உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 17 ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்ட மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு ?

17 ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்ட மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு ?

மும்பை: மலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மஹாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் உள்ள மாலேகான் என்ற இடத்தில், 2008 செப்., 29ல் பயங்கர குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் ஆறு பேர் உயிரிழந்தனர்; 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.இது தொடர்பாக, பா.ஜ., முன்னாள் எம்.பி., பிரக்யா சிங் தாக்குர், லெப்டினன்ட் கர்னல் பிரசாத் புரோஹித் சமீர் குல்கர்னி, ராஜா ரஹீர்கர்,, சுவாமி அம்ரூதானந்த், சுதாகர் சதூர்வேதி உள்ளிட்ட ஏழு பேர் மீது, சட்ட விரோத தடுப்பு நடவடிக்கைகள் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.இந்த வழக்கு விசாரணை, மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதில் பிரக்யா சிங் தாக்கூர் உட்பட, குற்றம் சாட்டப்பட்ட அனைவரும், ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். மொத்தமுள்ள, 323 சாட்சிகளில், 130 பேரிடம், விசாரணை கடந்த ஏப்ரலில் முடிவடைந்து விட்டது. 17 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வந்த இந்த வழக்கினை சிறப்பு நீதிபதி ஏ.கே.லஹோட்டி விசாரணை நடத்தி தீர்ப்பு வெளியிட உள்ளார். . முன்னதாக ஜாமினில் உள்ள 7 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக இந்த வழக்கினை விசாரணை நடத்தி வந்த நீதிபதி ஏ.கே.லஹோட்டி திடீரென , நாசிக் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்து மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Rathna
ஜூலை 31, 2025 11:49

எப்படி பொய் வழக்கு போடலாம் என்பதற்கு சட்ட மாணவர்களால் கட்டாயம் படிக்க வேண்டிய ஒரு கேஸ்.


Rathna
ஜூலை 31, 2025 11:33

ஜிஹாதி தீவிரவாதத்தை மறைக்க ஹிந்து தீவிரவாதம் என்ற சொல் கண்டுபிடிக்கப்பட்டது. அப்பாவி மக்கள், தேசபக்தி உள்ள ராணுவ வீரர்கள், வேண்டும் என்றே இந்த வழக்கில் சேர்க்கப்பட்டனர். சாட்சிகள் உண்டாக்கப்பட்டனர். கள்ள பொருட்கள் அப்பாவிகளின் வீடுகளில் புதைக்கப்பட்டு மறைமுக சட்ட ஆயுதமாக உண்டாக்க பட்டது.


நசி
ஜூலை 31, 2025 11:22

பிரதமர் ராஜிவ் காந்தி +40 பேர் படு கொலை செய்த பாதகர்கள் உத்தமர்கள்.. கோவை வெடிகுண்டு பாஷா மத நல்லினக்கம் கொண்டவர். திமுகவினர் திகவின் உலகம் போற்றும் உத்தமர்கள் என்று கேவலமான எண்ணம் உடைய அனைவரும் மாலேகான் குண்டு வெடிப்புக்கு காரணமானஅனைவரும் ஆசிட்டில் போட்டு எரித்து நீதி வழங்க வேண்டும் என்று துடிக்கின்றனர்


AMMAN EARTH MOVERS
ஜூலை 31, 2025 09:13

பாஜக அரசினால் இவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள்


SUBBU,MADURAI
ஜூலை 31, 2025 10:13

பாஜக அரசினால் அல்ல நீதிபதிகளால் விடுதலை செய்யப் படுவார்கள்.


sribalajitraders
ஜூலை 31, 2025 10:37

இப்போ நீதி மன்றங்களும் நீதிபதிகளும் பிஜேபி யின் மற்றும் ஒரு பிரிவாக மாறிவிட்டது


SANKAR
ஜூலை 31, 2025 11:32

then why judge was transferred suddenly?


pAt.51
ஜூலை 31, 2025 11:58

உனக்கு எரிஞ்சா ஏதாவது வாங்கி குடி


SUBBU,MADURAI
ஜூலை 31, 2025 05:06

இந்த மாலேகான் குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப் படுவார்கள். காரணம் அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப் படாததால் அல்ல இவர்கள் குற்றமே செய்யாதவர்கள் என்பதுதான் உண்மை. அப்போது பிரதமராக இருந்தவர் மன்மோகன் சிங். காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்தவர் சோனியாகாந்தி, மஹாராஸ்ட்டிராவின் முதல்வராக இருந்தவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விலாஸ்ராவ் தேஷ்முக் என்பவர். இந்த குண்டுவெடிப்பில் முதன் முதலில் குற்றம் சாட்டப் பட்டது சிமி (SIMI) என்கிற இந்திய மாணவர்கள் இஸ்லாமிய இயக்கம் மற்றும் ஹர்கத் உல் ஜிஹாத் அல் இஸ்லாமி என்கிற இந்த இரண்டு தீவிரவாத அமைப்புகளும்தான். ஆனால் அப்போதுள்ள காங்கிரஸ் அரசு இந்த உண்மையை மறைத்து இந்துக்களின் மீது காவி தீவிரவாதம் என்ற பழியை போட்டு முஸ்லீம் தீவிரவாத இயக்கங்களை இதில் சேர்க்காமல் விசாரனையை வேறு பக்கம் திருப்பியது. அதற்கு அவர்கள் கூறிய காரணம் வெடிகுண்டு வைக்கப் பட்டிருந்த சைக்கிள்கள் பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்தவளுடையது என்ற ஒரு சப்பை காரணத்தை கூறி அந்த அமைப்பில் உள்ள பிரக்யாசிங் தாக்கூர், உள்ளிட்ட 16 பேர்கள் மீது பொய் குற்றம் சாட்டி அவர்களை சிறையில் அடைத்தது. இப்படி குற்றம் சாட்டப் பட்டவர்களில் ஏழு பேர் ஐந்து ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டனர் பிறகு ஜாமீனில் வெளிவந்தனர். அந்த ஏழு பேர்கள்: சாத்வி பிரக்யா சிங் சந்திரபால் சிங் தாக்குர், லெப்டினன்ட் கர்னல் பிரசாத் புரோகித் (ஓய்வு), மேஜர் ரமேஷ் உபாத்யாயா (ஓய்வு), சமீர் குல்கர்னி என்ற சாணக்ய சமீர், அஜய் என்ற ராஜா ரஹிர்கர், சுதாகர் பன்டாலி, தர்வாலி தேவ்தீர்த் மற்றும் சுதாகர் ஓங்கர்நாத் சதுர்வேதி என்ற சாணக்ய சுதாகர். இந்த வழக்கில்தான் இன்று தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது.


Kasimani Baskaran
ஜூலை 31, 2025 03:51

தள்ளுபடி செய்யப்பட இந்திய ஜோடிக்கப்பட்டுள்ள ஒரு வழக்கு.


முக்கிய வீடியோ