உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உத்தரகண்டில் கடும் நிலச்சரிவு: யாத்ரீகர்கள் 40 பேர் பத்திரமாக மீட்பு

உத்தரகண்டில் கடும் நிலச்சரிவு: யாத்ரீகர்கள் 40 பேர் பத்திரமாக மீட்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தவித்த யாத்ரீகர்கள் 40 பேரை மீட்புபடையினர் பத்திரமாக மீட்டனர்.உத்தரகண்ட் மாநிலத்தில் கொட்டி தீர்த்து வரும் கனமழையால், பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. கேதார்நாத் தாமில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த போது, பத்ரிநாத் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில், யாத்ரீகர்கள் 40 பேர் சிக்கி கொண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்தனர்.இதையடுத்து, சிக்கித் தவித்த, பக்தர்கள் 40 பேரை மாநில பேரிடர் மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டனர். பல பகுதிகளில், சாலை துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அக்ரகால், சம்பா, ஜாகிந்தர் மற்றும் துக்மந்தர் போன்ற பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது. பல்வேறு இடங்களில் குடிநீர் குழாய் சேதமடைந்துள்ளது. டேராடூன், தெஹ்ரி, நைனிடால் மற்றும் பாகேஷ்வர் மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Nada Rajan
ஜூலை 03, 2025 11:43

யாத்திரீகள் உயிருக்கு மாநில அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும்


Nada Rajan
ஜூலை 03, 2025 11:19

ஜெய்ஹிந்த் பாரத் மாதா கி ஜெய்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை