உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெங்களூருவில் அமெரிக்க துணை தூதரகம் திறப்பு

பெங்களூருவில் அமெரிக்க துணை தூதரகம் திறப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: பெங்களூருவில் அமெரிக்க துணை தூதரகம் திறக்கப்பட்டது. இப்போதைக்கு விசா சேவை இல்லை; விரைவில் துவங்கும் வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.கர்நாடகா மாநிலம் பெங்களூருவில், இன்று (ஜன.,17) அமெரிக்காவின் துணை தூதரகம் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியாவுக்கான அமெரிக்கா தூதர் எரிக் கார்செட்டி மற்றும் கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=bk0wtlmy&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நிகழ்ச்சியில் ஜெய்சங்கர் பேசியதாவது: பெங்களூரு ஒரு முக்கியமான இடம். இங்கு அமெரிக்கா தூதரகம் வேண்டும் என எரிக் கார்செட்டியிடம் கோரிக்கை விடுத்து இருந்தேன். தற்போது தூதரகம் திறக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நமது தூதரகம் திறக்கப்பட உள்ளது, என்றார்.நிகழ்ச்சியில் அமெரிக்கா தூதர் எரிக் கார்செட்டி பேசியதாவது: பெங்களூருவில் துணை தூதரகம் அமைக்க வேண்டும் என்பது ஜெய்சங்கரின் எண்ணம். இந்த வாக்குறுதி தற்போது நிறைவேற்றப்பட்டு உள்ளது. விசா சேவைகள் உடனடியாக வழங்கப்படாது, ஆனால் விரைவில் விசா சேவை துவங்கும்.எல்லோரும் நீண்ட காலமாக காத்திருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன். நாங்கள் அதிக சுற்றுலாப் பயணிகளையும், மாணவர்கள் வருகையை பார்க்க விரும்புகிறோம். விரைவில் விசா சேவையை கொண்டு வர முயற்சிப்போம். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Ramesh Sargam
ஜன 17, 2025 20:23

நன்றி. எவ்வளவு சீக்கிரம் விசா சேவை துவங்கமுடியுமோ அவ்வளவு சீக்கிரம் துவங்கவும்.


Sundar R
ஜன 17, 2025 15:59

Great men will do Big things. திருட்டு திராவிடர்களாக இருந்தால், ஆசிரியர்கள், போக்குவரத்து ஊழியர்கள், ஓய்வு பெற்றவர்கள் ஆகியோருக்கு சம்பளம், பென்ஷன் ஆகியவற்றை கொடுப்பதற்கு பணம் இல்லை என்பார்கள். சிதிலமடைந்துள்ள பள்ளிக்கூடங்களை செப்பனிட பணம் இல்லை என்பார்கள். மேல்நிலைப் பட்டம் பெற்று ஆசிரியராக பணிபுரிவர்களை பணி நிரந்தரம் செய்யாமல், நான்கு இலக்க சம்பளம் கொடுத்து தற்காலிக ஆசிரியர்களாகவே பல பத்தாண்டுகளுக்கு மேலாக தொடர் விடுவார்கள். ஊதிய உயர்வு கேட்டால், பணமில்லை என்பார்கள். ஆனால், தமிழகமெங்கும் பத்து காசுக்குக் கூட பிரயோஜனம் இல்லாத முறையில் வானுயர்ந்த அளவுக்கு கட்டடங்கள், சிலை எல்லாம் நிறுவி ஈர வெங்காய ராமசாமி, திருட்டு ரயில் கருணாநிதி போன்ற பெயர்களை வைப்பார்கள். கார் ரேஸ், கேலா போட்டி போன்றவற்றை நடத்தி ஊழல் செய்து பணம் பண்ணுவார்கள். இதற்கெல்லாம் காரணம் திராவிடர்கள் என்பது நம் தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியும். திராவிடர்கள் அனைவரையும் தமிழகத்தை விட்டு வெளியே அனுப்ப முடியா விட்டாலும் குறைந்த பட்சம் கருணாநிதி குடும்பத்தினரையாவது தமிழகத்தை விட்டு வெளியே அனுப்பி வைத்தால் தமிழக மக்களின் இன்னல்கள் அனைத்தும் தீரும்.


MARI KUMAR
ஜன 17, 2025 15:24

இரு நாடுகளுக்கு இடையிலான உறவு வலுவடைய வேண்டும்


chennai sivakumar
ஜன 17, 2025 14:28

துணை தூதரகம் என்றால் extension கவுண்டர் மாதிரி ஆகவா???


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை