உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேச விரோத கருத்தரங்கு; தடுத்து நிறுத்திய துணைவேந்தர்

தேச விரோத கருத்தரங்கு; தடுத்து நிறுத்திய துணைவேந்தர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம் : இந்தியா - பாகிஸ்தான் போரை கொச்சைப்படுத்தும் விதமாக கேரள பல்கலையின் தமிழ்த்துறை நடத்தவிருந்த கருத்தரங்கு, தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக பல்கலை துணைவேந்தர், 'வீடியோ' வெளியிட்டுள்ளார்.இதுகுறித்து, கேரள பல்கலையின் துணைவேந்தர் டாக்டர் மோகனன் குன்னும்மல் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியதாவது:கேரள பல்கலையின் தமிழ்த்துறை சார்பில் கருத்தரங்கம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக சில மாணவர்கள் வாயிலாக எனக்கு தகவல் கிடைத்தது. கருத்தரங்கின் உள்ளடக்கம் குறித்து விசாரித்தபோது அதிர்ச்சியூட்டும் தகவல் தெரியவந்தது.அதாவது, பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் மத்திய அரசால் திட்டமிட்டு நடத்தப்பட்டதாகவும், பீஹார் தேர்தலில் வெற்றி பெறவே பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., அரசு இதை நிகழ்த்தியதாகவும் கருத்தரங்கில் பேசப்பட இருந்தது தெரியவந்தது. மேலும், பாகிஸ்தானுக்கு எதிரான போர், தேர்தல் வெற்றியை மனதில் வைத்தே திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டதாகவும் அந்த கருத்தரங்கில் விவாதிக்கப்பட இருந்தது.பல்கலை பதிவாளரிடம் கூறி இந்த கருத்தரங்கு உடனடியாக தடுத்து நிறுத்தப்பட்டுஉள்ளது. தேச விரோத கருத்தை பேசும் கருத்தரங்கிற்கு அனுமதி அளித்த சம்பந்தப்பட்ட துறையின் தலைவரிடம் விளக்கம் கேட்கப்பட்டு உள்ளது. இந்த விவகாரம் குறித்து பல்கலை வேந்தரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. துறைத்தலைவரிடம் இருந்து விளக்கம் பெறப்பட்டதும் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

மூர்க்கன்
மே 15, 2025 16:28

பிரிவினைவாதம் தவேறென்பார் ஆனால் தமிழ் நாட்டை கூறு போட வேண்டுமாம். பெயரோ தமிழ் வேள் ?? பேசுவதெல்லாம் எதிர்மறை?? தேசப்பற்று பற்றி பாடமெடுப்பார் தேசத்திற்கு உயிர் துறந்த வீரர்களை ராணுவ ஜெனரல் நரவனே அவர்கள் உட்பட அவர்களின் குடும்பத்தினரை ஏன் பாதுகாப்பு செயலர் மிஸ்திரி அவரின் குடும்பத்தினரை வசை பாடுவர் ?? இதெல்லாம் என்ன மாதிரி?? தேசப்பற்று ?? தேச மக்கள் நலன் பற்றி பாடம் எடுப்பார் ஆனால் இந்த தேசத்தின் இருபது கோடி இஸ்லாமியர்களை கருவறுக்க வேண்டுமென்பார்?? இதையெல்லாம் இந்த பழைய கல், புதிய தேசிய இதழ் அனுமதிக்கிறது?? ஒன்றுமே புரியவில்லை ? மிக சரியாக நேர்மையாக வைக்கப்படும் கேள்விகளை கூட வெட்டி வீசி விடுகிறார்கள். இவர்கள் ஜனநாயகம் கருத்து சுதந்திரம் பற்றியெல்லாம் பாடம் எடுப்பது கவலை அளிக்க கூடியது.


thewhistle blower1967
மே 15, 2025 06:48

இந்த நாட்டில் உண்மை பேச கருத்து சுதந்திரம் சங்கிகள் அரசில் எங்கே உள்ளது? ஜால்றா தட்டும் சினிமா ஸ்டைல் நேஷனல் சங்கி ஊடகத்திற்கு மட்டும் தான் முழு சுதந்திரம்.. வெகு விரைவில் இதற்க்கு ஒரு முடிவு வரும் ..


