மேலும் செய்திகள்
வழிப்பறி வழக்கில் தலைமறைவானவர் கைது
26-Aug-2025
புதுடில்லி:கொலை வழக்கில் ஓராண்டாக தலைமறைவாக இருந்த காய்கறி வியாபாரி சிக்கினார். கடந்த 2024ல், நவ்ஷத், 19, மற்றும் ஆசிப், 29, ஆகியோரை துப்பாக்கியால் ஒரு கும்பல் சுட்டது. நீண்ட காலமாக நிலவும் முன் விரோதத்தில் இவர்கள் மீது ஷகீல், வகீல் மற்றும் அவர்களின் கூட்டாளியான பிரின்ஸ் ஆகியோர் துப்பாக்கியால் சுட்டனர். இதில், ஆசிப் உயிர் தப்பினார்; நவ்ஷத் சிகிச்சையின் போது உயிரிழந்தார். இதையடுத்து, அந்த மூவர் மீதான வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டது. ஷகீல் மற்றும் பிரின்ஸ் கைது செய்யப்பட்ட நிலையில், ஓராண்டுக்கும் மேலாக வகீல் மாலிக் என்பவர், போலீஸ் பிடியில் சிக்காமல் தலைமறைவாக இருந்தார். இந்நிலையில், டில்லியில் உள்ள வல்லபகார் மெட்ரோ ஸ்டேஷன் அருகே நின்றிருந்த வகீலை, போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். கொலையாளியான அவரிடம் நடத்திய விசாரணையில், ஓராண்டுக்கும் மேலாக போலீஸ் பிடியில் சிக்காமல் இருந்தது தெரிய வந்தது. மனைவி மற்றும் மூன்று குழந்தைகளை கொண்ட காய்கறி வியாபாரியான வகீல், பால்ஸ்வா டைரி அருகே வசித்து வந்தார். இப்போது அவரை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
26-Aug-2025