| ADDED : பிப் 10, 2024 11:52 PM
துமகூரு : மாய மாந்திரீகம் செய்த கவுரவ ஆசிரியர் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.துமகூரு, குனிகல்லின் மோதுார் கிராமத்தில் வசித்தவர் மரியப்பா, 47. இவர் கிராமத்தின் அரசு தொடக்க பள்ளியில், கவுரவ ஆசிரியராக பணியாற்றினார். இவர் மாய மாந்திரீகத்தில் ஆர்வம் கொண்டவர்.இவர் நேற்று முன் தினம் அமாவாசையை ஒட்டி, மாந்திரீகம் செய்வதற்காக எங்கோ சென்றிருந்தார். இரவு பைக்கில் ஊருக்கு திரும்பினார். வழியில் அவரை வழிமறித்த மர்மகும்பல், ஆயுதங்களால் தாக்கிக் கொலை செய்து, உடலை வயலில் வீசிவிட்டுத் தப்பியது.நேற்று காலை இந்த வழியாக சென்ற சிலர், இதை கவனித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த குனிகல் போலீசார், உடலை மீட்டு விசாரணையை துவக்கினர்.