உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பனிமூட்டத்தால் ஏற்பட்ட விபத்து: டில்லி - ஆக்ரா சாலையில் பஸ்கள் தீப்பற்றியதில் 13 பேர் பலி

பனிமூட்டத்தால் ஏற்பட்ட விபத்து: டில்லி - ஆக்ரா சாலையில் பஸ்கள் தீப்பற்றியதில் 13 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லி - ஆக்ரா விரைவுச் சாலையில், அதிகாலையில் பனிமூட்டம் காரணமாக, 6 பஸ்கள் மற்றும் 2 கார்கள் அடுத்தடுத்து மோதி தீப்பற்றிக் கொண்டன. இந்த சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 25க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.டில்லியில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் சாலையில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே செல்கின்றன. இந்த சூழலில், பனிமூட்டம் காரணமாக, அடர்ந்த மூடுபனி காரணமாக ஆறு பஸ்களும், இரண்டு கார்களும் அடுத்தடுத்து மோதிக் கொண்டன. பின்னர் தீப்பற்றி எரிய தொடங்கியது. முதலில் ஒரு பஸ்சில் தீப்பற்றியது.

4 பேர் பலி

பிறகு அடுத்தடுத்து பஸ்களில் தீ வேகமாக பரவியது என நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே பல தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் போலீசார் விரைந்தனர். மீட்பு பணிகள் தீவிரமாக நடந்தது. இந்த விபத்தில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். 25க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.பல வாகனங்கள் முற்றிலுமாக எரிந்து சாம்பலானதால், பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணும் பணியில் சிக்கல் நீடிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அதிகாலை நேரத்தில் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் அதிகாலை பயணத்தை தவிர்க்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

முதல்வர் யோகி இரங்கல்

இந்த விபத்து குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் வெளியிட்டுள்ள அறிக்கை: மதுரா மாவட்டத்தில் யமுனா விரைவுச் சாலையில் நடந்த விபத்தில் உயிர் இழப்பு மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த சம்பவம் மனவேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். காயம் அடைந்தவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விரைவாக குணமடையவும் நான் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Amar Akbar Antony
டிச 16, 2025 11:44

ஏதோ ஒன்றிய அரசும் டில்லி அரசும் மனப்பூர்வமாக உருவாக்கிய பணிமூட்டம் என்பதுபோல கருதவேண்டாம். இதில் மனிதத்தவறுகள் உள்ளன. வாகனத்தை மெதுவாக செலுத்தியிருந்தால் ஒருவேளை இழப்புகள் தவிர்த்திருக்கலாம். இருந்தாலும் தொழில்நுட்பம் பயன்படுத்தி குறையினை நிவர்த்தி செய்யலாம். ஆங் இங்கே சென்னையில் ஒவ்வொருவருடமும் மழைவந்து பாதிப்பு வருகிறதே. உபிசுக்கள் வாய்மூடி மௌனமாகி இருப்பது ஏனோ? நான்காயிரம் கோடி முழுங்கியபின்னரும் தொடர்வது ஏனோ?


பாமரன்
டிச 16, 2025 10:30

வருடாவருடம் இந்த காலங்களில் நடக்கும் நிகழ்வு தான் இந்த பனிமூட்டம். டில்லி பூலோக ரீதியாக இருக்கும் அமைப்பு மற்றும் அளவிற்கதிமான கட்டுமானங்கள் மற்றும் வாகன புகையால் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிட்டே போகுது. அங்கே இந்த நேரத்தில் பயணித்தவர்கள் அறிவார்கள் எவ்வளவு ரிஸ்க் என்று. நான் தொழில் நிமித்தமாக சிலமுறை பயத்துடன் பயணம் செய்திருக்கிறேன். நாம் கனவிலும் நினைக்க முடியாத கொடூரமான சூழ் நிலை அது. எந்த அரசையும் அல்லது வைக்கோல் எரிப்பதையும் மட்டுமே குறை சொல்லிட்டு இருக்காமல் தொழில்நுட்பம் பயன்படுத்தி சேதங்களை தவிர்க்க நடவடிக்கைகள் எடுக்கனும்.


nisar ahmad
டிச 16, 2025 10:25

மக்களை பாதுகாக்காமல் கொல்கிறது.


ஜெய்ஹிந்த்புரம்
டிச 16, 2025 08:23

That is more like smog, not fog. பனிமூட்டம் அல்ல புகைமூட்டம். தூங்கும் ஒன்றிய, மற்றும் டில்லி பாஜக ஓட்டை எஞ்சின்.


இறைவி
டிச 16, 2025 09:01

ஒன்றிய அரசும், டெல்லி அரசும் வயல் கழிவுகளை எரித்து smog வரவில்லை. அவை பஞ்சாப் விவசாயிகள் கோதுமை, நெல் வைக்கோலை எரிப்பதால் உண்டாகிறது. இந்த பிரச்சனை பல வருடங்களாக உச்ச நீதி மன்றம் வரை விவாதிக்கப் பட்டுள்ளது. மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுத்தால் உடனே தேறாத இண்டி கூட்டணி விவசாயிகள் என்று ஒரு வெட்டி கும்பலை சேர்த்துக் கொண்டு அழிச்சாட்டியம் செய்யும். அது பற்றி பேசாமல் பிஜேபியையும் டெல்லி பிஜேபி அரசையும் மட்டும் குறை கூற இருநூறு உபியின் பக்தி மெய் சிலிர்க்க வைக்கிறது. கத்தியை தவறாக உபயோகப்படுத்தினால் ஒரு நாள் அது உங்களையும் காயப் படுத்தும்


Thravisham
டிச 16, 2025 09:31

ஓசி பிரியாணியை தின்னுட்டு ரெண்டு கைய நீட்டி 200 ரூவா வாங்குற சந்தோசத்த நாட்டு நலன்ல காமிங்க உடன் பருப்பே


ஜெய்ஹிந்த்புரம்
டிச 16, 2025 09:54

டெல்லி எதிரிகட்சியாக இருந்த போது ஆளும்கடசியின் நடவடிக்கைகளை கிண்டலடித்து எதிர்த்தது, ஆளும் கட்சியாக இருக்கும் போதோ ஒரு தெளிவுமல்லாமல் இதை பற்றி விவாதிக்க திராணியில்லாமல் இருப்பது- இரண்டுமே பாஜக.


Skywalker
டிச 16, 2025 12:18

I KIND REQUEST FOR ALL PRO BJP, I ALSO SUPPORT BJP, BUT IF SOMEONE POSTS A MESSAGE CRITISIZING THE BJP GOVERNMENT, REPLY WITH VALID AND LOGICAL ARGUMENTS IF YOU CAN, INSTEAD OF MAKING PERSONAL REMARKS LIKE BIRYANI, 200 RUPEES, TASMAC, QUARTER, ARIVAALAYAM ETC, A KIND REQUEST TO KEEP THIS DISCUSSION FORUM CIVIC


பாமரன்
டிச 16, 2025 12:59

நல்ல யோசனை...


Venugopal S
டிச 16, 2025 18:11

உங்களைப் போல் நல்ல மனிதர்கள் ஓரிருவர் உள்ளனர்.மகிழ்ச்சி!


VENKATASUBRAMANIAN
டிச 16, 2025 08:18

மக்களுக்கு எல்லாவற்றிலும் அவசரம். முடிந்தவரை இந்த காலங்களில் பயணத்தை தவிர்க்க வேண்டும்.


பிரேம்ஜி
டிச 16, 2025 08:00

மிகவும் வருத்தமான நிகழ்வு! கொடுமையான சாவு! ஆத்ம சாந்திக்கு இறைவனை வேண்டுகிறோம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை