்சில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தைகள் 2 பேர் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.பீஹாரில் இருந்து டில்லிக்கு டபுள் டெக்கர் பஸ்சில் 70க்கும் மேற்பட்டோர் சென்று கொண்டிருந்தனர். லக்னோ அருகே பஸ் சென்று கொண்டு இருந்த போது தீ விபத்து ஏற்பட்டது. உள்ளூர்வாசிகளும், தீயணைப்பு படையினருடன் இணைந்து நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.இந்த விபத்தில், குழந்தைகள் 2 பேர் உட்பட 5 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிலர் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், சம்பவ இடத்தில் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தவும் மாவட்ட நிர்வாகத்திற்கு யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

jkrish
மே 15, 2025 19:24

ஊழல் ஒலிக்கும் வரை இந்த சீரழிவுகள் இருக்கும். இதில் எல்லோருக்கும் பங்கு உண்டு


அப்பாவி
மே 15, 2025 12:14

டபுள் இஞ்சின் டபுள் சர்க்கார்.


Raja k
மே 15, 2025 12:08

பேருந்துகளை கவனிக்காத இந்த திராவிடல் மாடல் அரசு ஒழிய வேண்டும், பயணிகளை பாதுகாக்க தவறிய இந்த விடியா அரசு அகற்றப்பட வேண்டும், 5 பேர் பலியானதுக்கு பொறுபேற்று இந்த விடியா திமுக அரசு பதவி விலக வேண்டும், யோகி ஆதிநாதே தமிழக முதல்வரா 2026 ல் பதவி ஏற்க வேண்டும்,


அப்பாவி
மே 15, 2025 11:43

இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.


J.Isaac
மே 15, 2025 17:19

இந்தியாவில் அப்பாவிகள் அதிகம் இருக்கிறதினால் அரசு என்ன சொன்னாலும் நம்புவார்கள். 26அப்பாவிகளை கொன்ற கொடுற பாவிகளை பிடிக்க முடியவில்லை. ஆனால் பயங்கரவாதிகளின் இருப்பிடங்களை இரும்பு கரம் கொண்டு அழித்துவிட்டார்கள். 100 கோடி நீதிபதிக்கு யார் கொடுத்தார்கள் என்பது இன்னும் வெளிவரவில்லை. ஊடகங்களும் கப்சிப். ஆபரேஷன் சிந்தூரில் தீவிரமாகிவிட்டார்கள்


சமீபத்திய செய்தி