உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உ.பி., பாஜவில் புகைச்சல்: பிரதமர் மோடியுடன் அமித்ஷா ஆலோசனை?

உ.பி., பாஜவில் புகைச்சல்: பிரதமர் மோடியுடன் அமித்ஷா ஆலோசனை?

புதுடில்லி: உ.பி., பா.ஜ.,வில் கோஷ்டி மோதல் நிலவுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ள நிலையில், லோக்சபா தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு பொறுப்பேற்று, மாநில பா.ஜ., தலைவர் பூபேந்திர சவுத்ரி பதவி விலக முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக பிரதமர் மோடியுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.லோக்சபா தேர்தலில் உ.பி.,யில் பா.ஜ.,வுக்கு ஏற்பட்ட பின்னடைவு தொடர்பாக அம்மாநில தலைவர்கள் டில்லி வந்து மேலிட தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். 2027 ல் நடக்க உள்ள சட்டசபை தேர்தலுக்கு தயாராவது, அதற்கான திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.சமீபத்தில், துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா, ‛‛அரசை விட கட்சி பெரியது. கட்சியை விட யாரும் பெரியவர்கள் அல்ல '' என சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டார். இதனையடுத்து அம்மாநில பாஜ.,வில் உட்கட்சி பிரச்னை ஏற்பட்டு உள்ளதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்தன. இதனை பா.ஜ.,மறுத்துள்ளது.இந்நிலையில் தான், கேசவ் பிரசாத் மவுரியா, பாஜ., தேசிய தலைவர் நட்டாவிடம் யோகி ஆதித்யநாத் புகார் தெரிவித்ததாக தகவல் வெளியானது. அம்மாநில தலைவர் பூபேந்திர சவுத்ரியும் நட்டாவை சந்தித்து, உட்கட்சி பிரச்னை குறித்து விவாதித்ததாகவும் கூறப்பட்டது. பூபேந்திர சவுத்ரி பிரதமர் மோடியையும் சந்தித்தார். இருவரும் கட்சி பிரச்னை குறித்து விவாதித்தாகவும், தோல்விக்கு பொறுப்பு ஏற்று மாநிலத் தலைவர் பதவியில் இருந்து விலக தயாராக உள்ளதாக மோடியிடம் பூபேந்திர சவுத்ரி கூறியதாக என டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இதனிடையே, பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ.,மூத்த தலைவருமான அமித்ஷா ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

venugopal s
ஜூலை 18, 2024 10:01

எத்தனை நாட்களுக்கு தான் அவர்களும் ஒற்றுமையாக இருப்பது போலவே நடிப்பார்கள்?


great kamesh single man
ஜூலை 18, 2024 07:04

இதுவெல்லாம் தேவை தான்......


Vaduvooraan
ஜூலை 17, 2024 20:51

உட்கட்சி பூசல்கள் இல்லாத கட்சிகளே கிடையாது ஆனால் தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து இனிவரும் நாட்களில் இது போன்ற பின்னடைவுகள் ஏற்படாத வண்ணம் நடவடிக்கைகள் மேற்கொள்ள இங்கே ஆர்.எஸ்.எஸ் அமைப்பு உண்டு. எனவே இது காங்கிரஸ் அல்லது ராஷ்ட்ரிய ஜனதா தள், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் விவகாரம் மாதிரி கிடையாது. இதில் மகிழ்ச்சி அடைய ஒன்றும் இல்லை. தவிர இது அத்வானி வாஜ்பாயி காலத்திய பாஜக அல்ல எதிரி எடுக்கும் அதே ஆயுதத்தை கையிலெடுக்க தயங்காத புதிய பாஜக


Barakat Ali
ஜூலை 17, 2024 20:09

அதிருப்தியாளர்களை சமாளிக்க ஒரு துணைமுதல்வர் இனி வலம் வருவார் ..... மந்திரிசபை விஸ்தரிக்கப்படும் .....


Mario
ஜூலை 17, 2024 19:54

தன் வினை தன்னை சுடும்


Sathyanarayanan Sathyasekaren
ஜூலை 17, 2024 20:13

பிறந்த மதத்திர்ற்கு துரோகம் செய்து சொத்துக்கு ஆசைப்பட்டு அந்நிய மதத்திற்கு மாறிய உனக்கும் அதே வினை உன்னை சுடும். அப்போது ஆணியில் தொங்கும் எவரும் வரமாட்டார்கள்.


Sivakumar
ஜூலை 18, 2024 00:21

எல்லா மதங்களும் மனிதனின் கண்டுபிடிப்பே. நீங்கள் வேறுஒரு நாட்டில் பிறந்திருந்தால் ஹிந்து மதம் உங்களுக்கு அந்நிய மதமாய் போயிருக்கும். தெய்வத்தின் சக்தி மனிதன் நிலத்தில் வரையும் ஒரு கற்பனை கோட்டை பார்த்து சுருங்கி விடாது அன்பரே. உண்மையான தெய்வத்தை அறிந்துகொண்ட யாரும் எந்த ஒரு மதத்தையும் பிடித்து தொங்கிக்கொண்டு அதை கேவலம் மனிதர்கள் அளித்துவிடுவார்கள் என்று வெறுப்புடன் அலையமாட்டார்கள்


hari
ஜூலை 17, 2024 19:46

நல்ல கட்சியில் சிறிது புகைய்ச்சல் இருக்கும்.... கொத்தடிமை திராவிடர்களுக்கு அப்படி பழக்கம் இல்லை


Anantharaman Srinivasan
ஜூலை 17, 2024 19:43

தோல்வி ஏற்பட்டால் தான் பூசல்கள் வெளியில் தெரியும்.


Sivakumar
ஜூலை 17, 2024 19:39

ஏதோ காங்கிரஸில் மட்டும்தான் சுயநலவாதிகள், கோஷ்டிகள், உட்கட்சி பூசல் எல்லாம் உண்டு. பிஜேபில் எல்லாரும் தேச பக்தர்கள், தியாகிகள் ன்னு buildup குடுத்தாங்க, அதுவும் போங்கு தானா ?


முருகன்
ஜூலை 17, 2024 19:35

பல அரசியல் கட்சிக்குள் புகைச்சல் ஏற்படுத்தியவர்கள் நிலை இப்படி தான் இருக்கும்


Barakat Ali
ஜூலை 17, 2024 19:17

உ.பி., பா.ஜ.,வுக்குள் கோஷ்டி சண்டை: அகிலேஷ் யாதவ் கண்டுபிடிப்பு ..... இப்படியும் செய்திகள் உண்டு .....


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை