உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கபில் சிபல் கருத்துக்கு துணை ஜனாதிபதி கண்டனம்

கபில் சிபல் கருத்துக்கு துணை ஜனாதிபதி கண்டனம்

புதுடில்லி : மேற்கு வங்கத்தில் பெண் பயிற்சி டாக்டர் கொலை வழக்கு குறித்து உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவராக உள்ள மூத்த வழக்கறிஞரும், எம்.பி.,யுமான கபில் சிபல் தெரிவித்த கருத்துக்கு துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில் உள்ள கே.ஜி. கர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் பெண் பயிற்சி டாக்டர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரித்து வரும் நிலையில், இதுதொடர்பான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடக்கிறது. இதில், மேற்கு வங்க அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜரானார். உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவராக இருக்கும் அவர், இதுபோன்ற வழக்குகளில் ஆஜரானதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கு பதிலளிக்கும் வகையில் கபில் சிபல் வெளியிட்ட அறிக்கையில், கோல்கட்டா ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லுாரியில் நடந்த பலாத்கார சம்பவம் பெரிய நோய் என்றும், இது போன்ற சம்பவங்கள் சாதாரணமாக நடக்ககூடியது என்றும் குறிப்பிட்டார். இதற்கு உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஆதிஷ் அகர்வால் கண்டனம் தெரிவித்ததுடன், கபில் சிபல் மன்னிப்பு கோர வேண்டும் எனவும் கூறியிருந்தார்.இதற்கிடையே, டில்லி பாரதி கல்லுாரியில் நடந்த விழாவில் பேசிய துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கரும், கபில் சிபலின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அப்போது அவர் கூறுகையில், “உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவராகவும், எம்.பி.,யாகவும் உள்ள நபர், பெண்களுக்கு எதிரான வன்முறை செயலை இவ்வாறு விமர்சித்தது மிகவும் வேதனையை தருகிறது. இதுபோன்ற சம்பவங்களை எவ்வாறு சர்வ சாதாரணமானவை என்று அவரால் கூற முடியும்? அத்தகைய அவரது நிலைப்பாட்டை கண்டிக்க என்னிடம் வார்த்தைகளே இல்லை. இதுபோன்ற பேச்சு, அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

sai amruth
ஆக 31, 2024 21:45

வெட்கப்படவேண்டாமா அவர் வீட்டில் நடந்திருந்தால் இப்பொழுது செய்யும் இதே வேலையை செய்திருப்பாரா கபில்சிபல்.


Prabhakaran M
ஆக 31, 2024 15:41

மனசாட்சி இல்லாத மனிதர் இவர்


rsudarsan lic
ஆக 31, 2024 12:24

இது contempt of கோர்ட் ஆகாதா? கோர்ட்டில் பேசியதை நீதி அரசர்கள் கேட்டு சும்மா இருக்கிறார்கள்


R SRINIVASAN
ஆக 31, 2024 11:01

அமெரிக்காவில் தொழில் நடத்தி வரும் ஒரு பாகிஸ்தானிய தொழிலதிபர் ராகுல் காந்தி இந்தியாவுக்கு எதிராக செயல்படுகிறார் என்று சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். சோனியா காந்தி ,பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி ,கபில் சிபல்,மணி சங்கர், மல்லிகார்ஜுன கார்கே போன்றவர்கள் இதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள்.ஜம்மு காஷ்மீரில் ஆட்சியை பிடிப்பதற்காக பாரூக் அப்துல்லாவுடன் கை கோர்த்தத்திலிருந்தே இவர்கள் லட்சணம் தெரியவில்லையா.


theruvasagan
ஆக 31, 2024 09:37

இப்படி பேசியே கான்கிராசுக்கு. எதுவா இருந்தாலும் சட்டுபுட்டுன்னு சோலிய முடிங்க.


AMLA ASOKAN
ஆக 31, 2024 09:09

இன்றைய இந்தியாவில் ஒரு கொலையையோ அல்லது ஒரு பெண்ணை கற்பழித்தாலோ அதற்கு 100 நேரடியாக பார்த்த சாட்சிகளாக இருந்தாலும் நீதிமன்றத்தில் அவனுக்கு அரசியல் பின்புலம் இருந்தால் அல்லது திறமையான வக்கீல் இருந்தால் அவன் தப்பித்தும் விடலாம் அல்லது 5 வருடங்கள் கழித்து தண்டனை பெறுவான் . இத்தகு சூழலில் 10 வயது முதல் 70 வயது வரை உள்ள வக்கிர புத்தி & காம வெறிகொண்ட ஒரு ஆண் தனக்கு சாதகமான சூழ்நிலை கிடைத்தால் தனது மிருக பசியை போக்கிக்கொள்கிறான் என்பது யதார்த்தம் . இது தான் கல்கத்தாவில் ஒரு தனி நபரால் நடந்தது. இந்தியா முழுவதிலும் ஒரு நாளைக்கு 100 கற்பழிப்புகள் சர்வ சாதாரணமாக நடைபெறுகின்றன. இத்தகு குற்றங்களுக்கு அரபு நாடுகளை போன்று உடனடி தூக்கு தண்டனை அளித்தால் தான் இதை குறைக்கவோ நிறுத்தவோ முடியும் . அரசியல் தலையீடு செய்தவர்களுக்கும் தண்டனை அளிக்க வேண்டும் . மாறாக TV விவாதமாக , அரசியல் விமர்சனமாக , சொந்த கருத்துக்களை பகிர்வதன் மூலம் இவர்களுக்கு நல்ல விளம்பரம் தான் கிடைக்கும் . கற்பிழந்த பெண்ணுக்கோ மக்களுக்கோ நீதி கிடைக்க வாய்ப்பில்லை .


A Viswanathan
ஆக 31, 2024 08:01

இவரை ராஜ்ய சபா எம்பியாக தேர்ந்தெடுத்த கட்சியை தான் குறை கூற வேண்டும்.அவர் குடும்பத்திலுள்ளவர்களுக்கு இதே மாதிரியான சம்பவம் ஏற்பட்டால் தான் அவருக்கு அந்த வலி தெரியும் .


அப்பாவி
ஆக 31, 2024 07:56

அவங்ஜ்ச்வங்க லெவலுக்கு கண்டனம் தெரிவிப்பதோட சரி. குற்றவாளியை புடிப்போம். விசாரிச்சு தூக்கில் போடுவோம்னு ஒருத்தனுக்கும் அக்கறையில்லை. இந்தியா எப்புடி உருப்படும்?


Dharmavaan
ஆக 31, 2024 07:44

தைரியமான துணை ஜனாதிபதி...


GMM
ஆக 31, 2024 07:30

பலாத்கார சம்பவம் பெரிய நோயாம். மனோதத்துவ காங்கிரஸ் கபில் டாக்டர் கண்டுபிடிப்பு. நோய் தனி நபர் பழக வழக்கம் சரியில்லாமல் இருந்தால் வரும்? கபில் கொடூர சிந்தனை. இறந்த டாக்டர் கொடூரமாக சிதைக்கப்பட்டு கொலை? மனம் பதறவில்லை. இனி கபில் போன்ற வழக்கறிஞர்களுக்கு மருத்துவம் பார்க்க டாக்டருக்கு மனம் வருமா? அரசியல் குற்றவாளிகளை நீதிமன்றத்தில் தண்டிக்க முடியாது? ஓட்டை தன் பாதுகாப்பு / தேச பாதுகாப்பு கருதி மக்கள் செலுத்த வேண்டும். மீண்டும் அடிமைப்படுத்தி விடும் அந்நிய ஆதரவு அரசியல் கட்சிகள் அதிகரித்து வருகின்றன.


சமீபத்திய செய்தி