உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உ.பி.,க்கு வந்தா சட்னி; ஹிமாச்சலுக்கு வந்தா ரத்தமா; கடை பெயர் பலகை வைக்க காங்., அரசு உத்தரவு

உ.பி.,க்கு வந்தா சட்னி; ஹிமாச்சலுக்கு வந்தா ரத்தமா; கடை பெயர் பலகை வைக்க காங்., அரசு உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சிம்லா: ஹிமாச்சல பிரதேசத்தில் உணவகங்கள் மற்றும் ரெஸ்டாரண்ட்களின் பெயர் பலகைகளில் உரிமையாளர் மற்றும் ஊழியரின் பெயர் இடம்பெற வேண்டியது கட்டாயம் என அம்மாநில அரசு அறிவித்து உள்ளது.உத்தர பிரதேசம், உத்தரகண்ட் மாநிலங்களில் கன்வர் யாத்திரை நடப்பது வழக்கம். கடந்த ஜூலை 6 முதல் ஆக., 6 வரை இந்த யாத்திரை நடந்தது. இந்த யாத்திரை நடக்கும் வழிகளில் உள்ள உணவகங்களின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களின் பெயர் அடங்கிய பலகையை வாடிக்கையாளர் கண்ணில்படும்படி மாட்டி வைக்க உத்தரபிரேதசம், உத்தரகண்ட் மற்றும் ம.பி., மாநில அரசுகள் உத்தரவிட்டன. இது அப்போது பலத்த சர்ச்சையை எழுப்பியது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டன. காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், இதை கடுமையாக குறை கூறின.இந்நிலையில், இதேபோன்ற உத்தரவை காங்கிரஸ் ஆளும் ஹிமாச்சல பிரதேச அரசும் பிறப்பித்து உள்ளது. அம்மாநிலத்தில் உள்ள உணவகங்கள் மற்றும் ரெஸ்டாரண்ட்களின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களின் பெயர் அடங்கிய பலகையை வைக்கும்படி உத்தரவிடப்பட்டு உள்ளது. வரும் ஜனவரி மாதம் முதல் அமல்படுத்த மாநில அரசு முடிவெடுத்துள்ளது.இது தொடர்பாக அமைச்சர் விக்கிரமாதித்யா சிங் கூறியதாவது: உ.பி.,யை போல் இந்த உத்தரவை கடுமையாக அமல்படுத்த போகிறோம். நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் மற்றும் உள்ளாட்சி துறை இணைந்து இந்த முடிவை எடுத்துள்ளன. உணவு குறித்த மக்களின் அச்சத்தை போக்க இந்த முடிவெடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

NAGARAJAN
செப் 26, 2024 10:28

அப்போ, பாஜக யோக்கியமா


Nandakumar Naidu.
செப் 26, 2024 10:02

காங்கிரஸ் நாட்டிற்கும்,சமூகத்திற்கும் ,வீட்டிற்கும் கேடு. அழிக்க பட வேண்டிய தீய சக்தி.


Barakat Ali
செப் 26, 2024 08:36

ஹிந்துக்கள் விழித்துக்கொண்டார்கள் ..... மத நல்லிணக்கத்தை ஹிந்துத்வாவாதிகள் கெடுக்கிறார்கள் என்று அதை திசை திருப்பாமல் இஸ்லாமியர்கள் நடந்துகொள்ளவேண்டும் .... ஹிந்துக்களை நம்பி பிழைக்கிறோம் ... நமது பிசினஸை வளர்ப்பதற்காக நாம் ஹிந்துவாக நடித்து ஏமாற்ற நினைப்பது தவறு .... எல்லாவற்றையும் அல்லாஹ் மன்னிப்பான் என்று நினைப்பது மடமை .....


N.Purushothaman
செப் 26, 2024 12:29

நல்லா சொன்னீங்க ...அவ்வாறு செய்பவர்கள் கண்டிப்பாக அடிப்படைவாத சக்திகளின் தாக்கத்திற்கு ஆளாகி இருப்பார்கள்... அவர்களின் மனம் மாற அந்த கடவுள் தான் அருள் புரியனும் ...


RAMAKRISHNAN NATESAN
செப் 26, 2024 08:03

உ பி அரசு செய்த போது மூர்க்கர்கள் விண்ணுக்கும் மண்ணுக்கும் குதித்தார்களே ???? அப்போது அது உலகளவில் ட்ரெண்ட் ஆக்கப்பட்டது ........


Kumar Kumzi
செப் 26, 2024 07:21

ஸ்டிக்கர் ஓட்டுவதில் தீய சக்தி திமுக கொன்கிரேஸ் இடையே போட்டாபோட்டி


N.Purushothaman
செப் 26, 2024 07:16

அதே போல சிறுபான்மை மதத்தை சார்ந்தவர்கள் சனாதன கடவுளின் பெயர்களை அல்லது அந்தந்த இந்துக்களின் வட்டார சொற்களை தங்களின் தயாரிப்புக்களுக்கு பயன்படுத்தி அதை சந்தைப்டுத்தி கொண்டு இருக்கிறார்கள் ..இதை எல்லாம் எப்போது கட்டுப்படுத்த போகிறார்கள் ?


krishnamurthy
செப் 26, 2024 07:15

இனியாவது தவிர்க்கலாம்


Rajan
செப் 26, 2024 06:32

வெளிநாடுகளில் ஜனநாயகம் படுகொலை என கூவும் பப்பு, இந்தியா வந்தால் நிறம் மாறும் பச்சோந்தி என்ன சொல்ல போகிறார்.


Bellie Nanja Gowder
செப் 26, 2024 06:28

ஆக எந்த நல்ல காரியம் செய்தாலும் அது பி ஜெ பி செய்தால் அதை கண்ணை மூடி கொண்டு எதிர்க்க வேண்டும் என்பதுதான் கோங்கிகளின், மற்றும் எதிர்க்கட்சிகளின் மூடத்தனமான கொள்கை.


nagendhiran
செப் 26, 2024 05:53

இவ்வளவுதாங்க காங்கிரஸ்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை