உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கூகுள் மேப்பால் வந்த வினை; ஆற்றில் வேன் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தில் 4 பேர் பலி

கூகுள் மேப்பால் வந்த வினை; ஆற்றில் வேன் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தில் 4 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் கூகுள் மேப் காட்டிய வழியை பின்பற்றி சென்ற வேன் பனாஸ் ஆற்றில் கவிழந்தது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.கூகுள் மேப் காட்டும் வழியை நம்பி ஏராளமானோர் தனது பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அவ்வப்போது விபத்துகளும் நடக்கிறது. அந்தவகையில், ராஜஸ்தானில் கூகுள் மேப் காட்டிய வழியை பின்பற்றி 9 பேரை ஏற்றி சென்ற வேன் பனாஸ் ஆற்றில் கவிழந்தது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.மேலும் மாயமான ஒருவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. சித்தோர்கரில் உள்ள கனகேடா கிராமத்தில் வசிக்கும் இந்தக் குடும்பத்தினர், பில்வாராவில் உள்ள சவாய் போஜ் கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது விசாரணையில் தெரியவந்தது.இது குறித்து போலீசார் கூறியதாவது: கூகுள் மேப் காட்டிய வழிதடத்தில் சென்று ஒரு குடும்பத்தினர் விபத்தில் சிக்கினர். குறிப்பிட்ட அந்த வழித்தடத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், கூகுள் மேப்பில் அது 'அப்டேட்' செய்யப்படவில்லை. இதனால் தான் வேனில் சென்றவர்கள், கூகுள் மேப் பாதையில் சென்று ஆற்றில் விழுந்துள்ளனர்.இதுவரை, மூன்று பெண்கள் மற்றும் நான்கு வயது சிறுமியின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன, தேடுதல் பணி இன்னும் நடந்து வருகிறது. இந்த விபத்து அதிகாலை 1 மணிக்கு நிகழ்ந்துள்ளது.

அதிகாலை பயணத்தால் விபரீதம்!

நள்ளிரவு நேரம், அதிகாலையில் வாகன பயணத்தை தவிர்ப்பது நல்லது. வாகனம் ஓட்டுபவர், தூக்க கலக்கத்தில் சற்று அசந்தாலும் பெரும் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, இரவு, அதிகாலை நேரங்களில் பயணத்தை தவிர்க்க வேண்டும்.

கமென்ட் செய்யுங்கள்!

கூகுள் மேப் காட்டிய தவறான வழிகாட்டுதல்கள் காரணமாக விபத்துக்கள் அடிக்கடி நடக்கிறது. இதனை தடுக்க என்ன செய்யலாம்? இது தொடர்பாக உங்களது கருத்துக்களை பதிவிடுங்கள் மக்களே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Matt P
ஆக 28, 2025 03:40

கூகுளை மேப் எத்தனையோ பேருக்கு சோறு போடுகிறது. தவறுகள் -விபத்துகள் எந்த தொழில் நுட்பம் காரணமாகவும் அன்கொன்றும் இன்கொன்றுமாக எப்பொதும் எங்கேயும் நடக்கலாம். எல்லாவற்றையும் விட எப்பொதும் நமது மனதை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். கவனம் சாலையில் இருக்க வேண்டும் நம்மை நம்பி பயணம் செய்பவர்களின் பாதுகாப்பும் முக்கியம். குடி குடியை கெடுக்கும்.


Vasan
ஆக 27, 2025 20:14

Google should stop its Google map services immediately, and forever. These lives could have been saved. The travellers would have enquired people and travelled in correct route.


Rathna
ஆக 27, 2025 19:32

நள்ளிரவு மற்றும் அதிகாலை பயணம் என்பது ஒரு வழி பயணம். நீங்கள் ஒழுங்காக ஓட்டினாலும் எதிரில் தூங்கி கொண்டு ஒட்டி வருபவரால் ஆபத்து உள்ளது. நள்ளிரவு 1 மணிக்கு மேல், தூக்கம் மனிதனை வேறு உலகத்திற்கு கொண்டு செல்லும். மிக மோசமான ஜாதக நிலை உள்ளவர்கள், கடுமையான பாவத்தை கழிக்க வேண்டியவர்கள் அமானுஷ்ய சக்திகளால் ஆதிக்கம் செலுத்தப்படுவார்கள். இதனால் உயிரிழப்பு தவிர்க்க முடியாத நிலை ஏற்படும். இதில் ஜாதக பலம் உள்ளவர் 1-2 பேர் பிழைத்து கொள்வார்கள். இது இறை சக்தியின் செயல்.


ديفيد رافائيل
ஆக 27, 2025 19:29

Google map ஐ reference க்காக மட்டுமே பயன்படுத்தலாம். இதையே முழுக்க முழுக்க நம்பும் வரை இப்படி தான்


oviya vijay
ஆக 27, 2025 19:04

திராவிடன் தலைமை பொறுப்பு வகிக்கும் கூகிளுக்கு இப்படி ஒரு சோதனை...


வாய்மையே வெல்லும்
ஆக 28, 2025 00:15

திராவிடன் கூடத்தான் சாராயம் விற்று பெண்களின் தாலிய அறுத்து.. வயித்தெரிச்சலை கொட்டிக்கிறான். அதையும் ஓவியன் சொல்ல thayanguvathen.?


D.Ambujavalli
ஆக 27, 2025 16:43

எதிரில் ஆறு ஓடுவது கூடவா கன்னுக்குத் தெரியவில்லை ? ஆற்றைக்கண்ட்தும் reverse எடுத்திருக்கலாமே


அப்பாவி
ஆக 27, 2025 16:02

கூப்பூடு சுந்தரை. குத்துடா மெடலை...


VSMani
ஆக 27, 2025 16:00

ஒருமுறை நெல்லையில் தாழையுத்து அருகில் உள்ள ஒரு பள்ளிக்கு கூகுள் மேப் போட்டு போனேன். அது ஒரு காட்டுக்குள், குளக்கரை காட்டுப்பகுதிக்கு, ஆண்கள் காலைக்கடன் கழிக்கும் பகுதிக்கு கூட்டிச்சென்றது. இருபுறமும் உடைமரங்கள். மிகவும் சிரமப்பட்டு வண்டியை ரிவர்ஸ் எடுத்து வந்தேன். அது முதல் கூகுள் மேப் பயன்படுத்திடுவதே கிடையாது. ஒரு ஆட்டோக்காரரிடம் கேட்டால் கூட வழியை ஒழுங்காக சொல்லுவார்.


உண்மை கசக்கும்
ஆக 27, 2025 15:03

கூகுளை குறை சொல்வது கொடுமை சாமி. தடை செய்யப்பட்ட பகுதியை யார் கூகுளுக்கு சொல்லணும். காவல்துறை. காவல்துறை.


Sundaran
ஆக 27, 2025 13:47

எதிரில் அவ்வளவு பெரிய ஆறு இருப்பது கூட கண் தெரியாமலா போய்விட்டது தூக்கம் அல்லது குடியாக இருக்க வேண்டும்


புதிய வீடியோ