Velusamy Dhanaraju
மே 14, 2025 20:02

கருத்தரங்கில் கலந்து கொள்ள யாரெல்லாம் வர இருந்தார்கள் என விசாரிக்க வேண்டும். அவர்களைப் பற்றி விசாரிக்க வேண்டும்


Tetra
மே 14, 2025 19:24

தமிழ் மக்கள் தேசப்பற்றுடன் இருந்த காலம் போய் ப்ரியாணி பற்றுடன் தேச விரோதிகளாகி போனது வேதனை. உண்மையான தமிழர்கள் இதையெல்லாம்‌ எதிர்க்க வேண்டும்.


E. Mariappan
மே 14, 2025 14:53

நாட்டின் ராணுவ வீரர்களை அவர்களின் தியாகத்தை மதித்து நடக்க வேண்டும்


Saai Sundharamurthy AVK
மே 14, 2025 10:05

தேசத்திற்கு எதிரான கோஷ்டி ஒன்று மதுரையை தலைமையிடமாக வைத்து செயல்படுவதாக தெரிகிறது. பிரிவினைவாதம், தீவிரவாதம், கம்முனிசம், திராவிடம் போன்ற கூட்டுக் கலவை கோஷ்டிகள் இங்கு இருப்பதாகத் தெரிகிறது. NIA மதுரையில் ஒரு கண் வைக்க வேண்டும்.


KRISHNA
மே 14, 2025 09:42

இதற்கு அனுமதி அளித்த அவனை NIA விசாரிக்க வேண்டும். ஜெய் ஹிந்த்.


தமிழ்வேள்
மே 14, 2025 09:26

திராவிட கருத்தியல் ராமசாமி அண்ணா துரை கருணாநிதி எண்ணங்கள் எழுத்துக்கள் சிந்தனைகள் அனைத்தும் தேச விரோத சமூக விரோத ஒழுக்கம் அற்றவைகளே..இவற்றை இவற்றின் வாசிப்பு பேச்சு பரப்புரை ஆகிய அனைத்தையும் சட்டப்படி தடை செய்வது மட்டுமே இன்றைய சூழலில் தமிழகத்துக்கு பாதுகாப்பு....இல்லையேல் இந்திய தமிழகமும் முள்ளி வாய்க்கால் நந்தி கடலேரி சம்பவங்களை எதிர் கொள்வதை தவிர்க்க இயலாது... தற்போதைய தமிழகம் தேசவிரோத சிந்தனை செயல்களின் பட்டையாக மாறியுள்ளது.... குறைந்த பட்சம் ஒரு பத்து ஆண்டுகளுக்கு ராஷ்டிரபதி ஆட்சியும், தமிழகம் மூன்று மாநிலங்களாகவும் சென்னை தனி யூனியன் பிரதேசம் ஆகவும் பிரிக்கப்படுதல் ஆகியன மட்டுமே இந்த மாநிலத்தை தேசிய நீரோட்டத்தில் வைத்திருக்கும்..


Saai Sundharamurthy AVK
மே 14, 2025 09:16

இந்த மாதிரி மொள்ளமாறி வேலைகளையெல்லாம் இங்கிருக்கும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தான் செய்யும். இந்த கருத்தரங்கை ஏற்பாடு செய்திருக்கிறது. இவர்களை NIA கைது செய்து விசாரிக்க வேண்டும்.


Dharmavaan
மே 14, 2025 08:40

இதை ஏற்பாடு செய்தவன் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும்


சமீபத்திய செய்தி