உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தீபாவளிக்கு சிறப்பு ஏற்பாடு செய்ய வலியுறுத்தல்

தீபாவளிக்கு சிறப்பு ஏற்பாடு செய்ய வலியுறுத்தல்

புதுடில்லி:'இந்த ஆண்டின் தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாட, நகரின் அனைத்து பகுதிகளிலும் வெளிச்சம் தரக் கூடிய வழி வகைகளை செய்ய வேண்டும்' என முதல்வர் ரேகா குப்தா, ஊழியர்களுக்கு உத்தரவிட்டு உள்ளார். முதல்வர் ரேகா குப்தா கூறும் போது, ''இந்த தீபாவளி பண்டிகையின் போது கூடுதல் விளக்குகளை ஏற்ற வேண்டும். அதை முன்னிட்டு, சுத்தம் பேணுதலை நம் சமுதாய பொறுப்பாக செய்ய வேண்டும்,'' என்றார். மாநில அரசின் அதிகாரிகளுக்கு, தலைமை செயலர் ராஜீவ் வெர்மா கூறும் போது, ''மக்கள் அதிகம் கூடும் மார்க்கெட்டுகள், குடியிருப்பு வளாகங்கள், மத வழிபாட்டு தளங்கள், பொதுமக்களின் பயன்பாட்டு பகுதிகள் சுத்தப்படுத்தப்பட்டு, கூடுதல் விளக்குகளால் அந்த இடங்கள் மிளிர வேண்டும்,'' என்றார் . இதையடுத்து, சிறப்பு சுத்தப்படுத்தும் முகாம்களை நடத்தி, மக்கள் கூடும் இடங்களை துாய்மைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. எந்தெந்த பகுதிகளில் கழிவுகளை போட்டு வைக்க தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்பதை ஆலோசித்து முடிவெடுக்க அரசு அதிகாரி களுக்கு உத் தரவிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி