உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரீசார்ஜ் செய்யாத மொபைல் எண்களில் வரும் ஏப்ரல் 1 முதல் யு.பி.ஐ., இயங்காது

ரீசார்ஜ் செய்யாத மொபைல் எண்களில் வரும் ஏப்ரல் 1 முதல் யு.பி.ஐ., இயங்காது

புதுடில்லி: நீண்ட காலமாக ரீசார்ஜ் செய்யாமல் செயலிழந்த நிலையில் உள்ள மொபைல் எண்கள் மற்றும் வேறு சில மொபைல் எண்களில், ஏப்ரல் முதல் தேதியில் இருந்து யு.பி.ஐ., எனப்படும் மொபைல் பணப்பரிவர்த்தனை செயலி இயங்காது என, அறிவித்துள்ளனர். நம் நாட்டில் டிஜிட்டல் பணப் பரிமாற்றத்தை எளிதாக்க, யு.பி.ஐ., முறையை 2016-ல் தேசிய பணப்பரிமாற்றக் கழகம் துவக்கியது. இதன் வாயிலாக பயனர்கள் தங்கள் வங்கிக் கணக்குகளை, மொபைல் எண்ணுடன் இணைத்து ஜிபே, போன்பே உள்ளிட்ட யு.பி.ஐ., செயலி உதவியுடன் எளிதாக பணம் அனுப்பவும், பெறவும், பல்வேறு பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவும் முடியும்.யு.பி.ஐ., வாயிலான டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு மொபைல் எண் மிகவும் முக்கியம். இதன் வாயிலாகவே வங்கி கணக்கு அடையாளம் காணப்படும். இந்நிலையில் குறிப்பிட்ட மொபைல் எண்களில் யு.பி.ஐ., வசதி ஏப்ரல் முதல் தேதியில் இருந்து இயங்காது என, தேசிய பணப்பரிமாற்றக் கழகமான என்.பி.சி.ஐ., அறிவித்துள்ளது. மோசடியை தடுப்பதற்காக இந்த நடைமுறையை அமல்படுத்துவதாகக் கூறியுள்ளனர்.அதன்படி, பின்வரும் எண்களில் யு.பி.ஐ., செயல்பாடு தடை செய்யப்படும்:ரீசார்ஜ் செய்யாததால் அழைப்புகள் அல்லது மெசேஜ்கள் ஆகிய எந்த சேவையும் இல்லாத எண்ணுடன் யு.பி.ஐ., பயன்படுத்துவோர்.மொபைல் எண்ணை மாற்றிவிட்டு தங்கள் வங்கி கணக்கில் தகவலை மாற்றாதவர்கள்.வங்கி கணக்கில் எண்ணை நீக்காமல் தங்கள் மொபைல் எண்ணை சரண்டர் செய்தவர்கள். யு.பி.ஐ.,-யில் உள்ள மொபைல் எண், வேறு யாருக்கேனும் மறு ஒதுக்கீடு செய்யப்பட்டு இருத்தல்.இவ்வாறு உள்ள எண்களுடன் யு.பி.ஐ., செயலியை பயன்படுத்துவோருக்கு பாதிப்பு ஏற்படும்.அவர்கள் உடனடியாக வங்கிக் கிளையை அணுகி, செயல்பாட்டில் உள்ள மொபைல் எண்ணை தங்கள் வங்கிக் கணக்குடன் இணைத்தால் தடையில்லாமல் சேவையை பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Karthik
மார் 22, 2025 09:15

நல்ல முயற்சிதான்..


GMM
மார் 22, 2025 09:03

சேவை வழங்கும் நிறுவன எஸ்.எம்.எஸ்.சி , எண் இல்லை என்றால் , யு. பி. ஐ இயங்காது ? மொபைல் நிறுவனங்கள் யு. பி. ஐ யுடன் ஒத்துழைக்கலாம். வங்கியில் பதிவான செயலில் உள்ள மொபைல் எண், வங்கி எண் , வாடிக்கையாளர் எண் ஒன்று மட்டும் இருக்க வேண்டும். ஒரு வங்கி இரு கிளையில் கால இடைவெளியில் ஒரு வாடிக்கையாளருக்கு இரு வாடிக்கையாளர் எண் இருந்தால், பரிவர்த்தனை இணைப்பு பெற முடியாது. ? யு. பி. ஐ ஒரு சிறந்த சேவை. பிஸ்னல் நெட் கிடைப்பது கடினமாக உள்ளது. கட்டணம் குறைவு. ஏழைக்கு உதவும். மத்திய அரசு நிதி ஒதுக்கி நெட் தேவையை மேன்படுத்த வேண்டும். நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு, மாநில நிர்வாகம் பிஸ்னல் மொபைல் சேவை மட்டும் பயன் படுத்த கட்டாயம் படுத்த வேண்டும்.


RAAJ68
மார் 22, 2025 07:42

ஏர்டெல் மினிமம் ரீசார்ஜ் தொகை 199 ரூபாய். 24 நாட்கள் தான் validity. 2GB data only for 24 days. முன்பு 199 ரூபாய்க்கு 28 டேஸ் வேலிடிட்டி பிளஸ் பிளஸ் 1gb per day. இப்படி சலுகைகளை குறைத்துக் கொண்டே வருகிறது. பயன்படுத்தும் காலத்தை இரண்டு இரண்டு நாட்களாக குறைத்துக் கொண்டே வருகின்றனர். ஆகையால் பெரும்பாலான மக்கள் ஏர்டெல் ஐ ரீசார்ஜ் செய்வது இல்லை. என்னிடமும் ஏர்டெல் சிம் இருந்தது அதை ரீசார்ஜ் செய்யவில்லை. இப்படி என்னைப் போன்று பலர் ஏர்டெல் பயன்படுத்துவதை நிப்பாட்டி விட்டனர்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை