உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உத்தரபிரதேச காங்கிரஸ் கமிட்டி கூண்டோடு கலைப்பு; கார்கே அறிவிப்பு

உத்தரபிரதேச காங்கிரஸ் கமிட்டி கூண்டோடு கலைப்பு; கார்கே அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் கமிட்டியை கூண்டோடு கலைப்பதாக, அக்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அறிவித்துள்ளார்.உத்தரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வை விட காங்கிரஸ், சமாஜ்வாதி கூட்டணி கட்சிகள் அதிக இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் சட்டசபை, இடைத்தேர்தல்களில் ஆளும் பா.ஜ., கட்சி அதிக இடங்களை கைப்பற்றியது.இந்நிலையில், இன்று (டிச.,06) உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் கமிட்டியை கூண்டோடு கலைப்பதாக, கட்சித் தலைவர் கார்கே அறிவித்துள்ளார். இது குறித்து, உ.பி., காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் கமிட்டி முழுவதையும் உடனடியாக கலைப்பதற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஒப்புதல் அளித்துள்ளார். 2027ம் ஆண்டு உ.பி., சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் புதிய கமிட்டி அமைக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியை மறுசீரமைக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

Jay
டிச 06, 2024 22:29

அகில இந்திய அளவில் கட்சியை கலைத்து விடுங்கள். அதுதான் நாட்டிற்கும் மக்களுக்கும் நல்லது.


Bhaskaran
டிச 06, 2024 13:33

காந்தி சொன்னதை அப்போவே செஞ்சிருக்கணும் இப்போ கூட குடிமுழிகிப்போகவில்லை கட்சியை இந்தியா அளவில் கலைச்சூடு


Ramesh Sargam
டிச 06, 2024 13:11

அதி விரைவில் இந்தியா முழுவதிலும் காங்கிரஸ் கட்சி காணாமல் போய்விடும், மாயமாக மறைந்துவிடும், அந்த மலேஷியா விமானம் காணாமல் போனது மாதிரி.


Indian
டிச 06, 2024 16:05

கனவு காணு ,, பகல் கனவு


Raj S
டிச 06, 2024 19:10

அப்படி நடந்தால்... அதுவே இந்த பாரத தனித்திரு நாட்டின் பொன்னான நாள்...


SRIDHAAR.R
டிச 06, 2024 12:30

காங்கிரஸை எப்போது கூண்டோடு கலைப்பாரம் ஐயா


Nagarajan D
டிச 06, 2024 12:10

காங்கிரஸ் கும்பலையே கலைச்சிட்டீங்கனா நாடு நல்ல இருக்கும்..முதலில் உங்க கம்பெனி முதலாளியே நாடு கடுத்துனீனா உங்க கம்பெனியும் உருப்படும்


SENTHIL NATHAN
டிச 06, 2024 11:56

ஒரே மாஃபியா குடும்பம் சேர்ந்த மூன்று பேர் எம்.பி பதவியில் இருந்து என்ன செய்ய போகிறார்கள்?????


Kumar Kumzi
டிச 06, 2024 11:39

அடுத்த லோக்சபா தேர்தலுக்குள் இத்தாலிய மாஃபியா கூட்டணி முழுவதையும் கலைத்துவிட்டு இந்திய மக்கள் நிம்மதியாக வாழ வழிவிடுங்கள்


எவர்கிங்
டிச 06, 2024 11:31

யாருமே இல்லாத கடையில் யாருக்காக டீ ஆற்றுகிறார் என்று தெ(பு)ரியலையே!


sankaranarayanan
டிச 06, 2024 11:28

கார்க்கேக்கு முதலில் நன்றாகவே முழுவதும் தெரியும் உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் கமிட்டியை கூண்டோடு கலைப்பதாக, கட்சித் தலைவர் கார்கே அறிவித்துள்ளார். முதலில் அங்கே கூண்டு என்று ஒன்று இருந்தால்தானே கலைப்பதற்கு எதற்கு இந்த வீண் வீராப்பு


Rpalni
டிச 06, 2024 11:20

//உத்தரபிரதேச காங்கிரஸ் கமிட்டி கூண்டோடு கலைப்பு கார்கே அறிவிப்பு...இத்தாலிய மாபியா போலி காந்திகள் ஒழிப்பு எப்போ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை