உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உ.பி. அரசு மருத்துவமனையில் தீ விபத்து: குழந்தைகள் 10 பேர் பலி

உ.பி. அரசு மருத்துவமனையில் தீ விபத்து: குழந்தைகள் 10 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ; உ.பி.யில் அரசு மருத்துவமனை குழந்தைகள் வார்டில் இன்று இரவு பயங்கர தீ விபத்து சம்பவம் ஏற்பட்டது. இதில் குழந்தைகள் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 17 பேர் பலத்த காயமுற்றனர்.உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டம் ஜான்சி லக்ஷமிபாய் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் குழந்தைகள் வார்டில் இன்று (நவ. 16) இரவு 12 மணியளவில் திடீரென தீ விபத்து சம்பவம் ஏற்பட்டது.

தீ மளமள மற்ற பகுதிகளுக்கும் பரவியது. இச்சம்பவத்தில் குழந்தைகள் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 17 பேர் பலத்த காயமுற்றனர். தகவலறிந்த தீயணைப்பு படையினர், ஏராளமான வாகனங்களில் விரைந்து வந்து தீயை அணைக்க போராடிவருகின்றனர். மின்கசிவு தீ விபத்திற்கு காரணம் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத், துணை முதல்வர், சுகதாரத்துறை செயலர் ஆகியோரை சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணி மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். குழந்தைகள் பலியானது தமக்கு வேதனை அளிப்பதாக தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 16, 2024 08:20

எந்த மாநில அரசு மருத்துவமனையில் நடந்தாலும் பாதிப்பு மக்களுக்குத்தான் ...... இது கழகக் கொடுத்தடிமைகளுக்குப் புரிவதில்லை .....


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 16, 2024 08:08

சுகாதாரத்துறை அமைச்சர் ஜெய் பிரதாப் சிங் பதவி விலகவேண்டும் ... மின்கசிவு என்று தமிழக அரசைப்போல பிரச்னையை முடித்து வைக்காமல் நியாயமான விசாரணை நடத்தப்படவேண்டும் ...


kantharvan
நவ 17, 2024 14:01

சர்தான் ...அப்படியே கேட்டுட்டாலும் அப்புறம் மருத்துவ தலைநகரமாம் தமிழக சுகாதாரத்துறைக்கு இழிவு ஏற்படுத்த திட்டமிட்டே சில சதிவேலைகள் நடப்பதாகவும் அதற்கு சம்ஸ்கிருத பற்று கொண்ட அடிமை அதிகாரிகளின் துணையும் இருக்குதாமே தங்கம் .


kantharvan
நவ 16, 2024 07:02

குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுவதை நிறுத்துங்கள் சிறந்த மருத்துவ கட்டமைப்பிலும் தரமான சுகாதார துறையிலும் மருத்துவ சுற்றுலாவிற்க்காக வருடத்திற்கு பத்து லட்சம் பேர் தமிழ் நாட்டிற்கு வருவதாகவும் இந்தியாவின் மருத்துவ தலைநகரம் தமிழகமே என்று ஒன்றிய அரசின் நிதி ஆயோக் சான்று கொடுத்துள்ளது . கொஞ்ச நாளைக்கு முன்னால் பச்சிளம் குழந்தைகளை குண்டு போட்டு அழித்தாலும் நல்லதுதான் அவர்கள் நாளைய தீவிரவாதிகள் என்று சொன்னவன் எங்கே???


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 16, 2024 08:16

இந்தியாவின் மருத்துவ தலைநகரம் தமிழகமே என்று ஒன்றிய அரசின் நிதி ஆயோக் சான்று கொடுத்துள்ளது ..... பாஜகவின் ஒன்றிய அரசு நல்லபடியா சர்ட்டிபிகேட் கொடுத்தா மட்டும் நம்புவீர்களா பாயி ???? ..... நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அரசு மருத்துவமனையில் சிறுமிக்கு டார்ச் லைட் மற்றும் செல்போன் வெளிச்சத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது ...... இரு தினங்களுக்கு முன்பு வெளியான செய்திதான் ..... இந்த செய்தியைப் படிச்சீங்களா ????


venugopal s
நவ 16, 2024 06:55

தமிழகத்தில் நடந்திருந்தால் திமுக அரசை கழுவிக் கழுவி ஊற்ற ஆட்கள் வருவார்கள், இது நடந்திருப்பது பாஜக ஆளும் உ.பி. மாநிலம். அதனால் அப்படியே கண்டு கொள்ளாமல் போக வேண்டியது தான்!


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 16, 2024 09:02

தமிழகத்தில், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை மாணவர் விடுதிகளில் காலியாக உள்ள, 497 காப்பாளர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறையில் இருந்து ஆசிரியர்களை அனுப்ப முடிவு செய்திருப்பது குறித்து, தனக்கு தெரியாது என, அமைச்சர் மகேஷ் கூறி உள்ளார். இது அதிர்ச்சி அளிக்கிறது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார் ..... இது குறித்து உடன்பிறப்பின் மேலாம் கருத்து என்னவோ ????


Raj
நவ 16, 2024 06:36

எல்லா மாநில அரசு மருத்துவமனைகள் அவலநிலை தான் போல. மாநில அரசாங்கள் தனியார் மருத்துவமனைகளை வளர்க்கிறார்கள். அந்த இலக்கா அமைச்சர்கள் யாரும் சோதனை செய்வதே கிடையாது. இனி புதிய சட்டம் கொண்டு வர வேண்டும், அமைச்சர்களுக்கு எந்த நோய் வந்தாலும் அரசு மருத்துவமனைகளில் தான் சிகிச்சை பெற வேண்டும். திராணியுள்ள அரசாங்கம் இதை நடைமுறை படுத்துமா?


அப்பாவி
நவ 16, 2024 02:48

உ.பி. , அரசு மருத்துவமனை, தீ பரவுது. எங்கேயே கருகின திராவிட மாடல் வாசனை அடிக்குதே கோவாலு.


SANKAR
நவ 16, 2024 00:35

anybody going to comment Yogi has become Dravidian now? !


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை