உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டிரான்ஸ்பார்மர் திருட்டால் இருளில் மூழ்கிய உ.பி., கிராமம்

டிரான்ஸ்பார்மர் திருட்டால் இருளில் மூழ்கிய உ.பி., கிராமம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதான்: உத்தர பிரதேசத்தில் டிரான்ஸ்பார்மர் திருடுபோனதால், கிராமத்தில் வசிக்கும் 5,000க்கும் மேற்பட்டோர், 25 நாட்களுக்கும் மேலாக மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர். உத்தர பிரதேசத்தின் புதான் மாவட்டத்தில் சோரா கிராமம் உள்ளது. இங்கு, 5,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தின் உகைதி பகுதியில் 250 கிலோவாட் டிரான்ஸ்பார்மர் நிறுவப்பட்டு இருந்தது. இதன் வாயிலாக, கிராமம் முழுதும் மின்சாரம் வினியோகிக்கப்பட்டு வந்தது. மூன்று வாரங்களுக்கு முன்பு இந்த டிரான்ஸ்பார்மரை கழட்டிய மர்ம நபர்கள், அதிலிருந்த முக்கிய பாகங்களை திருடிச் சென்றனர். இது குறித்து கிராம மக்கள் புகாரளித்ததை அடுத்து, மின்சார வாரியம் விசாரணை நடத்தி வருகிறது. இருப்பினும், கடந்த 25 நாட்களாக, புது டிரான்ஸ்பார்மர் நிறுவப்படாததால், சோரா கிராமம் இருளில் மூழ்கியுள்ளது. இது குறித்து கிராமத் தலைவர் சத்பல் சிங் கூறுகையில், “மின்சாரம் இன்றி குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் பொதுத் தேர்வு நடக்கவுள்ள நிலையில், மின்சாரம் இன்றி மாணவர்கள் தவிக்கின்றனர். “செல்போன்கள் பயன்படுத்த முடியவில்லை. மின் மோட்டார்களை இயக்க முடியாததால் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கு மாவட்ட நிர்வாகத்தினர் விரைவில் தீர்வு காண வேண்டும்,” என்றார். இது குறித்து உகைதி துணை மின் நிலைய இளநிலை பொறியாளர் அசோக் குமார் கூறுகையில், “பாதிக்கப்பட்ட கிராமத்தின் அருகில் உள்ள கிராமத்தில் இருந்து மின் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மின்சாரம் வந்து கொண்டிருந்த கம்பி உட்பட அனைத்தும் திருடப்பட்டுள்ளதால், புதிய டிரான்ஸ்பார்மர் அமைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Ramesh Sargam
ஜன 09, 2025 14:02

டிரான்ஸ்பார்மர் திருடு என்பது அந்த மின்சார துறையினர் உதவி இல்லாமல் நடக்க வாய்ப்பே இல்லை. ஆகையால் அந்த துறையினரை நன்கு விசாரிக்கவும். வேலியே பயிரை மேய்வது என்பது இதுதான்.


Rajalakshmi J
ஜன 09, 2025 10:22

இந்த திருடு நிச்சயம் அமைதி மார்க்கம், குறிப்பாக வங்கதேசம் / rohingya infiltrators செய்திருப்பார்கள். நான் வசிக்கும் வளைகுடா நாட்டிலும் இதே மாதிரி திருட்டு தில்லுமுல்லு வங்கதேசத்தின் அமைதி மார்க்க பிரஜைகள்தான் செய்தனர் .


Yes your honor
ஜன 09, 2025 09:53

உபியிலும் திராவிட மாடல் ஆட்கள் உள்ளார்கள் போல உள்ளது.


J.Isaac
ஜன 09, 2025 11:24

அண்ணாமலையை அனுப்பவும்


சாண்டில்யன்
ஜன 09, 2025 09:34

இது திருட்டல்ல மொத்தத்தையும் பிரிச்சு எடுத்திட்டாங்கன்னா சமூகத்தால் தாழ்த்தப் பட்ட மக்கள் வசிக்கும் அந்த க்ராமத்தின்மீது அரசாங்கமே எடுத்த பழி தீர்க்கும் நடவடிக்கையாத்தான் தெரிகிறது உடனடியாக வேறு டிரான்ஸ்பார்மர் பொறுத்த வக்கில்லையாம் இதுதான் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் லக்ஷ்ணமாம்


நிக்கோல்தாம்சன்
ஜன 11, 2025 05:50

இங்கே சிக்கலே உங்களது புரிதல்தான் , அந்த சிற்றூரில் அனைத்து தரப்பு மக்களும் வசிக்கிறார்கள் , இந்த திருட்டு என்பது எல்லா ஊரிலும் இலவசங்களை பெற்று வாழும் மக்களால் உழைக்கும் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி தான்


Jayaraman
ஜன 09, 2025 09:30

He never think about his parties crime


பாமரன்
ஜன 09, 2025 08:18

நார்மலா கொக்கி போட்டு உரிமையா மின்சாரம் தான் திருடுவானுவோ வடக்கன்ஸ். இது அடுத்த லெவல் போல. வடக்கு முன்னேறிடுச்சு... என்ன ஒன்னு கம்பி ட்ரான்ஸ்ஃபார்மர்லாம் திருடிட்டா மின்சாரம் வராது...திருட முடியாதுன்னு அந்த பகோடா மூளையன்களுக்கு நம்ம நேர்ந்து விடப்பட்ட பகோடாஸ் சொல்லனும்... எல்லாத்துக்கும் காரணமான காங் நேரு அவுரங்கசீப் டீம்கா ஒயிக


Duruvesan
ஜன 09, 2025 08:31

மூர்கன்ஸ்


Kasimani Baskaran
ஜன 09, 2025 07:19

மர்மநபர்கள் கைவரிசையை காட்டாத இடம் எங்கும் இல்லை போல தெரிகிறது. டிரான்ஸபார்மரை சுற்றி மின்வேலி அமைக்கலாம். டீசண்டான தொழில்நுணுக்கத்துக்கு இறங்கிவிட்டால் திருட்டை கண்டுபிடிக்கவே முடியாது - ஐ மீன் அணில் போல கமிஷன் அடித்து விட்டால் எவனும் கேட்கமாட்டான். புல்டோசர் பாபாவுக்கு மட்டும் தெரியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.


RAAJ68
ஜன 09, 2025 07:11

மின்சாரமே இருந்து இருக்காது எனவே மின் மாற்றி இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன என்று ஒரு நல்ல முடிவுக்கு வந்து மின் மாற்றி மை எளிதாக கழற்றி விட்டனர். மின் கம்பிகளையே திருடுகிறார்கள் என்றால் மின்சாரம் தாக்கி இறந்து விட மாட்டார்களா ஒன்றும் புரியவில்லை. ஒரு கால் மின்சாரமே இல்லை கம்பி எதற்கு என்று ஆட்டைய போட்டு விட்டனாரோ. இதுதான் யோகியின் திறமையான அரசு.


KUMARAN TRADERS
ஜன 09, 2025 07:07

இடத்தில் போன் பண்ணதை டெஸ்ட் பண்ணாத வரைக்கும் யார் யாருக்கு போன் போனது அந்த இடத்தில் இருந்து என்று பார்த்தால் கண்டிப்பாக உடனே பிடிக்க முடியும்


அப்பாவி
ஜன 09, 2025 06:15

அதுவா? ரிப்பெருக்கு கொண்டு போறோம்னு அலேக்கா தூக்குட்டுப் போயிருப்பானுக. திருட்டு உ.பி ங்க.