உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வாய்ப்பேச்சு வன்முறையானது; துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழப்பு; அமெரிக்காவில் தான் இந்த அவலம்!

வாய்ப்பேச்சு வன்முறையானது; துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழப்பு; அமெரிக்காவில் தான் இந்த அவலம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்காவில் பக்கத்து வீட்டாருடன் ஏற்பட்ட சண்டையால் வன்முறை வெடித்தது. இதில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். 2 பேர் பலத்த காயமுற்றனர்.அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் சர்வ சாதாரணம். தனி நபர்கள் துப்பாக்கி வைத்திருக்க அரசு அனுமதிக்கிறது. எனினும் அதை பயன்படுத்துவதற்கும் எண்ணற்ற கட்டுப்பாடுகள் உள்ளன. 18 வயதுக்குட்பட்ட தனிநபர்கள், தண்டனை பெற்ற குற்றவாளிகள் மனநலம் குன்றியவர்கள் உள்ளிட்டோர் துப்பாக்கி வைத்திருக்க தடையும் உள்ளது.. ஆனாலும் துப்பாக்கி சூடு சம்பவம் அடிக்கடி நடக்கிறது. உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

துப்பாக்கிச் சூடு

இந்நிலையில், அமெரிக்காவில் ஹவாய் தீவில் பக்கத்து வீட்டாருடன் ஏற்பட்ட சண்டையால் வன்முறை வெடித்தது. ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கி கொண்டனர். அப்போது ஒருவர் துப்பாக்கியால் பக்கத்து வீட்டில் வசித்து வந்தவர்கள் மீது சுட்டார். தனது குடும்பத்தினரை தாக்கியதும் ஆத்திரமடைந்த பக்கத்து வீட்டுக்காரரும் பதிலுக்கு துப்பாக்கியால் சுட்டார்.

2 பேர் சீரியஸ்

இதில் முதலில் துப்பாக்கி சூடு நடத்தியவர், 3 பெண்கள் என 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பெண்கள் பலத்த காயமுற்று ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Bahurudeen Ali Ahamed
செப் 02, 2024 12:52

துப்பாக்கி வைத்திருக்க கட்டுப்பாடுகளா? துப்பாக்கி வைத்திருப்பதன் அதிகபட்ச காரணமே குற்றம் செய்யத்தானே, வாய்ப்பு கிடைத்தால் பயன்படுத்தத்தானே.


N.Purushothaman
செப் 02, 2024 12:34

தமிழகமும் இதே போல மாறவேண்டும் என்பதற்காக தான் சமூக நீதி காத்தான் அரசு அல்லும் பகலும் அயராது உழைத்து கொண்டு இருக்கிறது ...எவ்வளவு நாளைக்கு தான் வெட்டறது ,குத்துறதுன்னு இருக்கிறது ? குற்றங்களும் குற்றவாளிகளும் அடுத்த நிலைக்கு செல்ல வேண்டாமா ? மாற்றம் ஒன்று தான் மாறாதது ....


venugopal s
செப் 02, 2024 13:30

பாஜகவின் யோகி ஆதித்யநாத் ஆளும் உத்தரப்பிரதேசத்தில் வீட்டுக்கு வீடு கள்ளத் துப்பாக்கி வைத்துள்ளனர், போய்ப் பார்த்து விட்டு வந்து தமிழகத்தை குறை கூறுங்கள்!


RAMAKRISHNAN NATESAN
செப் 02, 2024 12:25

பணம் பணம் என்று அலைந்தால் பொறுமை போய்விடும் ....


vadivelu
செப் 02, 2024 17:01

ஆமாம், அங்கே அறுபது ஆண்டுகளாக அப்படித்தான் இருக்காம். 2020 ல் யோகி 25000 கள்ள துப்பாக்கிகளை கைப்பற்ற செய்தார்.


Ramesh Sargam
செப் 02, 2024 12:07

அமெரிக்க தலைவர்கள், முன்பிருந்தவர்களும் சரி, இப்பொழுது உள்ளவரும் சரி, இனி வரப்போகிறவர்களும் சரி, அமெரிக்காவின் தலையாய பிரச்சினையான இந்த துப்பாக்கிசூடு பிரச்சினைக்கு இதுவரை ஒரு முடிவையும் காணவில்லை, இனியும் காணமாட்டார்கள். ஏன் என்றால் அவர்கள் அங்குள்ள gun lobbyists களிடம் சிக்குண்டு, மீளமுடியாமல் தவிக்கின்றனர். இதில் வெளிநாடுகள் பிரச்சினைகளில் முந்திரி போல முந்திக்கொண்டு சமரசம் செய்யவருவார்கள் இந்த அமெரிக்க தலைவர்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை