உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அமெரிக்க அழுத்தத்துக்கு அடி பணியாத இந்தியா: முன்னாள் அதிகாரி

அமெரிக்க அழுத்தத்துக்கு அடி பணியாத இந்தியா: முன்னாள் அதிகாரி

புதுடில்லி: '' அமெரிக்கா அனைத்து வகைகளிலும் அழுத்தம் கொடுத்து வருகிறது. ஆனால், இந்தியா எதற்கும் அடி பணியாமல், பிராந்திய தன்னாட்சி என்ற கொள்கையை பின்பற்றி வருகிறது ,'' என மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் முன்னாள் செய்தித்தொடர்பாளர் விகாஸ்ஸ்வரூப் கூறியுள்ளார்.இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா அதிபர் டிரம்ப் 50 சதவீத வரி விதித்துள்ளார். இதனால், இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.இதனிடையே, அதிபர் டிரம்ப்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவேரோ கூறுகையில், ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கி வரும் இந்தியாவை தண்டிக்கும் நோக்கிலேயே, 50 சதவீத வரி விதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்தியா அதை நிறுத்தினால் நிச்சயம் கூடுதல் வரி விதிப்பு குறைக்கப்பட்டு, 25 சதவீதம் வரி மட்டுமே விதிக்கப்படும்.இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி வருவதால், கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீதான போரில், ரஷ்யாவுக்கு மறைமுக உதவி கிடைக்கிறது.அந்த நிதி ஆதாரத்தை கொண்டுதான் ரஷ்யா தன் படை பலத்தை உறுதி செய்வதுடன், உக்ரைன் மீதான தாக்குதலையும் தொடர்ந்து வருகிறது- எனத் தெரிவித்து இருந்தார்.இந்நிலையில், இதற்கு பதிலளிக்கும் வகையில், மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் கூறியதாவது: இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவு, தற்போதைய நிலையில் சரியானதாக இல்லை. பிரதமர் மோடிக்கும், அதிபர் டிரம்ப்புக்கும் சமூக உறவு கொண்டுள்ளார் என நாம் நினைத்து கொண்டு உள்ளோம். பிரதமர் மோடியை, டிரம்ப்பும் மதிக்கிறார். இதனால், இந்தியா அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் முடிவாகும் என நினைத்தோம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அது நடக்கவில்லை.இந்தியா மீது அனைத்து வகைகளிலும் அமெரிக்க அதிகாரிகள் அழுத்தம் தருகின்றனர். ஆனால், பெருமை மிக்க நாடாக இந்தியா திகழ்கிறது. பிராந்திய தன்னாட்சி என்ற கொள்கையை கடைபிடித்து வருகிறது. யாரின் உத்தரவுக்கும் நாம் அடிபணிய மாட்டோம்.இரு தரப்பும் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளும் தீர்வை எட்டுவதற்கு இன்னும் நேரம் உள்ளது. டிரம்ப் நிர்வாகத்தால் தற்போதைய சூழ்நிலை பிரச்னைகளுக்கு தீர்வு காண உதவாது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

RAHA
செப் 01, 2025 08:00

உலகத்துக்கு போலீஸ் மாதிரி செயல்படும் அமெரிக்காவை எதிர்த்து எல்லா நாடுகளும் கைகோர்க்க வேண்டும்.


நிக்கோல்தாம்சன்
செப் 01, 2025 04:16

இப்போ இந்தியாவின் ஒரு மாநில ஆட்சி தலைவர் ஜெருமணி நாட்டுக்கு போயிருக்காரு , அங்கே என்னென்ன இன்ஸ்ட்ரக்ஷன் கொடுக்கறாங்களோ வருங்காலம் அந்த ஊடக மாபியா ஆட்சி தலைவரின் நடவடிக்கை மூலம் புரியவைக்கும்


M Ramachandran
ஆக 31, 2025 23:13

நீ யார் எங்களை தண்டிக்க. பெருமானி வேலையெலாம் சோம்பறி நாடுகளிடம் தான் காட்ட முடியும். அதை மோடி தலைமையிலுள்ள இந்தியா நிரூபித்து காட்டியுள்ளது. இதன் பிறகு இஙகுள்ள கருங்ஹாலிகலிய்ய வைத்து பிச்சையய் போட்டு கீழக்கம் பண்ணி பாக்கிறே. அந்த கும்பலின் வேலயும் யின் நடக்காது.அந்த கும்பலுக்கு சீக்கிரம் அப்பு கூராகசீவி வைக்க படும்.உனக்கு ஜால்ரா தட்ட அவர்கள் மக்களை சூறையாடும் பாகிஸ்தான் ராணுவ கும்பல் இருக்கு.அதனிடம் ஏற்கனவேஆ நீ இந்தியாவிற்கு எதிரிடையாக பணத்தைய்ய தூவி நக்க செய்து தீவிரா வாதிகும்பலை வளர்த்து எஙகள்மீது ஏவினாய்.இந்திரா காந்தி பிரதமாராகியிருந்த போனது வாலாட்டிக்கிட்டு இருந்த பாகிஸ்தானையய அடக்க வங்களாதேச விடுதலை போலாரின் போது எஙகள் நாட்டிற்கு மிரட்டல்விட்டாய். ஆப்த நண்பனாய் கேஆட்காமலேயேஆ உதவி புரிந்தது ரஷ்யா. எப்போனதுமேயா எஙகளுக்கு விரோமாதமாக தான் இருந்தாய். இப்பொஅ என்ன பெரிசா வந்துட்ட. அப்பேர்பாட்ட இந்திராவின் வாரிசு நம் நாட்டிற்கு விரோதமாக உன் ஆட்களுடன் சேர்ந்து சுய நலத்திற்கு காட்டி கொடுக்கும் கள்ள தனத்திற்கு தூபம் போட்டாய். போயா மூடிக்கிட்டு. எனக வழியில்நக போரோம். நீ புத்தியை சிறிய நாடுகளான களிடம் வங்காள தேசம் பாக்கி போன்ற உன் சம்மக்களிடம் உன் வித்யைய்ய காட்டு.


Natarajan Ramanathan
ஆக 31, 2025 22:50

அமெரிக்கா அளிக்கும் ஆயுத உதவி மற்றும் பணஉதவிகொண்டே உக்ரைன் ரஷ்யாமீது தாக்குதல் நடத்துகிறது. அந்த உதவிகளை நிறுத்தினாலே இந்த போர் நின்றுவிடும் என்பது ஏன் அமெரிக்காவுக்கு புரியவில்லை?


அப்பாவி
ஆக 31, 2025 21:36

ரஷியா, உக்ரைன் ரெண்டு பார்ட்டிக்கும் போரடிச்சு போர் நின்னுச்சுன்னா எல்லா டாரிஃபும் தானே நீக்கப்படும்.


vivek
செப் 01, 2025 07:47

உனக்கு இருக்கும் அறிவுக்கு டாஸ்மாக் கடையே உனக்கு குடுக்கலாம்


புதிய வீடியோ